சைலன்ட் ஆக Google பார்த்த வேலை; இந்தியாவிற்கு வந்தது Street View; யூஸ் செய்வது எப்படி?

|

பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்கிற ஆட்சேபனைகளை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த முழு அளவிலான வெளியீடிற்கான அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் (ஒருவழியாக) கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ (Google Maps Street View) அம்சம் இந்தியாவின் 10 நகரங்களுக்கு திரும்பி உள்ளது.

இப்போது எந்த நம்பிக்கையில் மீண்டும் வந்துள்ளது?

இப்போது எந்த நம்பிக்கையில் மீண்டும் வந்துள்ளது?

அந்த பத்து நகரங்களில் தமிழ் நாட்டை சேர்ந்த மாவட்டம் ஏதேனும் உள்ளதா? கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ என்றால் என்ன? ஆரம்பத்தில் அதற்கான அனுமதி ஏன் மறுக்கப்பட்டது?

தற்போது எந்த நம்பிக்கையில் இது மீண்டும் இந்தியாவிற்கு வந்து உள்ளது? கூகுள் மேப்ஸில் அணுக கிடைக்கும் ஸ்ட்ரீட் வியூ-வை பயன்படுத்துவது எப்படி? இப்படி பல கேள்விகளுக்கான பதில்கள் இதோ!

இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

முதலில் 10 நகரங்கள்.. பின்னர் படிப்படியாக 50 நகரங்கள்!

முதலில் 10 நகரங்கள்.. பின்னர் படிப்படியாக 50 நகரங்கள்!

புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜெனிசிஸ் (Genesys) மற்றும் டெக் மஹிந்திராவுடன் (Tech Mahindra) இணைந்து ஸ்ட்ரீட் வியூவை இந்தியாவிற்கு கொண்டு வருவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

முதல் கட்டமாக, இந்த ஸ்ட்ரீட் வியூ அம்சமானது 10 இந்திய நகரங்களில் அணுக கிடைக்கும். இதற்காக சுமார் 150,000 கிலோமீட்டர் சாலைகளின் - மில்லியன் கணக்கான - 360 டிகிரி பனோரமிக் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ அம்சமானது - மெல்ல மெல்ல - இந்த ஆண்டு இறுதிக்குள் 50 இந்திய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்கிற இலக்கையும் கூகுள் நிர்ணயித்துள்ளது.

கூகுளின் இந்த ப்ராஜெக்டில் டெக் மஹிந்திராவிற்கு என்ன வேலை?

கூகுளின் இந்த ப்ராஜெக்டில் டெக் மஹிந்திராவிற்கு என்ன வேலை?

கூகுள் நிறுவனத்தின் இந்த ஸ்ட்ரீட் வியூ அம்சத்திற்கு டெக் மஹிந்திரா (Tech Mahindra) உதவி செய்ய உள்ளது. என்ன மாதிரியான உதவி என்றால், இந்தியாவின் மிகவும் நெரிசலான இடங்களை / சாலைகளை புகைப்படங்கள் எடுக்க, கூகுள் ஸ்ட்ரீட் வியூ கேமராக்கள் பொருத்தப்பட்ட மஹிந்திரா எஸ்யூவிக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அறியதோர்களுக்கு ஒவ்வொரு தெருக்களையும், சுற்றுலாத் தலங்களையும், மலைகள் மற்றும் ஆறுகளையும் 360 டிகிரி கோணத்தில் - உயர் தரத்தில் - புகைப்படங்கள் எடுத்து அதன் வழியாகவே கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ உருவாக்கப்படுகின்றன.

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

சந்து பொந்து விடாமல் போட்டோ எடுத்த கூகுள், கடுப்பான உலக நாடுகள்!

சந்து பொந்து விடாமல் போட்டோ எடுத்த கூகுள், கடுப்பான உலக நாடுகள்!

