Home
How to

பேங்க் பக்கமே போக வேணாம்.. ரூ.2000 நோட்டுகளை Amazon டெலிவரி பாய்கிட்ட கொடுத்து எக்ஸ்சேன்ஜ் செய்வது எப்படி?

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், வங்கிகளில் டெபாசிட் செய்யவும் சிரமப்பட்டு வருகின்றன. நினைவூட்டும் வன்ணம், கடந்த மே 19ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கியானது (Indian Reserve Bank) அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெற முடிவு செய்தது.

அதன் பின்னர், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை அவரவர் வங்கி கணக்குகளில் டெபாசிட் (Deposit in Banks) செய்யலாம் அல்லது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அவைகளை மாற்றிக்கொள்ள (Exchange) வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 நோட்டுகளை Amazon கிட்ட கொடுத்து எக்ஸ்சேன்ஜ் செய்வது எப்படி?

இந்த விஷயத்தில் இந்திய மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தின் கீழ், அமேசான் (Amazon) நிறுவனமானது க்ளீன் நோட் பாலிசி (Clean Note Policy) என்கிற பெயரின் கீழ், தங்கள் வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை எளிமையாக எக்ஸ்சேன்ஜ் செய்து கொள்ளும் வாய்ப்பை அறிவித்திருந்தது.

அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கேஷ் ஆன் டெலிவரிகளின் (Cash on Delivery - COD) போது, வாடிக்கையாளர்கள் தங்களுடைய அமேசான் பே பேலன்ஸ்களை (Amazon Pay Balance) தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி டாப்-அப் செய்து கொள்ளலாம்.

அதாவது 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அமேசான் வழியாக நீங்கள் வாங்கிய பொருளுக்கான பணத்தையும் கொடுத்துவிடலாம் மற்றும் மீதமுள்ள தொகையை அமேசான் பே வேலட்டில் (Amazon Pay Wallet) பேலன்ஸ் ஆகவும் லோட் (Load) செய்து கொள்ளலாம். ஒருவேளை இதை செய்வது எப்படி என்கிற குழப்பம் உங்களிடம் இருந்தால்.. கீழ்வரும் எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்.

அமேசான் வழியாக ரூ.2000 நோட்டுகளை எக்ஸ்சேன்ஜ் செய்வதற்கு முன்பாக, உங்கள் அமேசான் ஆப்பில் வீடியோ கேஒய்சி (Video KYC) செயல்முறை ஒன்றை முடிக்க வேண்டும். கேஒய்சி செயல்முறை முடிந்ததும், கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தின் கீழ் அமேசான் வழியாக ஒரு பொருளை ஆர்டர் செய்யவும்.

குறிப்பிட்ட பொருள் டெலிவரி செய்யப்படும் போது, அதை டெலிவரி செய்யும் அமேசான் ஏஜெண்டிடம் உங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை ஒப்படைக்கலாம். அதை பெற்றுக்கொள்ளும் டெலிவரி ஏஜென்ட் மீதமுள்ள தொகையை பணமாக தருவதற்கு பதிலாக, அதை உங்களுடைய அமேசான் பே பேலன்ஸில் உடனடியாக சேர்ப்பார்.

அப்படியாக உங்கள் அமேசான் பே வேலட்டில் சேர்க்கப்பட்ட தொகையை, ஆன்லைன் ஷாப்பிங் அல்லது க்யூஆர் ஸ்கேன்களை பயன்படுத்தி பணம் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புதல் அல்லது ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமோட்டோ (Zomato) போன்ற ஆப்கள் வழியிலான டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி, உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை அமேசான் பே பேலன்ஸாக மாற்ற உதவும் இந்த வசதியை பயன்படுத்த நீங்கள் கட்டாயம் கேஒய்சி செயல்முறையைச் செய்து முடிக்க வேண்டியது அவசியம். அதை செய்யாத அமேசான் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி அணுக கிடைக்காது.

Best Mobiles in India

English summary
Exchange Rs 2000 Currency Note With Amazon Agent Convert Into Your Amazon Pay Balance Instantly How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X