Just In
- 5 min ago
பேய் மாதிரி வேலை செஞ்சிருக்கும் Samsung: இதோ Galaxy Z Fold 4-இன் Quick Review!
- 9 min ago
ரூ.25,000-க்குள் கிடைக்கும் பெஸ்ட் டேப்லெட் மாடல்கள்: இதோ பட்டியல்.!
- 10 min ago
இந்தியாவில் தடை செய்யப்பட்ட VLC Media Player: ஹேக்கிங் குழு லீலை- சைபர் தாக்குதல் காரணமா?
- 57 min ago
Airtel vs Jio vs Vi: ரூ.200 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.!
Don't Miss
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Sports
"எனக்கு ரொம்ப சந்தோஷம்பா" ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து புறக்கணிப்பு..மனம் திறந்த இஷான் கிஷான்
- News
'யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி ஓடும் நீர்'.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.. மீட்பு பணி தீவிரம்!
- Movies
நெப்போடிசம் சர்ச்சை.. ஓப்பனா பதில் சொன்ன அதிதி ஷங்கர்.. இப்படி பேசினா பொழச்சிப்பம்மா!
- Lifestyle
இந்த 5 ராசி பெண்கள் அனைவரையும் விட வலிமையானவர்களாம்... இவர்கள் ஆளப்பிறந்தவர்களாம்...!
- Finance
இந்த ஆண்டும் வருமான வரிவிதிப்பில் தளர்வு.... நிதியமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!
- Automobiles
2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், மைசூர் மகாராஜாவின் பழைய கார் என குற்றாலத்தைக் கலக்கிய வின்டேஜ் கார்கள்
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
கீபோர்ட்ல இந்த ஷார்ட்கட்ஸ் கூட தெரியலனா.. ஆபீஸ்ல ரொம்ப அசிங்கமா போயிடும்!
"இது கூடவா தெரியாது.. எத்தனை வருஷமா வேலை பாக்குறீங்க?" என்பது மிகவும் தர்மசங்கடமான ஒரு கேள்வி ஆகும். நம்மில் பலரும் ஒருமுறையாவது இந்த கேள்வியை "சந்தித்து" இருப்போம்.
சிலர் பலமுறை அசிங்கப்பட்டு இருப்பார்கள். குறிப்பாக, மிகவும் எளிமையான கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் கூட தெரியாமல் அடிக்கடி சிக்குவார்கள்; "ராக்கெட் சயின்ஸ் பற்றி தெரியவில்லை என்றால் பராவாயில்லை, ஒரு சின்ன கீபோர்ட் ஷார்ட்கட் கூடவா தெரியாது?" என்று தினமும் திட்டு வாங்குபவர்களாக இருப்பார்கள்!

உண்மையை சொல்லுங்கள்... உங்களுக்கு தெரியுமா?
ஒருவேளை உண்மையிலேயே உங்களுக்கும் பெரும்பாலான கீபோர்ட் ஷார்ட்கட்கள் தெரியாது என்றால்.. "அதெல்லாம் கற்றுக்கொள்ளாமல் எப்படியோ இத்தனை நாட்கள் வண்டி ஒட்டிவிட்டேன்.. இப்போதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வந்து இருக்கிறது" என்றால்.. வாங்க.. வாங்க! நேரத்தை வீணடிக்காமல் உடனே ஆரம்பிக்கலாம்!
கட், காப்பி, பேஸ்ட் (Cut, Copy,Paste) போன்ற எளிமையான ஷார்ட்கட்களில் இருந்து தொடங்கினால்.. நீங்களே கடுப்பாகி விடுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும்.
ஆகையால், நம்மில் பலரும் - பெர்சனலாக அல்லது ஆபீஸ் வேலைக்காக - அனுதினமும் பயன்படுத்தும் கூகுள் ஷீட்ஸில் (Google Sheets) இருந்து 14 முக்கியமான ஷார்ட்கட்களை பற்றி பார்ப்போம்!
இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

14. Hyperlink ஐ Open செய்வது எப்படி?
Alt + Enter என்கிற ஷார்ட்கட் கீயை பயன்படுத்தி உங்கள் Google Sheets இல் உள்ள ஹைப்பர்லிங்க்களை எளிமையாக ஓப்பன் செய்யலாம்.

