ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் அசத்தலான அப்டேட்.!

By Prakash
|

ஃபேஸ்புக் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் இப்போது புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பொறுத்தவரை வீடியோ அல்லது வாய்ஸ் கால் செய்யும் போது நண்பர்களை உடன் இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மெசன்ஜர் செயலியில் எண்ணற்ற கேம்களை, பேஸ்புக் நிறுவனம் சேர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இப்போது பேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் அம்சங்களை பார்ப்போம்.

 க்ரூப் வீடியோ கால்:

க்ரூப் வீடியோ கால்:

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் அசத்தலான அப்டேட் பொறுத்தவரை வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் செய்யும் போது இணைப்பை துண்டிக்காமல், நண்பர்களை இணைத்து க்ரூப் கால் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன்பு:

இதற்குமுன்பு:

மெசன்ஜர் செயலியில் இதற்குமுன்பு க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள அனைத்து அழைப்புகளையும் துண்டித்து விட்டு பின் மீண்டும் இன்பாக்ஸ் மூலம் புதிய அழைப்பினை மேற்கொள்ளவேண்டி இருந்தது. தற்சமயம் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு மக்களுக்கும் உபயோகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்முறை:

செயல்முறை:

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வீடியோ அல்லது வாய்ஸ் கால் அழைப்பில் இருக்கும் போதே திரையை கிளிக் செய்து 'add person'தேர்வு செய்து நீங்கள் பேச வேண்டிய நபரை இணைத்துக் கொள்ளலாம்.

ஃபில்ட்டர்கள்:

ஃபில்ட்டர்கள்:

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய க்ரூப் கால் அப்டேட் வசதியில் ஃபில்ட்டர்கள் மற்றும் எஃபெக்ட்கள் இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

அப்டேட்:

அப்டேட்:

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் பயன்படும் மேலும் வாட்ஸ்ஆப் செயலியை விட பல்வேறு அம்சங்கள் இவற்றில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
 இந்தியா:

இந்தியா:

இந்தியாவில் பல மில்லியன் மக்கள் தற்சமயம் பேஸ்புக் செயலியை அதிகளவு பயன்படுத்துகின்றனர், தகவல்கள், செய்திகள், போன்ற அனைத்து வசதிகளுக்கும் உதவியாக உள்ளது இந்த பேஸ்புக் செயலி.

Best Mobiles in India

English summary
Facebook Messenger now lets you add more people to in progress calls; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X