புதிய கூகுள் லிஸ்ட் : லிஸ்டை க்ரியேட், எடிட், ஷேர் செய்வது எப்படி.?

புதிய இடங்களைப் பற்றிய தகவல்களை உருவாக்கவும்,அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்குமான புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் மேப்.

By Ilamparidi
|

முன்னணி இணைய உலவியான கூகுள் நில வரைபடங்கள் (கூகுள் மேப்) என்கிற தனது இணையத்தின் மூலம் உலகிலுள்ள இடங்களைப் பற்றிய தகவல்கள்,படங்கள்,முகவரி உள்ளியிட்டவற்றை வழங்கிவருகிறது.

புதிய இடங்களைப் பற்றிய தகவவல்களை உருவாக்கவும்,அதனை பகிர்ந்து கொல்லவதற்குமான புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கூகுள் மேப்பில் புதிய இடங்களைப் பற்றிய பட்டியல்களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அதனை எவ்வாறு பிறரிடத்தில் பகிர்ந்துகொள்வது என்பது குறித்த தகவல்கள் கீழே.

கூகுள் மேப்:

கூகுள் மேப்:

கூகுள் நிறுவனத்தின் மற்றுமோர் பயனுள்ள சேவையான கூகுள் மேப் ஆனது கடந்த பிப்ரவரி 8 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்டதாகும்.இந்த சேவையானது மிகுந்த பயனுள்ள ஒன்றாகும்.உலகு முழுதும் நில வரைபடங்களை தன்னகத்தே கொண்டு நமக்கு தேவையான இடங்களின் முகவரிகளை அறிந்துகொள்ளவும் பல வகையில் இது தனது பயனாளர்களுக்கு மிகுந்த பயனுடைய ஒன்றாகவே இருந்து வருகிறது.

புதிய அம்சம்:

புதிய அம்சம்:

அத்தகைய கூகுள் மேப் புதிய அம்சம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.அது என்னவெனில் இப்போது புதிய இடங்களை இடங்களைப்பற்றிய தகவல்களை உருவாக்கவும் அதனை நமது நண்பர்களிடத்திலேயும் பிறரிடத்திலேயும் பகிர்ந்து கொள்ளலாம்.இந்த புதிய அம்சமானது லிஸ்ட்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

புதிய பட்டியல்களை தயாரிப்பது எப்படி:

புதிய பட்டியல்களை தயாரிப்பது எப்படி:

முதலில் கூகுள் மேப்பில் சைடு மெனுவுக்குச் சென்று ஓப்பன் சேவ்டு என்கிற வசதியில் நீல நிற வட்டத்திற்குள் சைன் இன் செய்துகொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் எந்த இடத்தினைப் பற்றிய தகவல்களைச் சேர்க்க வேண்டுமோ அவற்றை புதிய பட்டியல்களை உருகுதல் என்ற வசதியின் மூலம் எளிதாக சேவ் செய்துகொள்ளலாம்.

பகிர்ந்துகொள்ள:

பகிர்ந்துகொள்ள:

நீங்கள் புதிதாக குறிப்பிட்ட இடத்தினைப் பற்றி சேர்த்த தகவல்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள,லிஸ்ட் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட இடத்தை செலக்ட் செய்து ஆண்ட்ராய்டு,ஐஓஎஸ் உள்ளிட்ட மொபைல் போன்களின் வாயிலாகவே பகிர்ந்துகொள்ளலாம்.மேலும் தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு பேஸ்புக்,வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் வாயிலாகவும் பகிந்துகொள்ளலாம்.

எடிட்:

எடிட்:

நீங்கள் கூகுள் மேப்பில் சேர்த்த தகவல்களை எடிட்டும் செய்துகொள்ளலாம்.இதற்கு பிளேஸ் என்ற ஆப்ஷனுக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தினைப்பற்றிய தகவல்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யலாம்.பின்பு மீண்டும் சேவ் செய்துகொள்ள இயலும்.

இன்னும் பயனுள்ளதாக:

இன்னும் பயனுள்ளதாக:

கூகுள் மேப் ஏற்கனவே மிகுந்த பயனுள்ள ஒன்றாக மக்களால் அறியப்பட்டு வருகிறது.ஏனெனில் புதிய இடங்களைப் பற்றிய தகவல்கள் முகவரி உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள பயன்டுள்ள ஒன்றாக உள்ளது.அதனில் இப்போது சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம் இன்னும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பது கூகுள் மேப் பயன்பாட்டாளர்கள் கருத்தாகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Google Maps introduces "List"; Here's how to create, share and edit your list.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X