போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!

|

நாங்கள் சொல்லித்தான் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் "பரிதாப" நிலை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

ஒருபக்கம் ரிலையன்ஸ் ஜியோ, மறுபக்கம் பார்தி ஏர்டெல் என இரண்டு டெலிகாம் ஜாம்பவான்களின் மத்தியில் வோடாபோன் ஐடியா என்ன செய்வதென்று தெரியாமல், விழிபிதுங்கி நிற்கிறது.

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 36 மாதங்கள்!

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 36 மாதங்கள்!

ஒரு வோடாபோன் ஐடியா கஸ்டமரை பார்த்து, ஏன் இந்த நெட்வொர்க்கில் இருந்து வெளியேற விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அவர் பெரிய விளக்கங்கள் எதையும் கூற மாட்டார். வெறுமனே "மோசமான நெட்வொர்க்" என்று தான் கூறுவார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்நிறுவனத்தின் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 36 மாதங்களுக்கு குறைந்துள்ளது.

Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி "Reached Safely" மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல!

அந்த பக்கம் கோடிகள்.. இந்த பக்கம் சில லட்சம்!

அந்த பக்கம் கோடிகள்.. இந்த பக்கம் சில லட்சம்!

நிதி நெருக்கடியில் உள்ள விஐ நிறுவனத்தில், கடந்த ஆண்டு வெறும் 14 லட்சம் புதிய 4ஜி சந்தாதாரர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒப்பிடுகையில், ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் 3.4 கோடி புதிய வாடிக்கையாளர்களும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் 2 கோடி வாடிக்கையாளர்களும் சேர்ந்து உள்ளனர்.

இந்நிலைப்பாட்டில் தான் அழாத குறையாக VI ஒரு காரியத்தை செய்துள்ளது!

இந்நிலைப்பாட்டில் தான் அழாத குறையாக VI ஒரு காரியத்தை செய்துள்ளது!

அது என்னவென்றால், வோடபோன் ஐடியா சேவையில் இருந்து வெளியேற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அட ஆமாங்க! தங்கள் மொபைல் நம்பரை 'போர்ட்' செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களிடம், எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கும் ரீசார்ஜ் பேக் இல்லை என்றாலும் கூட, அவர்கள் போர்ட்-அவுட் மெசேஜ்களை அனுப்ப அனுமதிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

உள்ள அழுகுறேன்.. வெளிய சிரிக்கிறேன்!

உள்ள அழுகுறேன்.. வெளிய சிரிக்கிறேன்!

இதற்கு முன்னதாக, விஐ கஸ்டமர்கள் போர்ட்-அவுட் எஸ்எம்எஸ்-ஐ பெற வேண்டும் என்றால், அதிக விலையுள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

கஸ்டமர்களை பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான வளர்ச்சியாகும். ஆனால் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் என்றால் - "உள்ள அழுகுறேன்.. வெளிய சிரிக்கிறேன்!" என்று தான் இருக்கும்.

வெளியேறும் கஸ்டமர்கள் மீது என்ன திடீர் பாசம்!

வெளியேறும் கஸ்டமர்கள் மீது என்ன திடீர் பாசம்!

பாசமும் இல்லை; பாயசமும் இல்லை! பிரத்யேக எஸ்எம்எஸ் நன்மைகளை கொண்டிராத யூசர்களுக்கும் கூட எஸ்எம்எஸ் அனுப்பும் ஆதரவை வழங்குமாறு, நாட்டில் உள்ள டெலிகாம் ஆப்ரேட்டர்களை டிராய் (TRAI) கேட்டுக்கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு தான் வோடபோன் ஐடியாவின் இந்த புதிய நடவடிக்கையே வந்துள்ளது.

ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி "இது" தான் மாஸ்!

போர்ட்-அவுட் மெசேஜ் என்றால் என்ன?

போர்ட்-அவுட் மெசேஜ் என்றால் என்ன?

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டிக்கான ( Mobile Number Portability - MNP) ஆதரவு கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகே, குறிப்பிட்ட டெலிகாம் நிறுவனத்தின் சேவையில் நீடிக்க விரும்பாத பயனர்கள் 'போர்ட்' செய்வதன் வழியாக தங்களின் தற்போதைய நெட்வொர்க்கில் இருந்து வெளியேறி, மற்றொன்றிற்கு மாற முடிந்தது.

