Gemini Veo 3: போட்டோ டூ வீடியோ.. ஒரு அட்டை பெட்டி போதும்.. மினி நகரத்தை உருவாக்கலாம்.. எப்படி செய்வது?
கூகுள் நிறுவனம், ஜெமினி வியோ 3 (Gemini Veo 3) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது. 8 நொடிகளுக்கு ஏஐ வீடியோவை ஜெனரேட் செய்யும் இந்த மாடலானது, மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அண்மையில், போட்டோவை வீடியோவாக ஜெனரேட் செய்யும் பீச்சர் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண அட்டை பெட்டிக்குள் (போட்டோ) உங்களால் ஒரு மினி நகரத்தையே (வீடியோ) உருவாக்க முடியும். இதை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
* ஜெமினி வியோ 3 (Gemini Veo 3):
* அப்லோட் போட்டோ (Upload Photo):
* ப்ராம்ப்ட் கொடுங்கள் (Give A Prompt):
* ஆடியோ ஆப்ஷன் (Audio Option):
* ஜெனரேட் வீடியோ (Generate Video):

ஜெமினி வியோ 3:
கூகுள் ஜெமினி மொபைல் ஆப் அல்லது ஜெமினி வெப்சைட் ஆப் இதில் ஏதாவது ஒன்றை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) அல்லது கூகுள் ஏஐ அல்ட்ரா (Google AI Ultra) ஆகிய சந்தா இருந்தால் மட்டுமே இந்த போட்டோ டூ வீடியோ பீச்சர் (Photo To Video Feature) பயன்படுத்த கிடைக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அப்லோட் போட்டோ:
ஜெமினி ஆப்-ஐ ஓப்பன் செய்த பிறகு ப்ராம்ப்ட் பாக்ஸ் தோன்றும். அதன் வலது பக்கத்தில் பிளஸ் (+) ஐகான் இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்தால், கேமரா மற்றும் கேலரி போன்ற ஆப்ஷன் இருக்கும். இதில் நீங்கள் வீடியோவாக மாற்ற வேண்டிய போட்டோக்களை தேர்ந்தெடுத்து அப்லோட் செய்து கொள்ளுங்கள். அப்லோட் முடிந்த பிறகு ப்ராம்ப்ட் கொடுக்க வேண்டும்.

ப்ராம்ப்ட் கொடுங்கள்:
உங்களது போட்டோவை அடிப்படையாக கொண்டு உருவாக்க விரும்பும் வீடியோவை பற்றிய விளக்கத்தை பராம்ப்ட் பாக்ஸில் விரிவாக கொடுக்க வேண்டும். எடுத்தகாட்டாக, ஒரு அட்டை பெட்டியின் போட்டோவை அப்லோட் செய்துவிட்டு, அதில் இருந்து லிப்ட் மேலே வருகிறது என்று கொடுத்தால், அதேபோல 8 செகண்ட்களுக்கு வீடியோ ஜெனரேட் செய்து கொடுக்கப்படும்.
இதேபோல அந்த அட்டை பெட்டிக்குள் மினி நகரம் இருக்க வேண்டும் அல்லது சிறிய பொம்மை படகு தண்ணீரில் மிதக்க வேண்டும் என்று எந்தவித ப்ராம்ப்ட்டை கொடுத்தாலும், உங்களுக்கு 8 செகண்ட்களுக்கான வீடியோ தயார் செய்து கொடுக்கப்படும். இப்படி உங்களது பல்வேறு போட்டோக்களை அப்லோட் செய்து, அதற்கு ஏற்ப ப்ராம்ப்ட் கொடுக்கலாம்.

ஆடியோ ஆப்ஷன்:
போட்டோவில் இருந்து வீடியோவை உருவாக்கும்போது, உங்களுக்கு ஆடியோ வேண்டுமானாலும் அதையும் ஜெனரேட் செய்து கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒரு சோபாவை போட்டோ எடுத்துவிட்டு, அதை அப்லோட் செய்து கொள்ளுங்கள். இப்போது, ப்ராம்ப்ட் செய்யும்போது, அதில் ஒரு பூனை தூங்குகிறது. அது குறட்டை விடுகிறது என்றும் கொடுக்கலாம்.
அதேபோல அந்த பூனையில் கலர், உடல் வாகு, கண்கள் போன்ற எந்தவித கூடுதல் ஜெனரேஷனுக்கும் விரிவான ப்ராம்ப்ட் கொடுத்தால் போதும், உங்களுக்கு வீடியோ உருவாக்கி கொடுக்கப்படும். இப்படி பல்வேறு யோசனைகளுக்கு ஏற்ப போட்டோக்களை வீடியோக்களாக மாற்றி கொள்ளலாம். இது கிரியேட்டர்கள் மட்டுமல்லாமல், சாதாரண பயனருக்கும் பக்காவாக இருக்கும்.

மேற்கண்ட முறையில் போட்டோக்களை மாற்றுவது மட்டுமல்லாமல், ஒரு போட்டோ மூலம் டைம்-லேப்ஸ், ஏரியல் ஷாட் போன்ற வீடியோக்களையும் உங்களால் உருவாக்க முடியும். அதாவது, ஒரு சூரிய உதயத்தை போட்டோ எடுத்துவிட்டது, அது உதித்துக் கொண்டே மேலே வரும்படி உங்களால் வீடியோவை உருவாக்க முடியும். இப்படி, ஏராளமானவை இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