ஒவ்வொரு தெருக்களையும் "இன்ச் இன்ச் ஆக" புகைப்படங்கள் எடுப்பது, பாதுகாப்பு தொடர்பான சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிற கவலையின் / அச்சத்தின் கீழ் தான் கூகுள் மேப்ஸின் ஸ்ட்ரீட் வியூ-வை இந்தியா புறக்கணித்தது; அனுமதி வழங்க மறுத்தது.

இந்தியா மட்டுமின்றி கூகுளின் இந்த "டேட்டா சேகரிப்பு" பல நாடுகளையும் கவலையில் ஆழ்த்தியது. ஆனால் இப்போது "விஷயங்கள்" மாறிவிட்டன; நாட்டிற்குள் கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ நுழைந்தே விட்டது.

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவிற்குள் வந்துள்ளது?

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவிற்குள் வந்துள்ளது?

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆனது எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது இந்தியாவிற்குள் வந்துள்ளது என்கிற கேள்விக்குன் சரியான பதில்கள் எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்; ஆனால் கூகுள் நிறுவனம் இந்தியாவின் புதிய தேசிய புவியியல் கொள்கை 2021-ஐ (National Geospatial Policy, 2021) சுட்டிக்காட்டுகிறது.

Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் "இது" கட்டாயம் தெரிஞ்சு இருக்கனும்! என்னது அது?

Google Street View அணுக கிடைக்கும்

Google Street View அணுக கிடைக்கும் "அந்த" 10 இந்திய நகரங்களின் பட்டியல் இதோ!

- பெங்களூரு
- சென்னை
- டெல்லி
- மும்பை
- ஹைதராபாத்
- புனே
- நாசிக்
- வதோதரா
- அகமதுநகர்
- அமிர்தசரஸ்

மேற்குறிப்பிட்ட நகரங்களில் - இன்று முதல் - ஸ்ட்ரீட் வியூ அம்சம் அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ-வை பயன்படுத்துவது எப்படி?

கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ-வை பயன்படுத்துவது எப்படி?

- உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில் உள்ள Google Maps ஆப்பை திறக்கவும்.

- பிறகு ஒரு இடத்தை Search செய்யவும் அல்லது மேப்பில் ஒரு Pin-ஐ டிராப் செய்யவும்.

(ஒரு பின்-ஐ ட்ராப் செய்ய, மேப்ஸில் உங்களுக்கு தேவையான ஒரு இடத்தை 'டச்' செய்து அதை 'ஹோல்ட்' செய்யவும்)

- இப்போது குறிப்பிட்ட இடத்தின் பெயர் அல்லது முகவரி கீழே தோன்றும், அதை 'டேப்' செய்யவும்.

- இப்போது ஸ்க்ரோல் செய்து "Street View" என்று 'லேபிளிடப்பட்ட' புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும் அல்லது Street View Icon-ஐ கொண்ட Thumbnail-ஐயும் தேர்வு செய்யவும்.

- பின்னர், மேல் இடதுபுறத்தில் உள்ள Back என்பதை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா "இதை" பண்ணுங்க! இல்லனா?

ஸ்ட்ரீட் வியூ லேயரை (Street View Layer) எப்படி பயன்படுத்துவது?

ஸ்ட்ரீட் வியூ லேயரை (Street View Layer) எப்படி பயன்படுத்துவது?

- உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது டேப்லெட்டில் உள்ள Google Maps ஆப்பை திறக்கவும்.

- பின்னர் மேலே காணப்படும் Layers என்பதை கிளிக் செய்யவும், பின்னர் Street View என்பதை டேப் செய்யவும்.

- பிறகு மேப்ஸில், நீலக்கோடுகள் காட்சிப்படும்; அது ஸ்ட்ரீட் வியூ கவரேஜை குறிக்கின்றன. அதில் ஏதேனும் ஒரு நீலக் கோட்டை 'டேப்' செய்யவும், நீங்கள் ஸ்ட்ரீட் வியூவிற்குள் நுழைவீர்கள்; அவ்வளவு தான்!

Photo Courtesy: Google

Best Mobiles in India

English summary
Google Street View in Maps Now Available in 10 Indian Cities including Chennai Here is How to Use

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X