சுந்தர் பிச்சை சார்.. ரொம்ப தேங்க்ஸ்.. இண்டர்நெட் இல்லாமல் Google Drive-ஐ Offline-ல் பயன்படுத்துவது எப்படி?
முன்பை போல இல்லமால் இப்போது கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆனது தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இரண்டிற்குமே ஒரு மிக முக்கியமான டூல் ஆக மாறிவிட்டது. டாக்குமென்ட்ஸ் மற்றும் ஃபைல்களை சேமிப்பதற்கும், பகிர்வதற்கும் மற்றும் கூட்டுப்பணியாற்றுவதற்குமான ஒரு முக்கிய தளமாக உருமாறியுள்ளது.
அப்படியான கூகுள் ட்ரைவ்-ஐ ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று நம்மில் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அது உண்மையல்ல. உங்களிடம் இண்டர்நெட் கனெக்ஷன் இல்லாத போதும் கூட, அதாவது ஆஃப்லைன் வழியாகவும் கூகுள் ட்ரைவ்-ஐ அணுக முடியும்.

அதெப்படி என்று உங்களுக்கு தெரியாது என்றால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் வழியாக.. கூகுள் ட்ரைவ்-ஐ ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:
கூகுள் ட்ரைவ்-ஐ ஆஃப்லைனில் பயன்படுத்த, நீங்கள் ஆஃப்லைன் அக்சஸ்-ஐ எனேபிள் செய்ய வேண்டி இருக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இதை உங்கள் கம்ப்யூட்டரில் அல்லது மொபைல் போனில் செய்யலாம். முதலில் கம்ப்யூட்டரில் இதை எப்படி செய்வது என்கிற வழிமுறைகளை பார்ப்போம். பின்னர் இதையே மொபைல் போனில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உங்கள் கம்ப்யூட்டரில் கீழ்வரும் வழிமுறைகளை ஒவ்வொன்றாக பின்பற்றவும்:
1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர் வழியாக கூகுள் ட்ரைவ் இணையதளத்திற்கு (https://drive.google.com/) செல்லவும்.
2. பின்னர் மேல் வலது மூலையில் உள்ள கியர் ஐகானை (Gear icon) கிளிக் செய்யவும்.
3. அதனை தொடர்ந்து செட்டிங்ஸ்-ஐ (Settings) தேர்ந்தெடுக்கவும்.
4. இப்போது ஆஃப்லைன் என்பதன் கீழ், "ஆஃப்லைனில் இருக்கும்போது இந்த டிவைஸில் உங்கள் சமீபத்திய கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் ஸ்லைடு ஃபைல்களை உருவாக்கவும், திறக்கவும் மற்றும் திருத்தவும்" என்பதற்கு அடுத்துள்ள செக்பாக்ஸை தேர்வு செய்யவும்.
5. கடைசியாக மாற்றங்களை சேமிக்கவும் (Save Changes) என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் மொபைல் போனில் கீழ்வரும் வழிமுறைகளை ஒவ்வொன்றாக பின்பற்றவும்:
1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் ட்ரைவ் ஆப்பை (Google Drive App) திறக்கவும்.
2. மேல் வலது மூலையில் உள்ள த்ரீ டாட்ஸ் ஐகானாய் கிளிக் செய்யவும்.
3. இப்பொது செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்யவும்.
4. பின்னர் ஆஃப்லைன் அக்சஸ்-ஐ கிளிக் செய்யவும்.
5. கடைசியாக "ஆஃப்லைன் அக்சஸ்" என்பதற்கு அடுத்துள்ள சுவிட்சை டாக்கின்ஸ் செய்யவும்.
ஒருமுறை நீங்கள் கூகுள் ட்ரைவ் ஆஃப்லைன் அணுகலை இயக்கியவுடன், நீங்கள் இண்டர்நெட் உடன் இணைக்கப்படாத போதும், உங்களால் லேட்டஸ்ட் கூகுள் டாக்ஸ் (Google Docs), கூகுள் ஷீட்ஸ் (Google Sheets) மற்றும் ஸ்லைட்ஸ் (Slides) ஃபைல்களை ஓப்பன் செய்ய முடியும்; எடிட் செய்யவும் முடியும்.
இந்த அணுகல் நீங்கள் சமீபத்தில் திறந்த கோப்புகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட கோப்பை சமீபத்தில் திறக்கவில்லை என்றால், அதை உங்களால் அணுக முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக உங்களுக்கு எதெல்லாம் தேவை என்று தோன்றுகிறதோ, அவைகளை அவ்வப்போது திறந்துபார்த்து கொள்ளவும்.
இன்னொரு முக்கியமான விஷயம், கூகுள் ட்ரைவில் உள்ள கோப்பை ஆஃப்லைனில் திறக்கும் போது (அது கூகுள் டிரைவ் ஆப் ஆக இருந்தாலும் சரி அல்லது கூகுள் டிரைவ் இணையதளமாக இருந்தாலும் சரி) குறிப்பிட்ட கோப்புகளுக்கு அடுத்ததாக சாம்பல் நிறத்திலான செக்மார்க் இருக்கும். அந்த ஆவணத்தை திறக்க அதை டாப் செய்யவும் அல்லது கிளிக் செய்ய வேண்டி இருக்கும்.
ஒருவேளை ஆஃப்லைனில் கிடைக்காத ஒரு கோப்பை நீங்கள் அணுக வேண்டும் என்றால், அதை பதிவிறக்கம் செய்யலாம். இதைச் செய்ய, குறிப்பிட்ட ஆவணத்திற்கு அடுத்துள்ள த்ரீ டாட்களை கிளிக் செய்யவும். அதன் பின்னர் "ஆஃப்லைனில் கிடைக்க செய்" (Make available offline) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இப்படியாக ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்தவுடன், அதை வழக்கம் போல் திறக்கலாம் மற்றும் எடிட் செய்யலாம். அந்த கோப்பில் நீங்கள் செய்யும் எல்லா மாற்றங்களும் உங்களுடைய டிவைஸில் சேமிக்கப்படும்; எப்போது நீங்கள் இண்டர்நெட் உடன் மீண்டும் இணைக்கப்படுகிறீர்களோ, அப்போது அந்த மாற்றங்கள் கூகுள் ட்ரைவ் உடன் சின்க் (Sync) செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








