இனிமே Instagram-ல் யாராச்சும் அசிங்கமா மெசேஜ் அனுப்பினா.. Block பண்ணாம இப்படி செய்ங்க.. கதறிடுவாங்க!

|

"என்னது? இன்ஸ்டாகிராமில் (Instagram) அசிங்க அசிங்கமாக மெசேஜ் அனுப்புவாங்களா?" என்று ஷாக் ஆகும் அளவிற்கு இதுவொன்றும் புத்தம் புதிய பிரச்சனை அல்ல. கடந்த பல ஆண்டுகளாகேவ பெரும்பாலான சமூக ஊடக தளங்களில் நாமெல்லாம் சந்திக்கும் மிகவும் பொதுவான ஒரு பிரச்சனை தான். இருப்பினும் இன்ஸ்டாகிராம் என்பது அடிப்படையில் ஒரு போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்ம் (Photo, Video Sharing Platform) என்பதால் இங்கே "அந்த பிரச்சனை" சற்றே அதிகமாக உள்ளது! சந்தேகமாக இருந்தால்..?

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் (Active) ஆக இருக்கும் உங்களுடைய தோழிகளிடம், தங்கைகளிடம், அக்காக்களிடம் கேட்டுப்பாருங்கள்; கதை கதைகளாக சொல்லுவார்கள். அப்படியான சூழ்நிலைகளில், அதாவது இன்ஸ்டாகிராம் ஆப்பில் உள்ள டைரக்ட் மெசேஜஸ் (Direct Messages - DM) வழியாக சில "பொருத்தமற்ற" மெசேஜ்கள் வரும் போது பெரும்பாலான பயனர்கள் குறிப்பிட்ட மெசேஜ்களை அனுப்பியவரை பிளாக் (Block) செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால்..?

Instagram-ல் அசிங்கமா மெசேஜ் அனுப்புறவங்களுக்கு ஆப்பு அடிப்பது எப்படி?

இன்ஸ்டாகிராமில், மெசேஜ்கள் வழியாக உங்களை தொந்தரவு செய்யும் ஒருவரை பிளாக் செய்வது என்பது, அந்த நபரை ஒதுக்கி வைக்கும் ஒரு வழியாகுமே தவிர, அந்த நபரை தண்டிக்கும் ஒரு வழி அல்ல! உங்களுக்கு "அசிங்க அசிங்கமாக" மெசேஜ் அனுப்பியவர்களுக்கு நீங்கள் "ஆப்பு அடிக்க" வேண்டாமா? அப்படி செய்ய விரும்புபவர்களுக்கு ஒன்றல்ல, மொத்தம் 2 வழிகள் உள்ளன! அதென்ன வழிகள்? அவைகளை பின்பற்றுவதால் என்ன நடக்கும்? அதை எப்படி செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:

முதல் வழி - உங்களுக்கு கிடைத்த "பொருத்தமற்ற" மெசேஜை ரிப்போர்ட் (Report) செய்ய வேண்டும். அதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Instagram ஆப்பை திறக்கவும். பின்னர் DM செக்ஷனுக்கு சென்று, நீங்கள் ரிப்போர்ட் செய்ய விரும்பும் மெசேஜை உள்ளடக்கிய கான்வர்சேஷனை திறக்கவும். பின்னர் நீங்கள் ரிப்போர்ட் செய்ய விரும்பும் மெசேஜை லாங் பிரஸ் (Long Press) செய்யவும். இப்போது ஒரு பாப்-அப் மெனு தோன்றும்; அதில் இருந்து மோர் (More) என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ரிப்போர்ட் என்கிற பட்டனை கிளிக் செய்ய வேண்டியது தான். உங்களுக்கு தகாத மெசேஜ்களை ரிப்போர்ட் செய்வது மட்டுமின்றி, குறிப்பிட்ட மெசேஜை புகாரளிப்பதற்கான காரணத்தையும் கூட நீங்கள் தேர்வு செய்யலாம். இதன் கீழ் உங்களுக்கு பலவகையான விருப்பங்கள் கிடைக்கும். அதில் எதை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து, அதை தேர்வு செய்யவும். பின்னர் கடைசியாக சப்மிட் ரிப்போர்ட் (Submit Report) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

இரண்டாவது வழி - உங்களுக்கு தகாத மெசேஜ்களை அனுப்பும் ஒரு கான்வர்சேஷனையே (Conversation) ரிப்போர்ட் செய்வது. ஆம்! இன்ஸ்டாகிராமில் ஒரு குறிப்பிட்ட மெசேஜை மட்டுமல்ல, அந்த மெசேஜை உள்ளடக்கிய முழு உரையாடலையும் கூட உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியும். தற்போது வரையிலாக இந்த ஆதரவு தனிப்பட்ட சாட்களுக்கு (Personal Chat) மட்டுமே அணுக கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். அதாவது க்ரூப் சாட்டில் (Group Chat) இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் ஒரு பெர்சனல் சாட்டை ரிப்போர்ட் செய்ய விரும்பினால்..

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும். பின்னர் DM செக்ஷனுக்கு சென்று, நீங்கள் ரிப்போர்ட் செய்ய விரும்பும் கான்வர்சேஷனுக்குள் நுழையவும். பின்னர் ஸ்க்ரீனின் மேலே உள்ள, அந்த நபரின் ப்ரொபைல் நேமை-ஐ (Profile Name) கிளிக் செய்யவும். தவறுதலாக ப்ரொபைல் பிக்சரை (Profile Picture) கிளிக் செய்து விட வேண்டாம்; அப்படி செய்தால், குறிப்பிட்ட நபரின் அக்கவுண்ட்டிற்கு தான் செல்வீர்கள். சரியாக ப்ரொபைல் நேமை கிளிக் செய்தால் மட்டுமே டீட்டெயில்ஸ் (Details) என்கிற பிரிவிற்கு செல்வீர்கள். அங்கே கீழ் நோக்கி ஸ்க்ரோல் (Scroll) செய்ய ரிப்போர்ட் என்கிற ஆப்ஷன் கிடைக்கும்.

அதை கிளிக் செய்து, பின்னர் ரிப்போர்ட் செய்வதற்கான காரணத்தையும் தேர்ந்தெடுத்து, கடைசியாக சப்மிட் ரிப்போர்ட் என்கிற பட்டனை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்; வேலை முடிந்தது! இப்படியாக நீங்கள் ஒரு ரிப்போர்ட்-ஐ சமர்ப்பித்த பிறகு, குறிப்பிட்ட உரையாடலில் கடைசியாக அனுப்பப்பட்ட 30 மெசேஜ்களை, இன்ஸ்டாகிராம் நிறுவனம் மதிப்பாய்வு (Review) செய்யும். நீங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறலை (Intellectual property infringement) புகாரளிக்காத வரை, உங்கள் அறிக்கை அநாமதேயமாகவே (Anonymous) இருக்கும். அதாவது நீங்கள் ரிப்போர்ட் செய்த அக்கவுண்ட்டிற்கு, யார் ரிப்போர்ட் செய்தார்கள் என்கிற எந்த தகவலும் கிடைக்காது என்று அர்த்தம்!

Best Mobiles in India

English summary
Getting Abusive Or Offensive Messages on Instagram Here is How to Report A Message or Conversation

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X