கேட்டதை கொடுப்பவனே.. Gmail சேவையில் முக்கிய மாற்றம்.. Desktop-க்கு வந்தது.. விரைவில் Mobile-க்கும் வரும்!
கூகுள் (Google) நிறுவனம் தனது ஜெமினி டீப் ரிசர்ச் டூலை (Gemini Deep Research tool) மேம்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் கீழ் கூகுள் ஜெமினியால் தற்போது பயனர்களின் ஜிமெயில் இன்பாக்ஸ்கள், கூகுள் டிரைவ் ஃபைல்கள் மற்றும் சாட் கான்வர்ஷேஷன்களை ஸ்கேன் செய்ய முடியும்.
கூகுள் நிறுவனம் இந்த அப்டேட்டை "எங்களிடம் மிகவும் கோரப்பட்ட அம்சங்களில் ஒன்று" என்று விவரிக்கிறது. மேலும் இது இன்று முதல் டெஸ்க்டாப்பில் (Desktop) வெளியிட தொடங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்குள் மொபைல்களுக்கான ஆதரவு (Mobile Support) வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில், டிரைவ் மற்றும் சாட் உடன் ஜெமினியின் டீப் ரிசர்ச் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
- டெஸ்க்டாப்பில் உள்ள ஜெமினிஸ் டூல் மெனுவில் (Gemini's Tool Menu) இருந்து டீப் ரிசர்ச் (Deep Research)என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் சோர்ஸ் விருப்பங்களை தேர்வு செய்யவும்: சேர்ச் (Search), ஜிமெயில் (Gmail), ட்ரைவ் (Drive) மற்றும் / அல்லது சாட் (Chat)
- இப்போது ஏஐ தானாகவே மல்டி-ஸ்டெப் ரிசர்ச் பிளானை (Multi-step research plan) உருவாக்கும்
- ஜெமினி உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சோர்ஸ்களை ஆட்டோநமஸ் (autonomous) ஆக தேடும்
- கூகுள் டாக்ஸ்-க்கு (Google Docs) எக்ஸ்போர்ட் செய்யக்கூடிய அல்லது ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட பாட்காஸ்ட்களாக (AI-generated podcasts) மாற்றக்கூடிய தொகுக்கப்பட்ட அறிக்கை கிடைக்கும். அதை மதிப்பாய்வு செய்யவும்.
விரைவான பதில்களுக்கு (Quick Answers) பதிலாக பல பக்க அறிக்கைகளை (Multi-page reports) உருவாக்குவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஏஐ ஏஜென்ட் (AI Agent) ஆன டீப் ரிசர்ச்சால் - இப்போது இமெயில்கள், டாக்குமெண்ட்கள், ஷீட்ஸ், ப்ரெசன்ட்டேஷன்ள், பிடிஎப்கள் மற்றும் சாட் பதிவுகளோடு சேர்த்து பாரம்பரிய வெப் சேர்ச்களின் கீழ் இருந்தும் நுண்ணறிவுகளை பெற முடியும்.
இதன் பொருள் பயனர்கள் தொடர்புடைய இமெயில் த்ரெட்ஸ் மற்றும் ப்ராஜெக்ட் பினான்களை ஒரே நேரத்தில் மதிப்பாய்வு செய்யும் போது ப்ரெயின்ஸ்ட்ராமிங் டாக்குமெண்ட்களை (brainstorming documents) பகுப்பாய்வு செய்ய சொல்லி ஏஐ-க்கு கட்டளையிடலாம் அல்லது பப்ளிக் வெப் டேட்டாவை இன்டர்னல் ஸ்ட்ராடெஜி மேமோஸ் மற்றும் டீம் டிஸ்கஷன்களுடன் இணைக்கும் காம்படிட்டர் அனாலிசிஸ்களை உருவாக்கலாம்.
கடந்த டிசம்பர் 2024 இல் ஜெமினி 1.5 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, டீப் ரிசர்ச் ஆனது ஜெமினி 2.0 ஃப்ளாஷ் திங்கிங் மூலம் தற்போதைய ஜெமினி 2.5 ஆக பரிணமித்து, பெருகிய முறையில் அதிநவீன பகுப்பாய்வை வழங்குகிறது. இந்த அமைப்பு ஆராய்ச்சி அமர்வுகளின் போது நூற்றுக்கணக்கான பக்கங்களை செயலாக்கு திறனை கொண்டுள்ளது
மேலும் நீட்டிக்கப்பட்ட பணிகளில் ஒத்திசைவை பராமரிக்க இது கூகுளின் மில்லியன்-டோக்கன் கான்டெக்ஸ்ட் விண்டோவை பயன்படுத்துகிறது. இது ஒத்திசைவற்ற முறையில் செயல்படுகிறது - அதாவது பயனர்கள் தங்கள் லேப்டாப்களை மூடிவிட்டு பின்னர் கம்ப்ளீஷன் நோட்டிபிகேஷனை பெறலாம் - அதே நேரத்தில் தனிப்பட்ட படிகள் தோல்வியுற்றால் முழு பணியும் ரீஸ்டார்ட் ஆவதும் எரர் ரிக்கவரி சிஸ்டம் மூலம் தடுக்கப்படும்.
இந்த அம்சம் அனைத்து ஜெமினி பயனர்களுக்கும் ஜெமினி.கூகுள்.காம் (gemini.google.com) வழியாக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூகுள் ஜெமினி தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை கூகுள் நிறுவனமும் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸும் (Reliance Intelligence) கூட்டு சேர்ந்து உள்ளன.
இதன்கீழ் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அதன் மிகவும் அட்வான்ஸ்டு ஏஐ டூல்களை (Advanced AI Tools) கிடைக்க செய்வதற்காக, கூகுள் நிறுவனமானது ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த புதிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஜியோ அன்லிமிடெட் 5ஜி பிளான்களை ரீசார்ஜ் செய்துள்ள கஸ்டமர்களுக்கு 18 மாதங்களுக்கான கூகுள் ஏஐ ப்ரோ திட்டம் (Google AI Pro plan) இலவசமாக கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








