ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்டு மறந்து விட்டதா? ரிக்கவர் செய்வது எப்படி?

சிலர் மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டு தங்களது பாஸ்வேர்டுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்திருப்பர், எனினும் பலர் இவ்வாறு செய்வதில்லை. இவ்வாறு ஆகும் போது, புது பாஸ்வேர்டை பெறுவது எப்படி

|

கூகுள் அக்கவுன்ட் சேவையை பயன்படுத்தும் போது சில சமயங்களில், பாஸ்வேர்டு மறந்து போகும் நிலையை நம்மில் பலரும் எதிர்கொண்டு இருப்போம். ஒரே பாஸ்வேர்டினை ஜிமெயிலுக்கும் செட் செய்திருக்கும் போது நிலமை இன்னும் மோசமாகி விடும். இதைவிட ஹேக்கர்கள் உங்களது கூகுள் அக்கவுன்ட்டை ஹேக் செய்து உங்களது பாஸ்வேர்டை மாற்றியிருப்பின் நிலமை மேலும் மோசமாகி விடும்.

ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்டை மீட்பது எப்படி?

சிலர் மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டு தங்களது பாஸ்வேர்டுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்திருப்பர், எனினும் பலர் இவ்வாறு செய்வதில்லை. இவ்வாறு ஆகும் போது, புது பாஸ்வேர்டை பெறுவது எப்படி?

 கூகுள்

கூகுள்

1 - கூகுள் லாக் - இன் பக்கத்திற்கு சென்று ‘Forgot password?' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

 பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

நீங்கள் இறுதியாக நினைவில் வைத்திருக்கும் பாஸ்வேர்டினை பதிவு செய்ய வேண்டும். எந்த பாஸ்வேர்டும் நினைவில் இல்லாத பட்சத்தில் ‘Try another way' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வெரிஃபிகேஷன்

வெரிஃபிகேஷன்

இனி கூகுள் உங்களக்கு வெரிஃபிகேஷன் நோட்டிஃபிகேஷனை, உங்களது கூகுள் அக்கவுன்ட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பலாமா என கேட்கும்.

மொபைல் நம்பர்

மொபைல் நம்பர்

உங்களது மொபைல் நம்பர் உங்களிடம் இல்லாத பட்சத்தில், கூகுள் உங்களுக்கான வெரிஃபிகேஷன் கோடினை மாற்று மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும். மாற்று மின்னஞ்சல் முகவரி இல்லாத பட்சத்தில் ‘Try another way' ஆப்ஷனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

இனி கூகுள் உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கேட்கும். இதை கொடுத்ததும், உங்களுக்கான வெரிஃபிகேஷன் குறியீட்டை அனுப்பும்.

 டயலாக் பெட்டி

டயலாக் பெட்டி

உங்களுக்கான வெரிஃபிகேஷன் குறியீட்டை பெற்றதும், கூகுளின் டயலாக் பெட்டியில் பதிவு செய்ய வேண்டும்.

 மூன்றாம் தரப்பு செயலி

மூன்றாம் தரப்பு செயலி

இவ்வாறு செய்ததும், நீங்கள் ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட்டை இயக்க முடியும்.


பாஸ்வேர்டை மாற்றியதும், புது பாஸ்வேர்டை வேறு எங்கேனும் பதிவு செய்து கொள்வது நல்லது. இதற்கு மூன்றாம் தரப்பு செயலிகளான LastPass உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். நீங்கள் க்ரோமில் எந்த சேவையை பயன்படுத்தினாலும் ‘Save password' ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கூகுள் உங்களது பாஸ்வேர்டை பதிவு செய்து கொண்டு, அடுத்த முறை லாக் இன் செய்யும் போது உங்களுக்கு நினைவூட்டும். ஆப்பிள் நிறுவனம் இதே போன்று ‘iCloud Keychain' சேவையை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Forgot Gmail or Google account password? Here’s how to recover : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X