பழைய ஸ்மார்ட்போன்களை பயனுள்ள கருவிகளாக மாற்றுவது எப்படி?

உங்களது பழைய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலைக்கு விற்றிடவோ,அல்லது வீணாக வைத்திருக்கவோ விரும்பவில்லையா நீங்கள்.இதோ உங்களது பழைய ஸ்மார்ட்போன்களை பயனுள்ள பொருட்களாக மாற்றி பயன்படுத்திட எளிய வழிகள்.

By Ilamparidi
|

இப்போது காலக்கட்டத்தில் நமக்கு ஸ்மார்ட்போன்களின் தேவையானது அதிகரித்த வண்ணமே உள்ளது.நம்முடைய வாழ்வின் அத்தியாவசிய தேவைகளினைப் பூர்த்தி செய்திடவும் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாத ஒன்று.அத்தகைய காரணத்தால் புதுப்புது அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களானது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் வெளிவந்த வண்ணமேயுள்ளது.

அத்தகைய ஸ்மார்ட்போன்களை நாம் குறிப்பிட்ட கால பயன்பாட்டிற்கு பிறகு புதிய அம்சங்களினையுடைய ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்த துவங்குகிறோம்.அப்போது குறைந்த விலைக்கு அல்லது பயன்படுத்திய ஸ்மார்ட்போனை விற்பதற்கு மனமில்லாமல் வீணாக வைத்திருப்போம்.இனி அவ்வாறு வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.

இதோ உங்களது பழைய ஸ்மார்ட்போன்களை பயனுள்ளவகையில் உபயோகிப்பதற்கான எளிய வழிகள்.

கார் டேஷ் கேமரா:

கார் டேஷ் கேமரா:

உங்களது பழைய ஸ்மார்ட்போனினை பயனுள்ள வகையில் பயன்படுத்திட முதல் வழி உங்கள் ஸ்மார்ட்போனை கார் டச் கேமராவாக பயன்படுத்துவதேயாகும்.இதற்கு டேஷ் கேமராவாக பயன்படுத்திட காரின் டேஷ் போர்டு பகுதியில் பொருத்திட ஏதுவான சக்க்ஷன் கப் விண்டோ ஸ்டாண்ட் போன்ற ஏதேனும் ஒன்றாகும்.இப்போது 'கார் டிவிஆர் அண்ட் ஜிபிஎஸ்' மற்றும் 'ஆட்டோகார்டு டேஷ்கேம்' போன்ற டேஷ் கேமரா ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துகொள்ளவேண்டும்.

இவை முறையே 2 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் அக்மாண்டெட் ஜிபிஎஸ் மற்றும் ஒரே நேரத்தில் முன் மற்றும் பின் பக்க கேமராக்களின் வழியாக விடீயோக்களை ரெகார்ட் செய்யும் அம்சங்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளன.இதன் மூலமாக மேப்,மற்றும் கார் டேஷ் கேமராவாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டைம்லேப்ஸ்:

டைம்லேப்ஸ்:

இது ஓர் போட்டோகிராபி முறையாகும்.இதன் மூலமாக நமது வாழ்வின் அழகியல் தருணங்களை நாம் புகைப்படங்களாக பதிவு செய்துகொள்ளலாம்.இதற்கு உங்களது பழைய ஸ்மார்ட்போனில் லேப்ஸ் இட் போன்ற ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துகொண்டு டிஎஸ்எல்ஆர் முறையினை எனேபிள் செய்து நேரத்தினை குறிப்பிட்டு வைத்துவிட்டால் போதும்.இதன் மூலமாக நாம் சிறந்த புகைப்படங்கள் ஆகியவற்றினை பெறலாம்.

அறிவியல் ஆய்வுகள்:

அறிவியல் ஆய்வுகள்:

இத்தகைய முறையானது உங்களது பழைய ஸ்மாட்ர்ட்போனை பயன்படுத்துவதற்கு சிறந்ததொன்றாகும்.பயோனிக் ஆப்பினை இன்ஸ்டால் செய்துகொண்டு கம்ப்யூட்டிங் குழுமத்தில் பிரருடன் இணைவதன் மூலம் நாம் அறிவியல் குறித்த தகவல்களை பெறுவது உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ளலாம்.

போட்டோ பிரேம்:

போட்டோ பிரேம்:

நமது பழைய டேப்லட்களை வீணாக வைத்திருப்பதற்கு பதிலாக அதனை பயனுள்ளவகையில் போட்டோ பிரேமாக பயன்படுத்தலாம்.இதற்கு டேப்லெட் ஸ்டாண்ட் தேவை.பிறகு சென்ட் பிரேம்,போட்டோ பிரேம் உள்ளிட்ட செயலிகளை இன்ஸ்டால் செய்துகொண்டு அதனை வழியாக உங்கள் பழைய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை பயனுள்ளதாக மாற்றலாம்.

மீடியா பிளேயர்:

மீடியா பிளேயர்:

பழைய ஸ்மார்ட்போன்களில் உங்களுக்கு பிடித்தமான பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றினை ஸ்டார் செய்து விஎல்சி,எம்எக்ஸ் பிளேயர் உள்ளிட்ட ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துகொண்டு எம்எச்எல் மற்றும் எச்டிஎம்எல் கேபிள்கள் கொண்டு இணைத்துக்கொண்டு உங்களது டிவி வழியாக மகிழ்ச்சியாக காணலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்துவதற்கான 7 சுவாரஸ்ய வழிகள்.!

Best Mobiles in India

English summary
Five Ways to Turn Your Old Android Phone Into a Brand New Gadget.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X