இன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது!

அதாவது இணையதள இணைப்பு இல்லாத இடத்தில் கூட, ஜிமெயிலின் முக்கியமான அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியும்.

By GizBot Bureau
|

ஜிமெயில் பயனர்களுக்காக இணையதளத்தில் ஒரு மிக முக்கியமான அம்சம் அளிக்கப்பட உள்ளது. இணையதளத்திற்கான ஜிமெயில், இப்போது ஆப்லைனிலும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இணையதள இணைப்பு இல்லாத இடத்தில் கூட, ஜிமெயிலின் முக்கியமான அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியும்.

இன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது!

இந்த நெட்டிவ் ஆப்லைன் சப்போர்ட் என்ற அம்சத்திற்கு, கிரோம் 61 தேவைப்படுவதோடு, அமைப்பு மெனுவில் வழக்கமான அணைக்கப்பட்ட நிலையில் (சுவிட்ச் ஆஃப்) இருப்பதை, இயக்கி விட வேண்டியுள்ளது.


முன்னதாக, ஒரு தனிப்பட்ட ஜிமெயில் ஆஃப்லைன் கிரோம் அப்ளிகேஷன் மூலம் ஜிமெயில் பயனர்களுக்கு, ஆஃப்லைனில் பணியாற்றும் வசதியை கூகுள் நிறுவனம் அளித்து இருந்தது. ஆனால் தற்போது அளிக்கப்பட உள்ள மேற்கண்ட அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு எந்தொரு தனிப்பட்ட அப்ளிகேஷனும் தேவைப்படுவது இல்லை.

இந்த ஆஃப்லைன் அம்சத்தின் மூலம் வைஃபை அல்லது டேட்டா இணைப்பு எதுவும் இல்லாமலேயே மெயில்களைத் தேடுதல், ஒரு புதிய மெயில் எழுதுதல் மற்றும் ஜிமெயிலில் உள்ள மின்னஞ்சல்களை நீக்குதல் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை நீங்கள் செய்ய முடியும். நீங்கள் ஆஃப்லைனில் செய்யும் எல்லா செயல்பாடுகளும், இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும் போது, தானாக செயல்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.

உங்கள் கிரோம் ப்ரவுஸரை, தற்போது உள்ள நவீன பதிப்பிற்கு புதுப்பித்து கொண்டு, ஜிமெயில் அமைப்புகளில் சென்று ஆஃப்லைன் முறையை இயக்கி விட வேண்டும். கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜிமெயிலின் புதிய பதிப்பு பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். அமைப்புகளுக்கு சென்று > ஆஃப்லைன் > ஆஃப்லைன் மெயிலை இயக்கவும்.

இந்த புதிய தேர்வுகளின் மூலம் உங்கள் ஆஃப்லைன் அனுபவத்தை அளிக்கக் கூடியவற்றை தேர்வு செய்யும், தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளவும் முடியும். இந்த புதிய தேர்வுகளில், ஆஃப்லைன் முறையில் ஜிமெயில் எந்த அளவிற்கு கொள்ளளவை பயன்படுத்துகிறது என்ற அளவை காட்டுகிறது. இதன்மூலம் நீங்கள் பார்ப்பதற்கு எத்தனை நாட்களுக்கு உரிய செய்திகள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது என்பதை தீர்மானிக்க உதவுகிறது. பொதுவாக இது 30 ஆக இருக்கும். இது தவிர, 7 மற்றும் 90 போன்ற மற்ற தேர்வுகளும் அளிக்கப்படுகின்றன.

இன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது!

மேலும் இதில் உள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பு மூலம் உங்கள் ஆஃப்லைன் டேட்டாவை கம்ப்யூட்டரில் வைக்க வேண்டிய இடம் அல்லது அதை வெளியேறிய உடன் விட்டுவிடலாம் என்று தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த ஆஃப்லைன் அம்சம், கிரோம் ப்ரவுஸரில் மட்டுமே செயல்படுகிறது. ஜி சூட் பயனர்கள், அட்மினிஸ்டேட்டர்ஸ் ஆகியவற்றிற்கு அவை இயக்கப்பட வேண்டியுள்ளது.
Best Mobiles in India

English summary
Gmail Gets Native Offline Support in Google Chrome Browser : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X