உங்க Gmail-ல மறக்காம "இதை" செஞ்சிடுங்க! இல்லனா ரூ.1100 செலவு பண்ணணும்!

|

"உங்க ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட்ல மொத்தம் எத்தனை இமெயில்கள் இருக்கும்?" என்று கேட்டால்.. பலரும் "அது இருக்கும்.. ஒரு 2,000 டூ 2,500 இமெயில்கள் அப்படியே இருக்கும்!" என்கிற பதிலையே சொல்லுவார்கள்!

அந்த பலரில் நீங்களும் ஒருவர் என்றால், அதாவது உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நூற்றுக்கணக்கான பழைய ஈமெயில்கள் டெலிட் செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது என்றால்..?

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு 'மேட்டர்' இருக்கிறது!

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு 'மேட்டர்' இருக்கிறது!

அது என்னவென்றால், நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு.. டெலிட் செய்யப்படாத, பழைய இமெயில்களை உங்கள் ஜிமெயில் அக்கவுண்டில் வைத்து இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இலவசமாக வழங்கப்படும் கூகுள் ஸ்டோரேஜின் அளவு குறைந்துகொண்டே போகும்.

அறியாதோர்களுக்கு, Gmail, Drive, Photos மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து Google அக்கவுண்ட்களுக்கும், மொத்தம் 15GB அளவிலான கிளவுட் ஸ்டோரேஜ் மட்டுமே உள்ளது.

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

ஒருவேளை உங்களுக்கு 100GB வேண்டுமென்றால்..?

ஒருவேளை உங்களுக்கு 100GB வேண்டுமென்றால்..?

உங்களுக்கு 15ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் பற்றாது என்றால் அல்லது பற்றவில்லை என்றால் 100ஜிபி அளவிலான கிளவுட் ஸ்டோரேஜை பெற நீங்கள் ஆண்டுதோறும் ரூ.1,100 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

மாறாக சற்றே புத்திசாலித்தனமாக செயல்பட்டால்.. கிளவுட் ஸ்டோரேஜிற்காக பணம் செலவழிக்காமலேயே, இலவசமாக கிடைக்கும் ஸ்டோரேஜை திறம்பட பயன்படுத்தலாம்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!

வேறு ஒன்றும் இல்லை - உங்களுக்கு வரப்போகும் "தேவை இல்லாத" இமெயில்கள், அதன் வழியாக வரப்போகும் தேவை இல்லாத அட்டாச்மெண்ட்களுக்கு உங்களுக்கான இலவச கிளவுட் ஸ்டோரேஜில் கொஞ்சம் கூட இடமளிக்கவே கூடாது!

அதாவது - குறிப்பிட்ட நபரிடம் இருந்து அல்லது குறிப்பிட்ட இமெயில் ஐடியில் இருந்து - வரப்போகும் மெயில்கள் எல்லாமே அவசியமற்றது தான் என்று நீங்கள் நினைத்தால் அதை ஆட்டோமேட்டிக் ஆக டெலிட் செய்ய வேண்டும்; அதெப்படி?

OPPO ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் எல்லோருக்கும் ஒரு முக்கிய அலெர்ட்!OPPO ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் எல்லோருக்கும் ஒரு முக்கிய அலெர்ட்!

அதுக்கு ஈஸியான ஒரு வழி இருக்கு!

அதுக்கு ஈஸியான ஒரு வழி இருக்கு!

இதற்காக நமக்கு கைகொடுக்க போவது Filters For Auto-Deletion என்கிற அம்சமே ஆகும்! இது "தேவை இல்லாத" இமெயில்களை ஆட்டோமேட்டிக் ஆக டெலிட் செய்ய உதவும் ஒரு ஜிமெயில் "தந்திரம்" ஆகும்.

சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த அம்சத்தின் கீழ் டெலிட் மட்டுமல்ல உங்களுக்கு வரும் இன்கம்மிங் இமெயில்களை Label செய்யலாம் அல்லது Archive செய்யலாம் அல்லது Star கூட செய்யலாம்!

அப்படி செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள் இதோ!

அப்படி செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள் இதோ!

- முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் ஜிமெயிலை திறக்கவும்.

- பின்னர் சேர்ச் பாரில் அணுக கிடைக்கும் Filter ஐகானை கிளிக் செய்யவும்.

- இப்போது உங்கள் ஸ்க்ரீனில் ஒரு ட்ராப்-டவுன் மெனு தோன்றும். அதில் From என்கிற செக்ஷனில், உங்களுக்கு முக்கியமில்லாத இமெயில்களை அனுப்பியவரின் பெயர் அல்லது குறிப்பிட்ட இமெயில் ஐடி-ஐ டைப் செய்யவும்

- பின்னர் அதே ட்ராப்-டவுன் மெனுவில் உங்களுக்கு அணுக கிடைக்கும் பல வகையான விருப்பங்களில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்யவும்.

BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!BSNL பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; இருந்தது ஒன்னு.. இப்போ அதுவும் போச்சு!

பாதி வேலை முடிந்தது.!

பாதி வேலை முடிந்தது.!

-தேவையான விருப்பங்களை தேர்வு செய்த பின்னர், Create filter என்கிற விருப்பத்தை தொடர்ந்து உங்களுக்கு அணுக கிடைக்கும் பல வகையான விருப்பங்களில் Delete it என்பதை கிளிக் செய்யவும்

- இப்போது மீண்டும் Create filter என்கிற பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்! குறிப்பிட்ட பெயர் அல்லது இமெயில் ஐடிகளில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் "தானாகவே" டெலிட் செய்யப்படும்; இலவச கிளவுட் ஸ்டோரேஜில் பற்றாக்குறை என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது!

இந்த அம்சத்தை பயன்படுத்தும் முன் மனதில் கொள்ள வேண்டியவை!

இந்த அம்சத்தை பயன்படுத்தும் முன் மனதில் கொள்ள வேண்டியவை!

- இந்த அம்சத்தின் கீழ், ஒரு பெயரைக் காட்டிலும் ஒரு இமெயில் ஐடியை உள்ளிடுவது எப்போதும் நல்லது. ஏனெனில் இந்த அம்சம் அதே பெயரில் உள்ள வேறு சில இமெயில்களையும் கூட ஆட்டோமேட்டிக் ஆக டெலிட் செய்யலாம்.

- இந்த அம்சம் வரவிருக்கும் இமெயில்களுக்கு மட்டுமானது என்பதை புரிந்துகொள்ளவும். அதாவது உங்களுக்கு ஏற்கனவே வந்துவிட்ட இமெயில்களை நீக்காது என்று அர்த்தம். அதே போல நீங்கள் உருவாக்கிய பில்டரை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.

போச்சு! Google, Facebook & Amazon-ல் இழுத்து மூடப்படும் 7 சேவைகள்!போச்சு! Google, Facebook & Amazon-ல் இழுத்து மூடப்படும் 7 சேவைகள்!

இது Settings வழியாகவும் அணுக கிடைக்கும்!

இது Settings வழியாகவும் அணுக கிடைக்கும்!

இந்த அம்சம் Search பார் வழியாக மட்டுமின்றி Settings செக்ஷன் வழியாகவும் அணுக கிடைக்கும். நீங்கள் Filters and blocked addresses என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவதன் வழியாக Create a new filter என்கிற பட்டனை அணுகலாம்!

Best Mobiles in India

English summary
Gmail Tips 2022 Delete Unnecessary Incoming Emails Automatically Step by Step Guide

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X