Home
How to

உடனே செக் பண்ணுங்க.. ஆதார் மற்றும் பான்.. ரெண்டுலயும் "இது" ஒரே மாதிரி இருக்கணும்.. இல்லனா சிக்கல்!

மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக (Identification Document) பார்க்கப்படும் பான் காரட்டில் (PAN Card) இருக்கும் எல்லா தகவல்களும் மிகவும் சரியானதாக இருக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதேனும் சிறு தவறு இருந்தாலும் கூட.. அது இன்றில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் உங்களுக்கு சிக்கலை உண்டாக்கலாம்!

அதிலும் குறிப்பாக உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை (Aadhaar Card) ஆகிய இரண்டிலுமே ஒரே முகவரி இருப்பது மிகவும் நல்லது. ஒருவேளை இரண்டிலும் ஒரே முகவரி இல்லையென்றால், அல்லது பான் காரட்டில் உள்ள முகவரி தவறானதாக இருந்தால்.. கவலைப்பட வேண்டாம், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ஆதாரை பயன்படுத்தி உங்கள் பான் கார்டில் உள்ள முகவரியை மாற்றுவது எப்படி?

ஆன்லைன் வழியாக.. ஆதாரை பயன்படுத்தி பான் கார்டில் உள்ள முகவரியை மாற்றுவது எப்படி?

01. முதலில் யுடிஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெக்னாலஜி மற்றும் சர்வீஸ் லிமிடெட்டின் UTI Infrastructure Technology and Service Ltd) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://www.utiitsl.com) செல்லவும்.

02. பின்னர் கீழ்நோக்கி ஸ்க்ரோல் (Scroll) செய்து பான் கார்டு சேவைகள் (PAN card services) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

03. அதன் பிறகு, இகேஒய்சி மோட் (eKYC Mode) என்கிற விருப்பத்தின் வழியாக அட்ரெஸ் அப்டேட் இன் பான் டேட்டாபேஸ் (Address update in PAN Database) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

04. அங்கே பான் நம்பர், ஆதார் நமபர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் நம்பர் உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து ஆதார் பேஸ் இகேஒய்சி அட்ரெஸ் அப்டேட் (Aadhaar base eKYC Address Update) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

05. இப்போது உங்களுக்கு கிடைக்கும் கேப்ட்சா (Captcha) குறியீட்டை உள்ளிட்டு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உடன்படிக்கைக்கான (Terms and conditions agreement) செக்பாக்ஸை 'டிக்' செய்யவும்.

06. பின்னர் சப்மிட் (Submit) பட்டனை கிளிக் செய்யவும். இப்போது ​ஆதார் உடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் நம்பருக்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) ஒன்று அனுப்பிவைக்கப்படும்.

07. உங்களுக்கு கிடைத்த ஒடிபி-ஐ (OTP) உள்ளிட்டு, மறுபடியும் சப்மிட் (Submit) பட்டனை கிளிக் செய்யவும்.

08. அவ்வளவு தான் வேலை முடிந்தது. இப்போது உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரி உங்கள் பான் அட்டையிலும் அப்டேட் செய்யப்படும். இதுகுறித்த உறுதிப்படுத்தல் தகவலானது, ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கும் மற்றும் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் வந்து சேரும்.

ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள முகவரி ஒரே மாதிரி இருப்பது அவசியமா?

முன்னரே குறிப்பிட்டபடி, ஆதார் அட்டைடை பயன்படுத்தி பான் கார்டில் உள்ள முகவரியை அப்டேட் செய்து, இரண்டிலும் ஒரே முகவரி இடம்பெறுவதை உறுதிசெய்தால், இந்த இரண்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் பயன்படுத்தி நீங்கள் செய்யும் வருங்கால செயல்முறைகளில் ஏற்படக்கூடிய சாத்தியமான குழப்பம் அல்லது சிக்கல் முற்றுலுமாக தவிர்க்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Follow These 8 Simple Steps To Change or Update Your PAN Card Address Using Aadhaar Via Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X