ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து கம்ப்யூட்டருக்கு வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?
இந்த கேள்விக்கு பெரும்பாலானோரின் பதில் டேட்டா கேபிள், ப்ளூடூத் அல்லது சில சமயங்களில் வைபை டைரக்ட் உள்ளிட்டவற்றில் ஒன்றாக தான் இருக்கும்.
ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் தகவல்களை கம்ப்யூட்டருக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும் எனில் உங்களது நினைவில் தோன்றும் முதல் யோசனை என்ன?
இந்த கேள்விக்கு பெரும்பாலானோரின் பதில் டேட்டா கேபிள், ப்ளூடூத் அல்லது சில சமயங்களில் வைபை டைரக்ட் உள்ளிட்டவற்றில் ஒன்றாக தான் இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யலாம் என்றாலும் இவற்றை மேற்கொள்ள பல்வேறு வழிகளை கடக்க வேண்டியிருக்கும்.

இவற்றை கடந்து வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்வது சற்றே எளிய காரியம் எனலாம். மொபைலில் இருக்கும் தகவல்களை கம்ப்யூட்டருக்கு வயர்லெஸ் முறையில் பரிமாற்ரம் செய்வதற்கான வழிகளை தொடர்ந்து பார்ப்போம்.
முதலில் இருக்க வேண்டியவை:
வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்ய ஒருமுறை செட்டப் மற்றும் வைபை கனெக்டிவிட்டி அவசியம் ஆகும். பயனர்கள் இதற்கென மூன்றாம் தரப்பு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

தேவையானவை:
சீராக இயங்கும் இணைய இணைப்பு.
ஆண்ட்ராய்டு ஸ்மாப்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் ஒரே வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1 - முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று FTP முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலிகளில் ஒன்றை டவுன்லோடு செய்யவும். (ES file explorer, MX file explorer போன்றவற்றை தேர்வு செய்யலாம்)
2 - விரும்பிய செயலியை இன்ஸ்டால் செய்ததும், அதில் FTP அல்லது View on PC போன்ற ஆப்ஷன்களை தேடவும்.
3 - உங்களது மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் ஒரே வைபை நெட்வொர்க்கில் இணைந்திருக்கிறதா என சரிபார்க்க வேண்டும்.
4 - இனி செயலியில் இருந்து FTP டிரான்ஸ்ஃபர் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்யவும்.
5 - இனி கம்ப்யூட்டரில் 'This PC’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
6 - அடுத்து 'Add a network location’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
7 - இனி Next பட்டனை க்ளிக் செய்யவும்.
8 - அடுத்து ஃபைல் மேனேஜர் செயலியில் இருக்கும் நெட்வொர்க் யு.ஆர்.எல்.-ஐ பதிவிட வேண்டும்.
9 - யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு பதிவிட வேண்டும். இவ்வாறு செய்ய வேண்டாமெனில் Logon anonymously ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
10 - நெட்வொர்க் டிரைவ் பெயரை பதிவிட்டு Next பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
11 - இனி Finish பட்டன் க்ளிக் செய்து வழிமுறையை நிறைவு செய்யவும்.
12 - அடுத்து கம்ப்யூட்டரில் டிரைவை தேடவேண்டும்.
13 - டிரைவை இருமுறை க்ளிக் செய்து திறக்கவும்.


Click it and Unblock the Notifications