1900 க்கு ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும்!

1900 க்கு ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும்!

ஒருவர் தன் மொபைல் நம்பரை போர்ட் செய்வதற்கு, முதலில் அது தொடர்பான கோரிக்கையை எழுப்ப வேண்டும். அதற்காக அவர் 1900 என்கிற எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை அனுப்ப வேண்டும்.

அந்த மெசேஜ் தான், போர்ட்-அவுட் மெசேஜ் என்று என்று அழைக்கப்படுகிறது.

இருப்பினும், எஸ்எம்எஸ் அனுப்புவதை "ஆதரிக்காத", அதாவது எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காத ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருப்பவர்களுக்கு போர்ட்-அவுட் மெசேஜ் ஒரு தலைவலியாக இருந்தது.

ஏனெனில் தங்கள் போன்களில் 'பேலன்ஸ்' இருந்தாலும் கூட எஸ்எம்எஸ் அனுப்பும் ஆதரவு இல்லாத காரணத்தினால், அவர்களால் போர்ட்-அவுட் மெசேஜை அனுப்ப முடியவில்லை.

இதற்காக அவர்கள் எஸ்எம்எஸ் நன்மையை வழங்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது. தற்போது இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது!

10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!

கருணை தான்.. ஆனாலும் காசு கொடு!

கருணை தான்.. ஆனாலும் காசு கொடு!

பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது தான். ஆனாலும் விஐ கஸ்டமர்களால் இலவசமாக எஸ்எம்எஸ்களை (அதாவது போர்ட்-அவுட் மெசேஜ்களை) அனுப்ப முடியாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதற்காக கட்டணங்கள் வசூலிக்கப்படும் மற்றும் அது டால்க் டைமிலிருந்து கழிக்கப்படும்.

விஐ சேவையில் இருந்து வேறொரு சேவைக்கு போர்ட் செய்வது எப்படி?

விஐ சேவையில் இருந்து வேறொரு சேவைக்கு போர்ட் செய்வது எப்படி?

நீங்களொரு வோடபோன் ஐடியா வாடிக்கையாளர் என்றால், நீங்கள் விஐ நிறுவனத்தின் சேவைகள் மீது செம்ம கடுப்பில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் நம்பரை போர்ட் செய்ய திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால், அதை செய்வது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ:

- முதலில் PORT என்று டைப் செய்து, அதனை தொடர்ந்து உங்கள் மொபைல் நம்பரை டைப் செய்து 1900 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும். எடுத்துக்காட்டிற்கு PORT என்று டைப் செய்து அனுப்பவும்.

- நீங்கள் அதை அனுப்பியதும் UPC, அதாவது யுனிக் போர்டிங் கோட் (Unique Porting Code) உடனான ஒரு மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்; அவ்வளவு தான்!

உங்களுக்கு வந்த UPC கோட்-ஐ பத்திரமாக வைத்துக்கொள்ளவும். ஏனெனில் நீங்கள் போர்ட் செய்ய விரும்பும் 'கேரியர்' பக்கத்தில் இருந்து மிகவும் முக்கியமாக கேட்கப்படும் விவரங்களில் இந்த யுபிசி கோடும் அடங்கும்.

உடன் குறிப்பிட்ட சேவைக்கான போர்டிங் செயல்முறையை முடிக்க சில அடிப்படை ஆவணங்களையும் உங்களிடம் இருந்து கேட்பார்கள்

அவ்ளோதான்.. புது சிம் கார்டு.. ரெடி!

அவ்ளோதான்.. புது சிம் கார்டு.. ரெடி!

இந்த போர்டிங் செயல்முறையின் முடிவில், நீங்கள் மாற விரும்பும் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து ஒரு புதிய சிம் கார்ட்டை பெறுவீர்கள்.

அது சிறிது நேரம் கழித்தே ஆக்டிவேட் செய்யப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்; உடனே ஆக்டிவேட் செய்யப்படாது.

ஒருவேளை நீங்கள் வேறு ஒரு நெட்வொர்க்கில் இருந்து வோடபோன் ஐடியாவிற்கு போர்ட் செய்கிறீர்கள் என்றாலும் கூட, இதே செயல்முறையை தான் பின்பற்ற வேண்டும்.

Best Mobiles in India

English summary
Finally Vodafone Idea Users Send Mobile Number Porting Request Message Without SMS Plan Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X