கெடு வச்சாச்சு.. ஆதார் அட்டை வச்சி இருந்தா அலெர்ட்.. ஜூன் 14 வரை மட்டுமே.. அதுக்கு அப்புறம்?
ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்து இருக்கும் அனைவருக்குமே அது எவ்வளவு முக்கியமான ஆவணம் (Document) என்று நன்றாக தெரியும். பெயர், முகவரி, புகைப்படம், பயோமெட்ரிக் தரவு மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் போனறவைகளை ஒன்றாக உள்ளடக்கியது தான் ஆதார் அட்டை!
இருப்பினும் கூட, ஆதார் அட்டையில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகின்றன. இதற்காக ஆதார் அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (Unique Identification Authority of India - UIDAI) ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்துவதன் வழியாக ஆதாரில் உள்ள பிழைகளை திருத்தும் வசதியை வழங்குகிறது.

இதற்கிடையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் (Digital India initiative) கீழ், ஆதார் அட்டையில் உள்ள சில விவரங்களை இலவசமாக திருத்தும் சேவை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வசதி வருகிற ஜூன் 14 ஆம் தேதியோடு முடிவடைகிறது, அதன் பின்னர் ஆதார் அட்டையில் மாற்றங்கள் / திருத்தங்கள் செய்ய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஒவ்வொரு முறையும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்? ஜூன் 14 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை இலவசமாக திருத்தம் செய்வது எப்படி? ஆதார் அட்டையில் எந்தெந்த விவரங்களை மாற்றவே முடியாது? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்,.
ஆன்லைனில் மட்டுமே இலவசம், ஆதார் மையங்களில் அல்ல! ஆதார் அட்டை விவரங்களை இ-ஆதார் போர்ட்டல் வழியாக மட்டுமே இலவசமாக அப்டேட் செய்ய முடியும், ஒருவேளை நீங்கள் ஆதார் மையங்களுக்கு சென்றால் அங்கே ரூ.50 என்கிற கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஜூன் 14 வரை இலவசம், அதன் பின்னர்? "ஆதார் இலவச அப்டேட்" சேவையானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் இது ஜூன் 15 வரை மட்டுமே கிடைக்கும். ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு, ஆதாரை அப்டேட் செய்ய பயனர்கள் ரூ.50 செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் எந்த ஆதார் மையத்திற்கு சென்றாலும் இதே கட்டணம் பொருந்தும்.
ஆன்லைன் வழியாக என்னென்ன விவரங்களை அப்டேட் செய்ய முடியும்? ஜூன் 14 வரை அணுக கிடைக்கும் இலவச ஆதார் அப்டேட் சேவையின் கீழ் அடையாளச் சான்று (Proof of Identity - PoI) மற்றும் முகவரிச் சான்று (Proof of Address - PoA) ஆகியவற்றை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
என்னென்ன ஆதார் அட்டை விவரங்களை உங்களால் அப்டேட் செய்ய முடியாது? இந்த இலவச சேவையின் கீழ், ஆதாரில் உள்ள பெயர் (Name) , பாலினம் (Gender) மற்றும் பிறந்த தேதி (Birth date) அல்லது முகவரி (Address) உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்ய முடியாது.
பிஓஐ (PoI) மற்றும் பிஓஏ-வை (PoA) யாரெல்லாம் அப்டேட் செய்ய வேண்டும்? இந்திய நாட்டின் மக்கள் தொகை விவரங்களை மறுமதிப்பீடு செய்ய அடையாளச் சான்று (பிஓஐ) மற்றும் முகவரிச் சான்று (பிஓஏ) ஆவணங்களை யுஐடிஏஐ வலியுறுத்தி உள்ளது. குறிப்பாக இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படாத மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட மற்றும் ஆதார் அட்டைகளை நீங்கள் வைத்திருந்தால் அதை அப்டேட் செய்யவும்!
உங்களுடைய பிஓஐ மற்றும் பிஏஓ ஆவணங்களை பதிவேற்றும் முன், நீங்கள் உறுதி செய்ய வேண்டிய சில விஷயங்கள்: நீங்கள் பதிவேற்றும் ஆவணங்கள் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் பொருந்துகிறதா இல்லையா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ போர்ட்டலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி? யுஐடிஏஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (UIDAI website) உள்ள ஆதார் சுய சேவை போர்ட்டலுக்கு (Aadhaar Self Service Portal) செல்லவும். உங்கள் ஆதார் எண் (Aadhaar Number), கேப்ட்சா (Captcha) மற்றும் உங்கள் மொபைலுக்கு வந்த ஒடிபி (OTP) ஆகியவற்றை பயன்படுத்தி போர்ட்டலில் லாக்-இன் செய்யவும்.
இப்போது டாக்குமெண்ட் அப்டேட் பகுதிக்கு (Document Update section) சென்று, ஏற்கனவே உள்ள விவரங்களை மதிப்பாய்வு செய்யவும். பின்னர் ட்ராப்-டவுன் லிஸ்ட்டில் (drop-down list) இருந்து பொருத்தமான ஆவண வகையை தேர்ந்தெடுத்து, அவற்றை சரிபார்ப்பதற்காக அசல் ஆவணங்களின் (original documents) ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றம் செய்யவும்
பின்னர் உங்களுக்கு கிடைக்கும் சேவைக் கோரிக்கை எண்ணை (Service request number) குறித்து வைத்து கொள்ளவும். ஏனென்றால், இந்த எண்ணை வைத்து தான், நீங்கள் விடுத்த ஆதார் அப்டேட் கோரிக்கையின் செயல்முறை எந்த படிக்கு வந்துள்ளது என்பதை உங்களால் கண்காணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








