Wi-Fi-ல கனெக்ட் செஞ்ச Phone-ஐ யூஸ் பண்றீங்களா? அப்போ இது தேவைப்படும்!

|

100 க்கு 90 பேர் பாஸ்வேர்ட்களை (Password) மறைக்கிறார்களோ இல்லையோ.. மறந்து விடுகிறார்கள்!

ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன், இருக்குற எல்லா சோஷியல் மீடியாக்களிலும் (ஒரிஜினல்) அக்கவுண்ட்கள் கூடவே சில ஃபேக் ஐடிகள், அதுபோக கூகுள் அக்கவுண்டிற்கு ஒரு பாஸ்வேர்ட், ஜிமெயிலுக்கு ஒரு பாஸ்வேர்ட், அவ்வளவு ஏன்? வாட்ஸ்அப்பிற்கு கூட பாஸ்வேர்ட் போட்டால் எப்படி தான் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்!

அந்த பட்டியலில் வைஃபை பாஸ்வேர்ட்டும் உள்ளதா?

அந்த பட்டியலில் வைஃபை பாஸ்வேர்ட்டும் உள்ளதா?

அதாவது பாதுகாப்பான மற்றும் வலுவான பாஸ்வேர்ட்-ஐ செட் செய்ய வேண்டும் என்கிற காரணத்தினால்.. அல்லது அது தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்கிற ஆர்வத்தினால்.. ஏதோவொரு பாஸ்வேர்ட்-ஐ வைத்து விட்டு அதை மறந்து விட்டீர்களா?

ஆம் என்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்! மறந்துபோன வைஃபை பாஸ்வேர்ட்-ஐ உங்கள் ஆண்ட்ராய்டு போன் வழியாக மற்றும் பிசி வழியாக கண்டுபிடிப்பது எப்படி என்கிற எளிய வழிமுறைகளை தான் நாம் இங்கே காண உள்ளோம்!

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

Android ஸ்மார்ட்போன் வழியாக Wi-Fi பாஸ்வேர்ட்-ஐ Recover செய்வது எப்படி?

Android ஸ்மார்ட்போன் வழியாக Wi-Fi பாஸ்வேர்ட்-ஐ Recover செய்வது எப்படி?

நீங்கள் ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்கு பின்னால் வந்த ஓஎஸ்-ஐ கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது அந்த ஸ்மார்ட்போன் எந்த வைஃபை நெட்வொர்க் உடன் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கிறதோ அந்த வைஃபையின் பாஸ்வேர்ட்-ஐ கண்டறிய வழிவகுக்கும்.

அதோடு அந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நீங்கள் Save செய்து வைத்துள்ள எல்லா நெட்வொர்க்குகளின் பாஸ்வேர்ட்களையும் கூட நீங்கள் கண்டறியலாம்!

அதெப்படி?

அதெப்படி?

- உங்கள் Android ஸ்மார்ட்போனில் உள்ள Settings-ஐ கிளிக் செய்யவும்.

- பிறகு Wi-Fi டேப்-ஐ கிளிக் செய்யவும்

- நீங்கள் தற்போது பயன்படுத்தும் அல்லது நீங்கள் ஏற்கனவே Save செய்த Wi-Fi நெட்வொர்க்கின் "i" ஐ கிளிக் செய்யவும்.

- பின்னர் Wi-Fi QR கோட்-ஐ கிளிக் செய்யவும்.

2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!

இப்போது உங்கள் போனை அன்லாக் செய்ய வேண்டும்!

இப்போது உங்கள் போனை அன்லாக் செய்ய வேண்டும்!

- இப்போது "பாதுகாப்பு நோக்கத்திற்காக" ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய நீங்கள் பயன்படுத்தும் அன்லாக் பின், ஃபிங்கர் பிரிண்ட் அல்லது ஃபேஸ் லாக்கை பயன்படுத்தி ஸ்க்ரீனை ஓப்பன் செய்ய வேண்டியிருக்கும்.

- இப்போது உங்கள் ஸ்க்ரீனில் QR கோட் மற்றும் Wi-Fi பாஸ்வேர்ட் தோன்றும்; அவ்வளவு தான்!

- ஸ்க்ரீனில் தெரியும் ​​QR கோட்-ஐ ஸ்கேன் செய்து அல்லது காணப்படும் பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்தி மற்ற டிவைஸ்களையும் அதே வைஃபை-யின் கீழ் இணைக்கலாம்.

PC வழியாக Wi-Fi பாஸ்வேர்ட்-ஐ Recover செய்வது எப்படி?

PC வழியாக Wi-Fi பாஸ்வேர்ட்-ஐ Recover செய்வது எப்படி?

நீங்கள் விண்டோஸ் 11 பிசியை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் Save செய்யப்பட்டுள்ள வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிக்க, கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

- Start பட்டன் அருகில் உள்ள சேர்ச் பாரில் Control Panel என்று டைப் செய்யவும்.

- பின்னர் அணுக கிடைக்கும் கண்ட்ரோல் பேனலுக்குள் சென்று Network and Internet என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்

- அதை தொடர்ந்து வரும் ஸ்க்ரீனில் காணப்படும் Network and Sharing Center-ஐ கிளிக் செய்யவும்.

- பின்னர் அதன் கீழ் இருக்கும் Connections-ஐ கிளிக் செய்யவும்.

IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது ​உங்களுக்கு தேவையான வைஃபை நெட்வொர்க்கின் பெயரை தேர்வு செய்யவும்.

- பிறகு Wi-Fi Status என்பதன் கீழ் Wireless Properties-ஐ கிளிக் செய்யவும்

- இப்போது Wireless Network Properties-இல் உள்ள Security என்கிற டேப்-ஐ கிளிக் செய்து, Show characters என்கிற செக்-பாக்ஸை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

- இப்போது நீங்கள் கண்டறிய விரும்பிய Wi-Fi Password ஆனது Network security key box-இல் தெரியும்!

Best Mobiles in India

English summary
Forgot Wi Fi Password Here is How to Recover it From Your Android Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X