Home
How to

EMI இல் புது போன் வாங்குவதில் புதிய மாற்றம்.. Google அசத்தல்.. 9 மாசம் முடிஞ்சதும்?

கூகுள் (Google) நிறுவனமானது இந்தியாவில் தனது பிக்சல் அப்கிரேட் புரோகிராமை (Pixel Upgrade Program) அறிவித்துள்ளது. இது ஒரு புதிய ஓனர்ஷிப் புரோகிராம் ஆகும். இதன்கீழ் பெரிய அளவிலான முன்பணத்தை செலுத்தும் தொந்தரவு இல்லாமல் பயனர்களால் - பிக்சல் 10 சீரீஸ் உட்பட கூகுளின் லேட்டஸ்ட் பிக்சல் போன்களை வாங்க முடியும்.

முன்பணத்திற்கு பதிலாக, பயனர்கள் தேர்வு செய்யும் பிக்சல் ஸ்மார்ட்போனின் விலை - நிலையான மாதாந்திர தவணைகளாக பிரிக்கப்படும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பிக்சல் 10 (Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) அல்லது பிக்சல் 10 ப்ரோ போல்ட் (Pixel 10 Pro Fold) உள்ளிட்ட தகுதியான பிக்சல் மாடல்களில் ஒன்றை தேர்வுசெய்யவும்.

EMI இல் புது போன் வாங்குவதில் புதிய புரட்சி.. Google அசத்தல்!

அதை வாங்க உங்களுக்கு அருகிலுள்ள பார்ட்னர் ரீடெயில் ஸ்டோருக்கு செல்லவும். 24 மாத நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்தின் கீழ் பிக்சல் ஸ்மார்ட்போனை வாங்கவும். குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை வாங்கிய 30 நாட்களுக்குள் கேஷிஃபை (Cashify) இணையதளத்தில் பிக்சல் அப்கிரேட் திட்டத்தில் சேரவும்.

பதிவுசெய்தவுடன், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ஒன்பது இஎம்ஐ-களுக்கு பிறகு அல்லது பதினைந்து இஎம்ஐ-களை முடிப்பதற்கு முன்பு புதிய மற்றும் தகுதியான பிக்சல் ஸ்மார்ட்போனுக்கு அப்கிரேட் ஆகும் விருப்பம் கிடைக்கும். மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் அப்கிரேட் புரோகிராம் பயன்படுத்தப்பட்டால், அசல் இஎம்ஐ கடனின் மீதமுள்ள இருப்புக்கு சமமான தொகையை கேஷிஃபை வாங்குபவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கும்.

இது, முன்கூட்டியே கடன் வாங்கும் கட்டணங்கள் இல்லாமல் ஏற்கனவே உள்ள கடனை முடிக்க உதவுகிறது என்று கூகுள் கூறுகிறது. மேலும், புதிதாக வாங்கிய பிக்சல் ஸ்மார்ட்போனிற்கு புதிய 24 மாத நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்திற்கு தானாகவே மாற்றப்படும். இந்த பிக்சல் அப்கிரேட் திட்டம், மாதத்திற்கு ரூ. 3,333 முதல் தொடங்கும் கட்டணமில்லா மாதாந்திர இஎம்ஐ திட்டங்கள் மூலம் பிக்சல் ஓனர்ஷிப்பை எளிதாக்குகிறது.

பஜாஜ் ஃபைனான்ஸ் அல்லது எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகள் போன்ற கூட்டாளர்கள் மூலம் வாங்கப்பட்ட தகுதியான பிக்சல் 10 சீரீஸ் மாடல்கள் ஆனது 24 மாத கட்டணமில்லா இஎம்ஐ திட்டத்திற்கு தகுதி பெறுகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வாங்குபவர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது கேஷிஃபை மூலம் ரூ.7,000 வரை எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்: கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் கலர்களில் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய 2 மாடல்களின் அதே 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

இவ்விரு மாடல்களும் ஜேட், மூன்ஸ்டோன் மற்றும் அப்சிடியன் கலர்களில் வாங்க கிடைக்கும் பிக்சல் 10 ப்ரோ மாடல் ஆனது கூடுதலாக போர்சலைன் வேரியண்டிலும் வருகிறது. இந்த அனைத்து கூகுள் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.

கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மூன்ஸ்டோன் மற்றும் ஜேட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel Upgrade Program Launched in India How it Works How to get Started
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X