தொலைந்த ஸ்மார்ட்போனை எப்படிக் கண்டுபிடிப்பது? சூப்பர் டிப்ஸ்!

|

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது ஸ்மார்ட்போன்கள் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன, இன்னும் சிலர் தங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன் மாடலை அதிகப் பணம் செலவு செய்து வாங்கி இருப்பர்.

தொலைந்த ஸ்மார்ட்போனை எப்படிக் கண்டுபிடிப்பது? சூப்பர் டிப்ஸ்!

இப்படி ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் சிலருக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும். உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கிய டிராக்கராக இருக்க போவது இதுதான்

முக்கிய டிராக்கராக இருக்க போவது இதுதான்

முதலில் செய்யவேண்டிய முக்கியமான விஷயம் உங்கள் மொபைலில் டேட்டா ஆக்டிவ் செய்து, லொகேஷன் ஆன் செய்து கூகுள் அக்கௌன்ட் உடன் உங்கள் போனை இணைப்பது தான். இந்த எளிய முறை தான் உங்கள் போனை கண்டுபிடிக்க முக்கிய டிராக்கராக இருந்து செயல்படும்.

டெஸ்க்டாப்பில் இருந்து ஸ்மார்ட்போனை மீட்க

டெஸ்க்டாப்பில் இருந்து ஸ்மார்ட்போனை மீட்க

  • உங்கள் தொலைந்த போனை மீட்பதற்கு முக்கியமான ஆயுதம் ஜிமெயில் தான்.
  • தொலைந்த போன்களை கண்டுபிடிப்பதற்காகவே பல சேவைகளை ஜிமெயில் கொண்டுள்ளது.
  • உங்கள் ஜிமெயில் அக்கௌன்டிற்குள் லாகின் செய்துகொள்ளுங்கள்.
  • வலது மேல் மூலையில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்யுங்கள்.
  • கூகுள் அக்கௌன்ட் கிளிக் செய்யுங்கள்.
  • நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கிய இந்தியர்: இது எங்க போய் முடியுமோ? நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கிய இந்தியர்: இது எங்க போய் முடியுமோ?

    செக்யூரிட்டி ஆப்ஷன்

    செக்யூரிட்டி ஆப்ஷன்

    இடதுபுறத்தில் உள்ள செக்யூரிட்டி ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
    இப்பொழுது 'Find a lost or stolen phone' கிளிக் செய்யுங்கள்.
    நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் சாதனத்தின் பெயரை கிளிக் செய்யுங்கள்.
    உங்கள் ஜிமெயில் பாஸ்வோர்டை டைப் செய்து ஆக்டிவ் செய்துகொள்ளுங்கள்.

    மொபைலில் இருந்து ஸ்மார்ட்போனை மீட்க

    மொபைலில் இருந்து ஸ்மார்ட்போனை மீட்க

    • உங்கள் போனில் உள்ள ஜிமெயில் செயலியை கிளிஸ்க் செய்யுங்கள்.
    • உங்கள் நண்பர் போனில் இருந்து உங்கள் போனை தேடுவதாக இருந்தால் 'add another account' கிளிக் செய்யுங்கள்.
    • உங்கள் ஜிமெயில் லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்டை டைப் செய்து லாகின் செய்துகொள்ளுங்கள்.
    • மேல சென்று செக்யூரிட்டி ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
    • அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் குறைந்த விலையில் பிஎஸ்என்எல் நீண்ட நாள் பிளான்.!அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் குறைந்த விலையில் பிஎஸ்என்எல் நீண்ட நாள் பிளான்.!

      யுவர் டிவைசஸ் ஆப்ஷன்

      யுவர் டிவைசஸ் ஆப்ஷன்

      • கீழே உள்ள யுவர் டிவைசஸ் 'Your devices' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
      • இப்பொழுது 'Find a lost or stolen phone' கிளிக் செய்யுங்கள்.
      • நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் சாதனத்தின் பெயரை கிளிக் செய்யுங்கள்.
      • உங்கள் ஜிமெயில் பாஸ்வோர்டை டைப் செய்து ஆக்டிவ் செய்துகொள்ளுங்கள்.
      • தொலைந்த போனிற்கு சத்தமாக ரிங்க்டோன் கொடுக்க

        தொலைந்த போனிற்கு சத்தமாக ரிங்க்டோன் கொடுக்க

        இம்முறையைப் பயன்படுத்தி, தற்பொழுது எங்கு உங்களுடைய தொலைந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது என்பதை மேப் மூலம் கண்டுபிடிக்கலாம். உங்கள் போன் உள்ள இடத்திற்கு அருகில் சென்ற பின் Play Sound கிளிக் செய்தால், தொடர்ச்சியாக 5 நிமிடங்களுக்கு உங்களுடைய போன் ரிங்க்டோன் உடன் சத்தமாக ரிங் ஆகும். உங்கள் போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங்டோனுடன் ரிங் ஆகும்.

        கூகுள் ஸ்மார்ட்போன் விற்பனை டபுள் மடங்கு: இதுதான் சுந்தர் பிச்சை ரகசியம்.!கூகுள் ஸ்மார்ட்போன் விற்பனை டபுள் மடங்கு: இதுதான் சுந்தர் பிச்சை ரகசியம்.!

        தொலைந்த ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்களை எப்படி அழிப்பது

        தொலைந்த ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்களை எப்படி அழிப்பது

        இங்குதான் Google's Secure Device சேவை முக்கியத்துவம் பெறுகிறது.
        இந்த சேவை மூலம் தொலைந்த உங்கள் போனை உடனடியாக லாக் செய்ய முடியும்.
        உங்கள் போனில் நீங்கள் பின் நம்பர் அல்லது பாஸ்வோர்டு எதுவும் போடவில்லை என்றாலும் லாக் செய்துவிடும்.
        உங்கள் கூகுள் அக்கௌன்ட்டில் இருந்து லாக் அவுட் செய்து உங்கள் டேட்டாகளை பாதுகாத்துக்கொள்ளும்.

         டேட்டாக்கள் அனைத்தும் அழிக்க

        டேட்டாக்கள் அனைத்தும் அழிக்க

        • உங்கள் கூகுள் அக்கௌன்ட் லாக் அவுட் செய்தலும் உங்களால் உங்கள் போனை லோகேட் செய்ய முடியும்.
        • இந்த சேவையில் உள்ள Erase the Device சேவையை கிளிக் செய்தால் தொலைந்த ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்கள் அனைத்தும் அழிக்கப்படும்.
        • இதற்குப் பின் தொலைந்த உங்கள் ஸ்மார்ட்போனை லொகேட் செய்ய முடியாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
        • ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.! ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.!

          கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் ஆப்

          கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் ஆப்

          • கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Google's Find My Device செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
          • ஜிமெயில் ரெக்கவரி(Gmail recovery) சேவை போலவே இந்த கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் செயலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
          • உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை லாகின் செய்துகொள்ளுங்கள்.
          • லொகேஷன் ஆக்டிவ் செய்து கொள்ளுங்கள்.
          • போன் உள்ள இடத்தை கண்டுபிடிக்க

            போன் உள்ள இடத்தை கண்டுபிடிக்க

            • நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் சாதனத்தின் பெயரை கிளிக் செய்யுங்கள்.
            • இந்த செயலியின் சிறப்பு இது உங்களுக்கு இன்-டோர் மேப் அனுமதியை வழங்குகிறது.
            • இதனால் மிகத் துல்லியமாக உங்கள் போன் உள்ள இடத்தை கண்டுபிடிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
find your lost phone using google services : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X