இன்டர்நெட் இல்லாமல் இமெயில் அனுப்ப உதவும் Gmail Offline! அதெப்படி?

|

"நீரின்றி அமையாது உலகு" என்று எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவர், ஒருவேளை இந்த நவீன உலகத்தில் ஒரு புதுக்கவிஞனாக பிறந்து இருந்தால் "இன்டர்நெட் இன்றி அமையாது உலகு" என்று எழுதி இருக்கலாம்!

அதை தன் பேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்ட்களில் போஸ்ட் செய்து, லைக்ஸ் மற்றும் ஷேர்களை வாரிக்குவித்து இருக்கலாம். அந்த அளவிற்கு இன்டர்நெட், காற்றைப்போல பரவி கிடைக்கிறது!

இன்டர்நெட் இல்லை என்றால், வாழ்கை ஆஃப் ஆகி ஆஃப்லைனுக்குள் போகும்!

இன்டர்நெட் இல்லை என்றால், வாழ்கை ஆஃப் ஆகி ஆஃப்லைனுக்குள் போகும்!

ஸ்மார்ட்போனில் டெய்லி டேட்டா தீர்ந்து விட்டாலோ, வீடு அல்லது ஆபீஸில் உள்ள வைஃபை கனெக்ஷனில் ஏதேனும் தடங்கல் என்றாலோ, நம்மில் பலரின் வாழ்க்கை அப்படியே 'ஆஃப்லைனுக்கு' (Offline) சென்றுவிடும் என்பதே நிதர்சனம்.

அது போன்ற தருணத்திலும் கூட, அதாவது இன்டர்நெட் சேவை இல்லாமல் / இன்டர்நெட் கனெக்ஷன் துண்டிக்கப்பட்டு நீங்கள் ஆஃப்லைனிற்கு சென்றாலும் கூட, சில ஆன்லைன் சேவைகளை அணுக முடிவது (எடுத்துக்காட்டிற்கு - ஆஃப்லைன் கூகுள் மேப்ஸ்) எப்போதுமே ஒரு வரம் தான்!

அந்த வரம் இப்போது ஜிமெயிலுக்கும் வந்துள்ளது!

அந்த வரம் இப்போது ஜிமெயிலுக்கும் வந்துள்ளது!

தொழில்முறை மற்றும் தனிப்பட்ட இமெயில் தேவைகளுக்காக, பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெயிலில், இன்டர்நெட் இல்லாமலேயே இமெயில்களை பார்க்க / படிக்க மற்றும் இமெயில்களுக்கு பதில் (ரிப்ளை) அனுப்ப உதவும் 'ஆஃப்லைன்' அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!

1.8 பில்லியன் யூசர்களும் எதிர்பார்த்த அம்சம்!

1.8 பில்லியன் யூசர்களும் எதிர்பார்த்த அம்சம்!

ஜிமெயில் எவ்வளவு பெரிய மின்னஞ்சல் சேவை என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியப்போவதில்லை. கடந்த ஆண்டு நிலவரப்படி 1.8 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஜிமெயிலைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் 75 சதவீத மக்கள் தங்கள் மொபைல் போன்களில் ஜிமெயிலை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் கூகுள் நிறுவனத்தின் இந்த இமெயில் சேவையானது, இமெயில் க்ளையண்ட் மார்க்கெட் ஷேரில் 18 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொண்டே, ஜிமெயிலில் 'ஆஃப்லைன்' அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Read, Reply மட்டுல்ல ஆஃப்லைனில் Search கூட செய்யலாம்!

Read, Reply மட்டுல்ல ஆஃப்லைனில் Search கூட செய்யலாம்!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான மவுண்டன் வியூவின் கூற்றுப்படி, ஜிமெயில் யூசர்கள் இப்போது இன்டர்நெட் உடன் இணைக்கப்படாத போதும் கூட இமெயில்களை படிக்கலாம், பதிலளிக்கலாம் மற்றும் ஜிமெயில் மெசேஜ்களை சேர்ச் (Search) செய்யலாம்.

இது கூகுள் நிறுவனத்தின், ஒரு டர்னிங்-பாயிண்ட் அம்சம் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் இது இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாத நேரத்தில் மட்டுமல்ல, மிகவும் மெதுவான / குறைவான இன்டர்நெட் வசதிகள் உள்ள இடங்களில், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் "வேற லெவலில்" உதவிகரமாக இருக்கும்.

ஜிமெயிலில் உள்ள ஆஃப்லைன் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

ஜிமெயிலில் உள்ள ஆஃப்லைன் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

ஜிமெயிலில் அணுக கிடைக்கும் ஆஃப்லைன் அம்சத்தை இயக்குவது மிகவும் எளிது. அதை செய்வது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ:

அதற்கு முன், கூகுளின் கூற்றுப்படி, இந்த 'ஆஃப்லைன் ஜிமெயில்' அம்சம் ஆனது கூகுள் க்ரோம் ப்ரவுஸரில் மட்டுமே வேலை செய்யும் மற்றும் இன்காக்னிட்டோ (Incognito) இல்லாத நார்மல் மோட்-இல் ப்ரவுஸ் செய்தால் மட்டுமே வேலை செய்யும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். அதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே "இதை" செய்ங்க.. இல்லனா?

பின்னர்...

பின்னர்...

- ஜிமெயிலில் உள்ள ஆஃப்லைன் அம்சத்தை பயன்படுத்த முதலில் mail.google.com க்குச் செல்லவும்.

- உங்கள் Inbox காணக்கிடைத்ததும், Settings அல்லது Cogwheel பட்டனை கிளிக் செய்யவும்.

- இப்போது See All Settings என்பதை கிளிக் செய்யவும்.

- குறிப்பிட்ட பக்கத்திற்கு நீங்கள் வந்ததும், அங்கே காணக்கிடைக்கும் Offline டேப்-ஐ கிளிக் செய்யவும்.

புதிய செட்டிங்ஸ் கிடைக்கும்.. புதிய ஜிமெயில் பிறக்கும்!

புதிய செட்டிங்ஸ் கிடைக்கும்.. புதிய ஜிமெயில் பிறக்கும்!

- பின்னர் Enable offline mail என்கிற செக்பாக்ஸை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தவுடன், ஜிமெயில் உங்களுக்கான புதிய Settings-ஐ காண்பிக்கும்.

- உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் இமெயில்கள் எத்தனை நாட்கள் வரை Sync செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

- மேலும் கூகுள், உங்கள் கம்ப்யூட்டரில் எஞ்சியிருக்கும் ஸ்பேஸின் அளவையும் காட்சிப்படுத்தும். உடன் ஆஃப்லைன் டேட்டாவை கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்யலாமா அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அனைத்து ஆஃப்லைன் டேட்டாவையும் அகற்றலாமா என்கிற விருப்பத்தையும் வழங்கும்.

- ஆஃப்லைன் டேட்டாவை கம்ப்யூட்டரிலேயே வைத்திருக்க வேண்டுமா அல்லது அகற்ற வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்ததும், Save Changes என்பதைக் கிளிக் செய்யவும். அவ்வளவு தான்; இனிமேல் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் ஆஃப்லைனில் கூட அட்டகாசமான வேலை செய்யும்!

Best Mobiles in India

English summary
Gmail Offline Now you can read reply email without internet here is how

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X