Home
How to

Google எச்சரிக்கை.. உங்க Smart TV-ல இது இருக்கானு செக் பண்ணுங்க.. ஒருவேளை இல்லனா அது ஒரிஜினல் டிவி இல்ல!

கூகுள் (Google) நிறுவனத்தின் சமீபத்திய எச்சரிக்கை ஒன்று, ஸ்மார்ட் டிவி (Smart TV) வைத்திருக்கும் ஒவ்வொருவரின் வயிற்றிலும் புளியை கரைக்கும்படி உள்ளது. மேலும் இந்த எச்சரிக்கையானது, நமது வீடுகளில் இருப்பது ஒரிஜினலான ஆண்ட்ராய்டு டிவிகள் (Android TV) தானா? என்கிற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது!

கூகுள் நிறுவனமானது "ஆண்ட்ராய்டு டிவி" என்று கூறப்படும் அல்லது விற்பனை செய்யப்படும் எல்லா டிவிகளுமே உண்மையான ஆண்ட்ராய்டு டிவிகள் அல்ல என்கிற பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் ஒரிஜினல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை (Original Android Smart TV) எப்படி கண்டுபிடிப்பது என்கிற எளிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

உங்க Smart TV-ல இது இருக்கானு செக் பண்ணுங்க.. ஒருவேளை இல்லனா?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி என்கிற பெயரில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான டிவி மாடல்கள், ஏஓஎஸ்பி (AOSP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜெக்ட்டை (Android Open Source Project) பயன்படுத்துகின்றன என்கிற உண்மையை கூகுள் நிறுவனம் அம்பலப்படுத்தி உள்ளது.

கூகுளின் கூற்றுப்படி, ஏஓஎஸ்பி-ஐ பயன்படுத்தும் ஸ்மார்ட் டிவிகளானது "தொழில்நுட்ப ரீதியாக" கூகுள் ஆப்ஸ் (Google Apps) மற்றும் கூகுள் பிளே ஸ்டோரை (Google Play Store) கொண்டிருக்கும், ஆனால் அவைகள் எல்லாமே கூகுளால் உரிமம் அளிக்கப்படாதவைகளாக (Not Licensed by Google) இருக்கும்.

அதாவது ஆண்ட்ராய்டு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜெக்ட் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவிகளானது பிளே ப்ரொடெக்ட் (Play Protect) சான்றிதழ்களை பெற்று இருக்காது என்று அர்த்தம்; பிளே ப்ரொடெக்ட் சான்றிதழ் இல்லையென்றால், நீங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப்களில் உள்ள வைரஸ் (Virus) அல்லது மால்வேர்களை (Malware) தடுப்பதற்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று அர்த்தம்.

"ஒரிஜினல்" ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை கண்டுபிடிப்பது எப்படி? நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் டிவியானது உண்மையான ஆண்ட்ராய்டு டிவிதானா என்பதை கண்டுபிடிக்க உதவும் 2 எளிமையான வழிகளையும் கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ளது. முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு டிவி இணையதளத்தை (Official Android TV Website) சரிபார்க்க வேண்டும்.

எதெல்லாம் அதிகாரப்பூர்மான ஆண்ட்ராய்டு டிவிகள் மற்றும் கூகுள் டிவி பார்ட்னர்கள் (Google TV Partners) உள்ளிட்ட விவரங்களை ஆண்ட்ராய்டு டிவி இணையதளம் வழியாக அறிந்துகொள்ள முடியும். இரண்டாவது வழி - உங்கள் ஸ்மார்ட் டிவிக்கு பிளே ப்ரொடெக்ட் சான்றிதழ் (Play Protect Certification) வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

இது பிளே ஸ்டோரில் உள்ள சான்றிதழாகும். இதன் மூலம் ஒரு ஸ்மார்ட் டிவிக்கு, அதிகாரப்பூர்வமாக கூகுளின் உரிமம் (Google License) கிடைத்துள்ளதா இல்லையா என்பதை எளிமையாக கண்டுபிடிக்க முடியும். ஒருவேளை உங்கள் ஸ்மார்ட் டிவிக்கு பிளே ப்ரொடெக்ட் சான்றிதழ் இல்லையென்றால், அது ஆண்ட்ராய்டு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜெக்ட் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவியாகத்தான் இருக்க வேண்டும்.

உங்கள் ஆண்ட்ராய்டு டிவியில், கூகுள் பிளே ப்ரொடெக்ட் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்ப்பது எப்படி? உங்கள் ஆண்ட்ராய்டு டிவியில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரை திறந்து, ஸ்க்ரீனில் மேல் வலதுபுறத்தில் (Top right of the screen) உள்ள ப்ரொஃபைல் ஐகானை (Profile Icon) கிளிக் செய்யவும்.

பின்னர் செட்டிங்ஸ் (Settings) சென்று அபௌட் (About) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். அதனை தொடர்ந்து பிளே ப்ரொடெக்ஷன் சர்டிஃபிகேஷன் (Play Protect Certification) என்கிறவிருப்பத்தை காண்பீர்கள். அதன் வழியாக உங்கள் ஆண்ட்ராய்டு டிவி ஆனது கூகுளால் சான்றளிக்கப்பட்ட டிவியா? இல்லையா? என்பதை சரிபார்க்க முடியும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google New Warning For Smart TV Users All Android TVs Are Not Licensed Check For Play Protect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X