கூகுள் தேஜ் செயலியை பயன்படுத்துவது எப்படி?(அம்சங்கள்).
தேஜ் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்தபின்பு மொழியை தேர்வு செய்ய வேண்டும். தமிழ் உட்பட எட்டு இந்திய மொழிகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யூபிஐ அடிப்படையில் கூகுள் தேஜ் என்ற பேமெண்ட் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேஜ் என்றால் இந்தியில் ஃபாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தேஜ் செயலி மூலம் நண்பர்கள், உறிவினரகளுக்கு மிக எளிமையாக பணம் அனுப்ப முடியும். இந்த தேஜ் செயலி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

தேஜ் ஆப்:
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் இந்த தேஜ் ஆப்-ஐ பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும்.

மொழி:
தேஜ் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்தபின்பு மொழியை தேர்வு செய்ய வேண்டும். தமிழ் உட்பட எட்டுஇந்திய மொழிகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.

மொபைல் எண்:
அடுத்து வங்கியில் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணை இந்த தேஜ் செயலியில் பயன்படுத்த வேண்டும். பின்பு இந்த செயலியைஎளிமையாக பயன்படுத்த வேண்டும்.

பின் நம்பர்:
ந்த தேஜ் செயலியில் நீங்கள் விரும்பிய பின் நம்பர், ஸ்கீரின் லாக் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

வங்கி கணக்கு:
யுபிஐ உதவியுடன் வங்கி கணக்கை இந்த தேஜ் செயலியில் இணைக்க வேண்டும், உங்கள் வங்கி கணக்குடன் இணைந்து தேஜ் செயலி இயங்குவதால் பாதுகாப்பான பரிவர்த்தனை அளிக்கப்படும்.

கேஷ் மோட்:
இந்த செயலியில் 'கேஷ் மோட்" என்ற வசதியைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் எண் போன்ற எந்த ஒரு தனிநபர்விவரங்களையும் பகிராமல் அருகில் உள்ள நபர்களுக்குப் பணம் அனுப்ப முடியும்.

சலுகைகள்:
இந்த தேஜ் செயலியில் ஸ்காட்ச் கார்டு வழியாகச் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1,000 ரூபாய் வரை பணத்தினை வெல்ல முடியும் ஞயிற்றுக் கிழமைகள் என்றால் 1 லட்சம் ரூபாய் வரை வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.

55 வங்கிகள்:
இந்த தேஜ் செயலி பயன்பாட்டில் இந்தியாவில் உள்ள 55 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன, எனவே அனைத்து இடங்களிலும் மிகஎளிமையாக பயன்படும் இந்த தேஜ் செயலி


Click it and Unblock the Notifications