ChatGPT-க்கு குட்பை... 2 கிளிக் போதும்.. இந்தியாவுக்கு வந்த Google Bard-ஐ செம்ம ஈஸியா யூஸ் பண்ணலாம்!
கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வின் (Google I/O 2023 Event) போது பட்டைய கிளப்பும் பல அறிவிப்புகள் வெளியானது. சிலருக்கு பிக்சல் போல்ட் (Pixel Fold ) மீது கண்.. சிலருக்கு பிக்சல் டேப்லெட் (Pixel Tablet) மீது கண்.. இன்னும் சிலருக்கு பிக்சல் 7ஏ (Pixel 7a) மீது கவனம் இருந்தது.
ஆனால் பெரும்பாலானோர்களின் கவனமும் கூகுள் பார்ட் (Google Bard) மீதுதான் இருந்தது. ஏனென்றால் கூகுள் நிறுவவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் (Annual Developer Conference) சாட்ஜிபிடி-யின் (ChatGPT) ஆட்டத்தை முடிக்கும் சில முக்கிய அறிவிப்புகளும், புதிய ஏஐ அம்சங்களும் (AI Features) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பில் எந்த குறையும் வைக்காதபடி, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஏஐ தொடர்பாக பல தரமான அறிவிப்புகளை நிகழ்த்தினார். அதில் மிகவும் முக்கியமான அறிவிப்பு - கூகுளின் ஏஐ சாட்பாட் (Google AI Chatbot) ஆன பார்ட் (Bard) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது தான்!
சாட்ஜிபிடி-க்கு போட்டியாக களமிறக்கப்பட்ட கூகுள் பார்டில் பல புதிய அம்சங்களும், மேம்பாடுகளும் கூட சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூகுளின் புதிய பார்ட் ஏஐ டூல்-ஐ நீங்கள் முயற்சிக்க ஆர்வமாக இருந்தால்.. "வெறும் 2 கிளிக்குகளில்" அதை பயன்படுத்துவது எப்படி என்கிற வழிமுறை இதோ:
கூகுள் பார்ட்-ஐ பயன்படுத்த உங்களுக்கு என்னவெல்லாம் தேவைப்படும்? முதலாவதாக, உங்களிடம் ஆக்டிவ் ஆக இருக்கும் கூகுள் அக்கவுண்ட் (Active Google Account) இருக்க வேண்டும். பிறகு உங்களிடம் நல்ல இன்டர்நெட் கனெக்ஷனும் (Internet Connection) இருக்க வேண்டும். கடைசியாக உங்கள் டிவைஸில் கூகுள் பார்ட்-க்கு இணக்கமான வெப் ப்ரவுஸர் (Web Browser) உங்களிடம் இருக்க வேண்டும்.
கூகுள் பார்ட்-ஐ பயன்படுத்துவதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்: கூகுள் பார்ட் ஆனது இன்னுமும் பீட்டா கட்டத்தில் (Beta Phase) தான் உள்ளது, அதாவது சோதனை கட்டத்தில் (Testing Phase) தான் உள்ளது. சில நேரங்களில் இது "பொருத்தமற்ற முடிவுகளை" (Irrelevant Results) தரக்கூடும். கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட சில புதிய அம்சங்கள், உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
கூகுள் பார்ட்-ஐ பயன்படுத்துவது எப்படி? பார்ட்.கூகுள்.காம் (bard.google.com) என்கிற வலைத்தளத்திற்கு செல்லவும். அங்கே உங்கள் கூகுள் அக்கவுண்ட் விவரங்களை (Google Account Credentials) உள்ளிட்டு லாக்இன் (Login) செய்யவும். அவ்வளவுதான்! கூகுள் பார்ட்-ஐ இப்போது நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். அதனிடம் கேள்விகள் மற்றும் பலவற்றைக் கேட்கத் தொடங்கலாம். அது உங்களுக்கு யதார்த்தமான மற்றும் ஆய்வு செய்யப்பட்ட பதில்களை வழங்கும்!


Click it and Unblock the Notifications








