Google Pay Tips: பணம் எடுத்துட்டாங்க ஆனா போகலயா?- முதலில் இதை செய்யுங்கள்!

|

Google Pay மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல்? பரிவர்த்தனை தோல்வியடைந்தது? அனுப்பிய பணம் பெற முடியவில்லை? போன்ற பல்வேறு இன்னல்களை டிஜிட்டல் பரிவர்த்தனையில் பயனர்கள் சந்திக்க நேரிட்டிருக்கும். இதற்கான தீர்வுகளை பார்க்கலாம்.

பிரதான பயன்பாடாக வளரும் டிஜிட்டல் பரிவர்த்தனை

பிரதான பயன்பாடாக வளரும் டிஜிட்டல் பரிவர்த்தனை

டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாது பயன்பாடாக வளர்ந்து விட்டது. மக்கள் தங்களது பாக்கெட்டில் இருந்து பணத்தை செலுத்துவதை விட ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்த விரும்புகிறார்கள்.

கடைக்கு சென்று பொருள் வாங்கிய உடன் பர்ஸ் எடுக்கும் காலம் மறைந்து கொண்டே வருகிறது. அண்ணா., Scan போர்ட் எங்கே இருக்கிறது என்ற கேள்வியானது கடை, ஹோட்டல்களில் பொதுவான வார்த்தையாக மாறிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனையின் வளர்ச்சி என்பது அளப்பரியதாக இருக்கிறது.

தினசரி ரூ.20,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை

தினசரி ரூ.20,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை

அதாவது, தினசரி ரூ.20,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன எனவும் இது சேவைகளை மேம்படுத்தும் வகையிலும் திறந்த சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஒரு மாதத்தில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது எனவும் நாள்தோறும் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள்

பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பொறுத்தவரை Gpay என்பது மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கிறது. Gpay பயனர்கள் பொதுவாக சந்திக்கும் சிக்கல்கள் என்று பார்க்கையில், பரிவர்த்தனை தோல்வியடைந்தது? அனுப்பிய பணம் பெற முடியவில்லை? கணக்கில் இருந்து தொகை எடுக்கப்பட்டது ஆனால் பெறுநர் பெற முடியவில்லை? உள்ளிட்டவைகள் ஆகும்.

Gpay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பணம் செலுத்துவதற்கு முன்னதாக பொதுவாக சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

பணம் அனுப்ப முடியவில்லை என்றால் என்ன செய்வது?

பணம் அனுப்ப முடியவில்லை என்றால் என்ன செய்வது?

மோசமான இணையம், ஆப்ஸ் குறைபாடுகள், பெறுநர்கள் செய்யும் தவறுகள், ஆப்ஸ் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

Google Pay தளித்தில் பணம் அனுப்ப முடியவில்லை என்றால் பதற்றம் அடைய வேண்டாம். சில எளிய வழிமுறைகள் இருக்கிறது. இதை சரி செய்து கொள்ளுங்கள்.

அடிப்படை வழிமுறைகள்

அடிப்படை வழிமுறைகள்

1. அதிகளவிலான தொகை அனுப்புவதற்கு முன்பு முதலில் சிறிய தொகையை அனுப்பி பயன்பாட்டை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2. வாடிக்கையாக ஒருவருக்கு பணம் அனுப்பும் போது அவர்களின் ஐகான் உங்கள் Gpay கணக்கில் காட்டப்படும். அதை கிளிக் செய்து பணம் அனுப்பலாம். இதில் சிக்கல் இருக்கும் பட்சத்தில், New Payment என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, அவர்களது மொபைல் எண், UPI ஐடி உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை டைப் செய்து பணம் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

பொதுவாக செய்யும் தவறுகள்

3. பெறுநர் தனது வங்கிக் கணக்கை Google Pay உடன் இணைத்துள்ளாரா என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.

4. பலரும் செய்யும் பொதுவான தவறு இது. தினசரி அதிகளவில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பணம் அனுப்பும் பட்சத்தில், அவர்கள் பண பரிவர்த்தனை வரம்பு அடைந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சிக்கலை தீர்க்கும் பொதுவான வழிமுறைகள்:

சிக்கலை தீர்க்கும் பொதுவான வழிமுறைகள்:

Step 1: பணம் அனுப்பும் போது உங்கள் இணைய இணைப்பு நன்றாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 2: கணக்கில் பண இருப்பை சரிபார்த்துவிட்டு பிறகு பணத்தை அனுப்புங்கள். பெறுநர்கள் Gpay கணக்கு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 3: Gpay பயன்பாட்டை அவ்வப்போது புதுப்பித்து கொள்ளுங்கள். அதாவது ப்ளே ஸ்டோருக்கு சென்று Update இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள்.

Step 4: Gpay கணக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கை இணைக்கலாம். எனவே UPI பின் பதிவிடும் போது சரியான வங்கிக் கணக்குக்கான UPI எண்ணை தான் பதிவிட்டுள்ளீர்களா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

Step 5: உங்கள் பேமெண்ட் அக்கவுண்ட் காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இணைய இணைப்பை கவனித்துக் கொள்ளுங்கள்

Step 6: வைஃபையில் இருந்து மொபைல் டேட்டா என இணைய இணைப்பை பரிவர்த்தனையின் போது மாற்றம் செய்யாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

Step 7: உங்கள் பரிவர்த்தனை வரம்பை அடைந்துவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 8: QR குறியீட்டின் மூலம் பணம் அனுப்புவது என்பது எளிதான ஒரு செயல்.

Step 9: முழு Process முடியும் வரை காத்திருங்கள். UPI ஐடி பதிவிட்ட உடன் Back பட்டனை அழுத்தி விட வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Google Pay Not Working, Cash Deducted your account but not Send: What to Do?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X