13. மேலே அல்லது கீழே ஒரு Row-வை Insert செய்வது எப்படி?
எந்தவொரு Cell-க்கு மேலேயோ அல்லது கீழேயோ ஒரு Row-வை Insert செய்ய முறையே Alt + I + R மற்றும் Alt + I + W என்கிற ஷார்ட்கட்டை அழுத்தவும். இப்படி செய்ய கூகுள் ஷீட்ஸில், நீங்கள் விரும்பும் செல்லுக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஒரு 'ரோ' சேர்க்கப்படும்.

12. முழு Row-வையும் Select செய்வது எப்படி?
நீங்கள் ஒரு முழு ரோ-வையுமே தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்றால். அந்த Row-வில் உள்ள ஒவ்வொரு செல்லையும் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கவும், பின்னர் Shift + Spacebar என்கிற ஷார்ட்கட்டை அழுத்தவும்.
Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் "இது" கட்டாயம் தெரிஞ்சு இருக்கனும்! என்னது அது?

11. Values-ஐ மட்டும் Paste செய்வது எப்படி?
உண்மைதான்! நீங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட Value-வையும் காப்பி செய்து அதை பேஸ்ட் செய்யாமல், அனைத்து வேல்யூகளையும் ஒரே செல்லில் பேஸ்ட் செய்யலாம். அதற்கு நீங்கள் வேல்யூக்களை பேஸ்ட் செய்ய விரும்பும் செல்-ஐ தேர்ந்தெடுத்து, பின்னர் Ctrl + Shift + V என்கிற ஷார்ட்கட்டை அழுத்தவும்.

10. New Sheet-ஐ Add செய்வது எப்படி?
Shift + F11 என்கிற ஷார்ட்கட்டை அழுத்துவதன் மூலம், நீங்கள் புதிய ஷீட்டை கண் இமைக்கும் நேரத்தில் 'ஆட்' செய்யலாம்.

09. Link-ஐ Insert செய்வது எப்படி?
உங்கள் கூகுள் ஷீட்ஸில் 'லிங்க்' ஒன்றை சேர்க்க, Ctrl + K என்கிற ஷார்ட்கட்டை அழுத்தவும்.
Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா "இதை" பண்ணுங்க! இல்லனா?

08. அனைத்து Formatting-ஐயும் Clear செய்வது எப்படி?
Ctrl + என்கிற ஷார்ட்கட்டை பயன்படுத்த, ஒரு செல்லில் உள்ள அனைத்து Formatting-ஐயும் நீக்கலாம்.

07. Next Sheet க்கு Move ஆவது எப்படி?
Ctrl + Shift + Page Down என்கிற ஷார்ட்கட்டை அழுத்த, நீங்கள் அடுத்த ஷீட்டிற்கு மிகவும் விரைவாக செல்ல முடியும்.

06. Previous Sheet க்கு செல்வது எப்படி?
Ctrl + Shift + Page Up என்கிற ஷார்ட்கட்டை அழுத்துவதன் மூலம், உங்களால் முந்தைய ஷீட்டிற்கு விரைவாக நகர முடியும்.

05. எல்லா Formula-க்களையும் காண்பது எப்படி?
இதற்கு வெறுமனே நீங்கள் Ctrl ஐ அழுத்தினால் போதும். குறிப்பிட்ட செல்லில் உள்ள ஒவ்வொரு ஃபார்முலாவையும் பார்க்கலாம்.

04. Fill Down செய்வது எப்படி?
Ctrl + D என்கிற ஷார்ட்கட்டை அழுத்தினால் கீழே உள்ள Cell-ஐ உங்களால் Fill செய்ய முடியும்.
யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் "இதை" மறைக்க முடியும்னு!

03. Fill Right செய்வது எப்படி?
Ctrl + R என்கிற ஷார்ட்கட்டை பயன்படுத்தும் போது, வலது பக்கத்தில் உள்ள Cell-இல் டேட்டாவை Fill செய்ய முடியும்.

02. Row-வை Delete செய்வது எப்படி?
நீங்கள் ஒரு Row-வை டெலிட் செய்ய வேண்டும் என்றால்.. அதில் உள்ள ஒவ்வொரு செல்களையும் தேர்ந்தெடுத்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறுமனே Ctrl + Alt + - என்கிற ஷார்ட்கட்டை அழுத்தினால் போதும்.

01. Last Action-ஐ Repeat செய்வது எப்படி?
நீங்கள் கூகுள் ஷீட்ஸில் செய்த லாஸ்ட் ஆக்ஷனை மீண்டும் செய்ய விரும்பினால், வெறுமனே F4 கீ-ஐ அழுத்தவும்; அவ்வளவு தான்!
Photo Courtesy: Google
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086