Google Pay ஆப்பில் "ரகசியமாக" சேகரிக்கப்படும் பேமண்ட் விவரங்கள்.. டெலிட் செய்வது எப்படி?

|

உங்களுக்கு தெரியுமா? கூகுள் பே ஆப் வழியாக நீங்கள் செய்யும் பண பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் எல்லாமே கூகுள் பே ஆப்பின் பேக்கிரவுண்டில் சேமிக்கப்படுகிறது என்று? தெரியாது என்றால், இப்போதே தெரிந்து கொள்ளுங்கள். அதோடு சேரத்து Google Pay ஆப்பில் சேகரிக்கப்படும் பேமண்ட் விவரங்களை டெலிட் செய்வது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்!

மிகவும் பிரபலமான யுபிஐ (UPI) பேமண்ட் ஆப்களில் ஒன்றான ஜிபே (GPay) பற்றி, பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது. ஏனென்றால், இந்த ஆப் கிட்டத்தட்ட எல்லோருடைய ஸ்மார்ட்போன்களிலும் இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பண பரிவர்த்தனைகளை மிகவும் எளிமையாக்கி உள்ள இந்த ஆப், அதே பண பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களையும் சேமித்து வைக்க தவறுவதில்லை!

Google Pay-வில் சேகரிக்கப்படும் பேமண்ட் விவரங்களை டெலிட் செய்வதெப்படி?

அதாவது Google Pay அல்லது GPay வழியாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படுகிறது மற்றும் அது தொடர்பான விவரங்கள் சேமிக்கப்படுகிறது. நீங்கள் டீக்கடையில் பணம் செலுத்தினாலும் சரி, அல்லது உங்கள் நண்பருக்கு பணம் அனுப்பி இருந்தாலும் சரி, அல்லது உங்கள் மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்து இருந்தாலும் சரி - எல்லா விவரங்களும் சேமித்து வைக்கப்படுகிறது.

ஒருவேளை கூகுள் பே ஆப்பிற்குள் நடக்கும் உங்களுடைய பரிவர்த்தனைகள் மற்றும் உங்களுடைய பர்சேஸ்கள் (அதாவது நீங்கள் வாங்கிய பொருட்கள்) பற்றிய விவரங்களை Google சேமிப்பதில் அல்லது கண்காணிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், உங்களால் ஒன்றே ஒரு தான் செய்ய முடியும். அது என்னவென்றால் கூகுள் பே ஆப்பின் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை (Transaction history) டெலிட் செய்வதே ஆகும்!

ஆம்! கூகுள் பே ஆப்பிற்குள் நீங்கள் செய்யும் பண பரிவர்த்தனைகள் மற்றும் நீங்கள் வாங்கிய பொருட்கள் தொடர்பான டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை டெலிட் செய்யும் விருப்பம் உள்ளது. கூகுள் பே ஆப் வழியாக மற்றவர்களுடன் நீங்கள் நிகழ்த்திய உரையாடல்களை (Conversation) டெலிட் செய்தாலும் கூட, உங்களுக்குள் நடந்த டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியின் நகலை கூகுள் எப்போதும் வைத்து இருக்கும். அதைத்தான் நீங்கள் டெலிட் செய்ய வேண்டும்!

ஒருவேளை, கூகுள் பே ஆப்பில் உள்ள டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாது என்றால், கவலைப்பட வேண்டாம். முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பே ஆப்பை திறக்கவும். பிறகு ஹோம் ஸ்கீரினின் மேல் வலது மூலையில் உள்ள உங்களுடைய ப்ரொபைல் ஐகானை (Profile) கிளிக் செய்யவும். அதனை தொடர்ந்து செட்டிங்ஸ் (Settings) விருப்பத்திற்குள் நுழையவும்.

பின்னர் ப்ரைவஸி அண்ட் செக்யூரிட்டி (Privacy and Security) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். அதை தொடர்ந்து டேட்டா அண்ட் பெர்சனலைசேஷன் (Data and Personalisation) என்கிற டேப்பிற்கு செல்லவும். அங்கே கூகுள் அக்கவுண்ட் லிங்க் (Google Account link) என்பதை கிளிக் செய்யவும். பிறகு பேமண்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் அண்ட் ஆக்டிவிட்டிஸ் (Payment transactions & activities) என்கிற விருப்பத்தை காண்பீர்கள்; அதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுக்கு ஒரு டிராப்-டவுன் மெனு (Drop down Menu) அணுக கிடைக்கும். அதில் டெலிட் (Delete) என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும். பிறகு ஜிபே டிரான்ஸாக்ஷன் ஆக்டிவிட்டியை (GPay transaction activity) நீக்க விரும்பும் நேர வரம்பை (Time Range) தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அடுத்துள்ள க்ராஸ் (x) ஐகானை கிளிக் செய்து நீங்கள் நீக்க விரும்பும் பரிவர்த்தனையை டெலிட் செய்து கொள்ளவும்; அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
Google Pay App Keeps Saving Your Transaction History Here is How to Delete Your Payment Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X