Home
How to

WhatsApp வழியா பணம் அனுப்புற எல்லாருமே இந்த 2 விஷயத்தையும் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

அடிக்கடி பணம் அனுப்பினாலும் சரி அல்லது எப்போதாவது ஒரு முறை பணம் அனுப்பினாலும் சரி, வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக பணம் (Payment) அனுப்பும் பழக்கம் / வழக்கம் உள்ள அனைவருமே 2 முக்கியமான விஷயங்களை கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மான வாட்ஸ்அப் வழியாக மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், கிஃப்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் போன்றவைகளை அனுப்புவதோடு சேர்த்து பணமும் அனுப்ப முடியும். இந்த வசதி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது.

WhatsApp வழியாக பேமண்ட் ஹிஸ்டரி & பேங்க் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

கூகுள் பே, பேடிஎம் பல இதுவும் பாதுகாப்பானது தான்.. ஆனாலும்!

வாட்ஸ்அப்பின் இந்த பில்ட்-இன் பேமண்ட் ஆப்ஷன் (Built-in Payment Option), கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற பேமண்ட் ஆப்களின் வழியாக பணம் அனுப்புவது போன்றே மிகவும் பாதுகாப்பான ஒரு செயல்முறையாகும். ஏனென்றால் இதுவும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI - Unified Payments Interface) வழியாக வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பவும், பெறவும் அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் பேமண்ட் செய்யும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 2 விஷயங்கள்:

வாட்ஸ்அப் பேமண்ட் ஆப்ஷன் மிகவும் பாதுகாப்பான செயல்முறையாக இருந்தாலும் கூட, வாட்ஸ்அப் வழியாக நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் தொகை குறித்த பேமண்ட் ஹிஸ்டரியை அவ்வவ்போது சரிபார்ப்பது நல்லது. அதோடு சேர்த்து வாட்ஸ்அப் வழியாக பேங்க் பேலன்ஸை (Bank Balance) செக் செய்வது எப்படி என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ளவது நல்லது.

ஆண்ட்ராய்டு போனில் உள்ள வாட்ஸ்அப் வழியாக பேமண்ட் ஹிஸ்டரியை செக் செய்வது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து, ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள த்ரீ-டாட் மெனு (Three-dot Menu) பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் மெனுவிலிருந்து பேமண்ட் (Payment) என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஹிஸ்டரி (History) என்பதன் கீழ் உங்கள் முந்தைய பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்துவிவரங்களையும் பார்க்கலாம்.

ஐபோனில் உள்ள வாட்ஸ்அப் வழியாக பேமண்ட் ஹிஸ்டரியை செக் செய்வது எப்படி?

ஐபோனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து செட்டிங்ஸ் (Settings) டேப்பிற்கு செல்லவும். பின்னர் பேமண்ட்ஸ் (Payments) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். அதை தொடர்ந்து பேமென்ட் ஹிஸ்டரியை (Payment History) கிளிக் செய்யவும். இப்போது உங்களுடைய பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பார்க்க முடியும்.

வாட்ஸ்அப் வழியாக பேங்க் பேலன்ஸை செக் செய்வது எப்படி?

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து மோர் (More) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். ஒருவேளை நீங்கள் ஐபோனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், செட்டிங்ஸ் (Settings) விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் பேமென்ட்ஸ் (Payments) என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் பேமென்ட் மெதேட்ஸ் (Payment methods) என்பதை கிளிக் செய்து உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை (Bank Account) கிளிக் செய்யவும். இப்போது வியூ அக்கவுண்ட் பேலன்ஸ் (View Account Balance) என்பதை கிளிக் செய்யவும். கடைசியாக உங்கள் யுபிஐ பின் (UPI PIN) நம்பரை உள்ளிட்டு உங்கள் பேங்க் பேலன்ஸை செக் செய்யவும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Everyone Who Send Money Through WhatsApp Need To Know How to View Payment History and Bank Balance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X