தினமும் பஸ்சில் பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்காகவே கூகுள் அறிமுக படுத்திய புதிய அம்சம்

|

பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது டிரைவர்கள் மேப் காட்டும் வழியை தவிர வேறு வழியில் செல்கிறார்களா என்ற சந்தேகம் எழும். சமயங்களில் இதுபற்றி கேட்கும் போது சில டிரைவர்கள் இது போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதை என கூறுவர்.

ஒரு பயனுள்ள அம்சம்

ஒரு பயனுள்ள அம்சம்

இதுபோன்ற சூழல்களில் பயன்படுத்துவதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஒரு பயனுள்ள அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் டிரைவர்கள் மேப்ஸ் காட்டும் வழியில் செல்லாமல் வேறு வழியை பயன்படுத்த துவங்கும் போது எச்சரிக்கை செய்யும்.

ஆஃப்-ரூட் அலெர்ட்ஸ்

ஆஃப்-ரூட் அலெர்ட்ஸ்

முன்பின் அறிந்திராத பகுதிகளில் பயணிக்கும் போது, செல்ல வேண்டிய இடத்திற்கான வழிபற்றி அறிந்து கொள்ள கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம். இவ்வாறு மேப்ஸ் பயன்படுத்தும் நிலையில், ஆஃப்-ரூட் அலெர்ட்ஸ் எனும் அம்சத்தை இயக்கலாம். இந்த அம்சம் டிரைவர் வேறு பாதையில் பயணிக்க துவங்கும் போது, உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.

vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா.! வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.!vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா.! வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.!

அம்சத்தை எப்படி இயக்க வேண்டும்

இந்த அம்சத்தை எப்படி இயக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

1 - கூகுள் மேப்ஸ் செயலியில் இருக்குமிடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்தை தேடி, டைரெக்‌ஷன்ஸ் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

2 - இனி மேலே உள்ள டிரைவிங் ஐகானை க்ளிக் செய்து, ஸ்டே சேஃபர் (Stay Safer) எனும் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

3 - ஸ்டே சேஃபர் ஆப்ஷனின் கீழ் Get off-route alerts எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், ஆஃப் ரூட் எலெர்ட்கள் ஸ்மார்ட்போனில் வரும்

டிரைவர் மேப்ஸ்

டிரைவர் மேப்ஸ்

இந்த அம்சம் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள வழிகளுக்கு ஏற்ப வேலை செய்யும். இந்த அம்சத்தை இயக்க ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை திறந்து, செல்ல வேண்டிய இடத்தை தேடி, டைரெக்‌ஷன்ஸ் அம்சத்தை க்ளிக் செய்யவும். இனி டிரைவிங் ஐகானை க்ளிக் செய்து, ஸ்டே சேஃபர் ஆ்ஷனில் ஷேர் லைவ் ட்ரிப் மற்றும் கெட் ஆஃப் ரூட் அலெர்ட் என இரண்டு ஆப்ஷன்கள் தெரியும். இதில் இரண்டாவது ஆப்ஷனை க்ளிக் செய்தால், டிரைவர் மேப்ஸ் சேவையில் உள்ள வழியை தவிர்க்கும் பட்சத்தில் உங்களுக்கு அதுபற்றிய எச்சரிக்கை விடுக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Google Introduce new Warning Feature in Google Maps: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X