WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!

|

WhatsApp தான் எல்லாமே - என்று நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் மறுகையில், "வாட்ஸ்அப் செம்ம மொக்கை.. Telegram தான் வெயிட்டான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம்" என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், பல கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் கூட இல்லாத சில "அட்வான்ஸ்டு" அம்சங்கள் டெலிகிராம் ஆப்பில் உள்ளன. அப்படியான ஒரு அம்சத்தை பற்றித்தான் நாம் விரிவாக பார்க்க உள்ளோம்!

இந்த அம்சம் WhatsApp-க்கு வர இன்னும் எவ்ளோ காலம் ஆகுமோ!

இந்த அம்சம் WhatsApp-க்கு வர இன்னும் எவ்ளோ காலம் ஆகுமோ!

டெலிகிராம் ஆப்பில் அணுக கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட அம்சம், "வாட்ஸ்அப்பிற்கு வந்து சேர இன்னும் எவவ்ளவு காலம் ஆகுமோ?" என்று கேட்கும் அளவிற்கு மிகவும் நவீன அம்சமாக திகழ்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது வாட்ஸ்அப்பிற்கு "இப்போதைக்கு" வராது!

அது Schedule message (ஷெட்யூல் மெசேஜ்) ஆகும். அதாவது நீங்கள் கடிகாரத்தில் காலை 6 மணிக்கு அலாரம் 'செட்' செய்வது போல, டெலிகிராம் ஆப் வழியாக ஒரு குறிப்பிட்ட மெசேஜை, யாருக்கு? சரியாக எத்தனை மணிக்கு அனுப்ப வேண்டும் என்பதை 'செட்' செய்யலாம்.

WhatsApp-க்கு புது அப்டேட்: ஒருவழியாக அந்த 3 பிரச்சனைகளும் ஒழிந்தது!WhatsApp-க்கு புது அப்டேட்: ஒருவழியாக அந்த 3 பிரச்சனைகளும் ஒழிந்தது!

12 மணிக்கு Birthday Wish முதல் சரியான நேரத்தில் Job Profile அனுப்புவது வரை!

12 மணிக்கு Birthday Wish முதல் சரியான நேரத்தில் Job Profile அனுப்புவது வரை!

நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த நாள் மெசேஜ் அனுப்ப வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியில் வேலைக்காக உங்களின் ரெஸ்யூம்-ஐ ஷேர் செய்ய வேண்டுமா?

இப்படி எதுவாக இருந்தாலும் சரி, டெலிகிராமின் 'ஷெட்யூல் மெசேஜ்' அம்சம் உங்களுக்கு கைகொடுக்கும். மேலும் முக்கியமான மெசேஜ்களை சரியான நேரத்தில் அனுப்புவதை மறக்கும் வேலையே இனி இருக்காது. இன்னொரு முக்கியமான மேட்டர் என்னவென்றால் - இப்படி ஒரு அம்சம் WhatsApp-இல் "இதுவரை" இல்லை!

Telegram ஆப்பில் ஒரு Message-ஐ Schedule செய்வது எப்படி?

Telegram ஆப்பில் ஒரு Message-ஐ Schedule செய்வது எப்படி?

- முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Telegram ஆப்பை திறந்து, நீங்கள் யாருக்கு ஒரு ஷெட்யூல் மெசேஜை அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்; பின்னர் குறிப்பிட்ட காண்டாக்ட்டின் சாட் பாக்ஸிற்கு செல்லவும்.

- நீங்கள் ஒரு சாட் பாக்ஸில் நுழைந்தவுடன், நீங்கள் ஷெட்யூல் செய்ய விரும்பும் மெசேஜை டைப் செய்யவும்.

- இப்போது மிகவும் கவனமாக 'Send message' பட்டனை லாங்-பிரஸ் செய்யவும், அதாவது டக்கென்று கிளிக் செய்யாமல், நீண்ட நேரம் கிளிக் செய்யவும். அப்படி செய்ய, டெலிகிராம் ஆப்பில் ஒரு விண்டோ பாப்-அப் ஆகும்.

"ரகசியத்தை" அம்பலப்படுத்திய Airtel அதிகாரி! அப்புறம் என்ன Jio ரீசார்ஜ் செஞ்சிடுங்க!

முதலில் 2 ஆப்ஷன்கள்.. கடைசியில் ஒரு ப்ளூ பட்டன்!

முதலில் 2 ஆப்ஷன்கள்.. கடைசியில் ஒரு ப்ளூ பட்டன்!

- காட்சிப்படும் பாப் அப் விண்டோவில் உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும். ஒன்று, மெசேஜ்களை பற்றி பெறுநருக்கு 'நோட்டிஃபைடு' செய்யாமல் அனுப்பப்படும் சைலன்ட் மெசேஜ் என்கிற விருப்பம். இன்னொன்று - ஷெட்யூல் மெசேஜ்' என்கிற விருப்பம். அதில் Schedule Message-ஐ கிளிக் செய்யவும்.

- இப்போது ஷெட்யூல் செய்ய விரும்பும் மெசேஜ் ஆனது சரியாக எந்த தேதியில், எத்தனை மணிக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை நீங்கள் 'செட்' செய்ய வேண்டும்.

- சரியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்த பின்னர், அதற்கு கீழே உள்ள நீல நிற பட்டனை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

இதோடு உங்கள் வேலை முடிந்தது; மிச்சத்தை டெலிகிராம் பார்த்துக்கொள்ளும்!

இதோடு உங்கள் வேலை முடிந்தது; மிச்சத்தை டெலிகிராம் பார்த்துக்கொள்ளும்!

ஒரு ஷெட்யூல் மெசேஜை 'செட்' செய்த பின்னர், அந்த மெசேஜ் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதும் உங்களுக்கு ஒரு நோட்டிபிக்கேஷன் கிடைக்கும்.

இப்படியாகத்தான்.. பதட்டம் இல்லாமல், மீண்டும்-மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளாமல், யாருக்கு? எப்போது? எந்தவொரு மெசேஜை அனுப்ப வேண்டும் என்றாலும், டெலிகிராம் அதை மிகவும் கூலாக செய்ய வழிவகுக்கிறது!

வாட்ஸ்அப் இப்போது தான் மெல்ல மெல்ல.. நல்ல நல்ல யூஸர் ப்ரைவஸி செட்டிங்ஸ்-களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த பட்டியலில் 'ஷெட்யூல் மெசேஜ்' போன்ற அம்சங்கள் இப்போதைக்கு வருமா என்பது சந்தேகமே!

Best Mobiles in India

English summary
Forget To Send Important Message On Time Use Telegram Schedule Message Feature Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X