கூகுள் குரோமில் பலருக்கு தெரியாத ஷார்ட் கட் வசதிகள்

Written By:
  X

  உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

  கூகுள் குரோமில் பலருக்கு தெரியாத ஷார்ட் கட் வசதிகள்

  மிக எளிமையானது என்பதும், இண்டர்நெட்டிற்கு புதியவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாலும் கூகுள் குரோம் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பிரெளசரில் பலர் அறிந்திராத வசதிகள் இருப்பதை தற்போது பார்ப்போம். மிக எளிமையாக உபயோகிக்க கூடிய இந்த பிரெளசரில் உள்ள ஒருசில டிரிக்ஸ்களையும் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  குரோமை ஓப்பன் செய்யும்போது எந்த பக்கம் நமக்கு வேண்டும்

  கூகுள் குரோமை ஒவ்வொரு முறையும் ஓப்பன் செய்யும் நமக்கு வரும் முதல் பக்கம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை செட்டிங் செய்து வைத்து கொள்ளும் வசதி இந்த குரோமில் உள்ளது. இதற்காக நீங்கள் குரோம் செட்டிங் சென்று startup section என்பதன் டிராப்டவுனில் உள்ள ஏதாவது ஒரு ஆப்சனை உங்கள் விருப்பம் போல் தேர்வு செய்யலாம்

  அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை ஷார்ட்கட் ஆக்கி கொள்ளலாம்

  உங்களுக்கு விருப்பமான அல்லது அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை ஷார்ட்கட் வசதி மூலம் டெக்ஸ்டாப்பில் வைத்து கொள்ளும் வசதி உள்ளது. இதர்கு நீங்கள் செய்ய வேண்டியது.

  உங்கள் விருப்பமான இணையதளத்தை ஓப்பன் செய்து வலது மேல்புறத்தில் உள்ள ஐகான் ஒன்றை அழுத்தி பின்னர் அதில் உள்ள ஆப்சன் பட்டியலில் உள்ள டூல்ஸ் சென்று பின்னர் அதில் உள்ள Add to Desktop என்பதை க்ளிக் செய்துவிட்டால் உங்கள் விருப்பமான இணையதளம் நீங்கள் குரோமை ஓப்பன் செய்தவுடன் தெரியும்

  குரோமில் உள்ள டேப்களை பின் செய்யலாம் தெரியுமா?

  சில சமயம் நீங்கள் ஒரே நேரத்தில் பல டேப்களை ஓபன் செய்து வைத்திருப்பீர்கள். அந்த நேரத்தில் எந்த டேப்பில் எந்த தளம் இருக்கின்றது என்பதை அறிவது கஷ்டமாக இருக்கும். இந்நிலையில் டேப்பை பின் செய்து வைத்துவிட்டா, அந்த டேப் ஐகானாக மட்டுமே தோன்றும். இதனால் ஒரு குறிப்பிட்ட டேப்பை கண்டு கொள்வதில் எந்தவித சிரமமும் இருக்காது. இந்த வசதியை பெற வலது புறம் க்ளிக் செய்து பின்னர் pin tab என்பதை தேர்வு செய்தால் போதுமானது.

  கடைசியாக மூடிய டேப்-ஐ எப்படி மீண்டும் பெறுவது:

  சில சமயம் ஏதோ ஒரு ஞாபகத்தில் நமக்கு தேவையான டேப்-ஐ தெரியாமல் குளோஸ் செய்துவிடுவோம். அல்லது மவுஸ் சிறிது தவறாக அசைந்தும் நமக்கு தேவையான டேப் குளோஸ் ஆகிவிடும். இந்த மாதிரியான சமயத்தில் Ctrl + Shift + T என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்தினால் போதும்.

  நீங்கள் கடைசியாக டேப் ஓப்பன் ஆகும். மீண்டும் மீண்டும் இதே ஷார்ட்கட்டை அழுத்தினால் நீங்கள் குளோஸ் செய்த டேப்புகள் ஓப்பன் ஆகிக்கொண்டே இருக்கும். இதை நீங்கள் இன்னொரு முறையிலும் செய்யலாம். வலது புறம் க்ளிக் செய்து ஆப்சன் என்பதில் உள்ள Reopen closed tab என்பதை அழுத்தினால் போதுமானது

  சான்றிதழ் தளத்தில் சிக்கிய 4000எம்ஏஎச் பேட்டரி, 5-இன்ச் சியோமி ரெட்மீ 5.!?

  யாருக்கும் தெரியாமல் பிரெளஸ் செய்ய வேண்டுமா?

  நீங்கள் ஓபன் செய்யும் டேப் மிகவும் ரகசியமானதா? அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்புகிறீர்களா? அதற்கும் குரோமில் வசதி உண்டு. இதை நீங்கள் செய்ய வலது மேல்புறத்தில் உள்ள விரஞ்ச் ஐகானை க்ளிக் செய்து அதில் உள்ள ஆப்சனில் 'New incognito window' என்பதை தேர்வு செய்துவிட்டால் நீங்கள் ஓபன் செய்த பக்கங்கள் ஹிஸ்ட்ரியில் சேவ் ஆகாது. இதை நீங்கள்Ctrl + Shift + N என்ற ஷார்ட் கட் மூலமும் பெறலாம்

  ஆட்டோ ஃபில் வசதி வேண்டுமா?

  ஒருசில இணையதளங்களை நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் நிலை ஏற்படும். அந்த சமயங்களில் ஒவ்வொரு முறையும் அந்த இணையதளத்தின் முழு யூஆர்.எல் முகவரியையும் டைப் அடிப்பதில் எரிச்சலாக இருக்கும். இந்த நேரங்களில் நீங்கள் ஆட்டோ ஃபில் வசதியை பயன்படுத்தலாம்.

  இவ்வாறு பயன்படுத்தினால் குறிப்பிட்ட இணையதளத்தின் முகவரியின் முதல் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களை டைப் செய்தால் அந்த இணையதளத்தின் முழு முகவரியும் வந்துவிடும். இந்த வசதியை நீங்கள் பெற Settings → Passwords and Forms சென்று அதில் உள்ள ஆப்சனில் Autofill என்பதை எனேபிள் செய்தால் போதும்

  இணையதள பக்கத்தை பிரிண்ட் எடுக்க வேண்டுமா?

  நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் ஒரு பக்கத்தை பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் குரோம் செட்டிங்ஸ் சென்று அதில் உள்ள Cloud Printஐ கிளிக் செய்தால் உங்கள் இணையதள பக்கம் பிரிண்ட் எடுக்க தயாராகிவிடும்

  உங்களை தவிர வேறு யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறார்களா?

  சில சமயம் உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை உங்களுடைய நண்பர் பயன்படுத்த கேட்கலாம். அந்த சமயத்தில் உங்களுடைய டேட்டாக்களை அவர் பார்க்காதவாறு செய்யத்தான் கெஸ்ட் பிரெளசிங் வசதி குரோமில் உள்ளது. செட்டிங்ஸ் சென்று இதை எனேபிள் செய்துவிட்டால் அவர் பயன்படுத்தும் குரோம் பிரெளசரில் உங்கள் டேட்டா எதுவுமே தெரியாது.

  புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Google Chrome is a popular web browser and here are some customizations that can be done to the same. Read more to know how you can use it like a pro.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more