Home
How to

இந்த 2 WhatsApp ட்ரிக்கை எல்லாரும் தெரிஞ்சுக்கணும்.. 5 செக்கெண்ட் போதும்.. டக்குனு மறைச்சுடலாம்!

எல்லா விஷயங்களையுமே எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவ்வப்போது சில விஷயங்களை சிலரிடம் இருந்து மறைக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும் தான். இந்த வாக்கியம் / வார்த்தைகள் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ.. வாட்ஸ்அப் சாட்களுக்கு (WhatsApp Chat) கண்டிப்பாக 100% பொருந்தும்!

இதனால் தான் வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமானது, மற்ற எதை விடவும் யூசர் எக்ஸ்பீரியன்ஸின் (User Experience) மீது அதிக கவனம் மற்றும் அதிக அக்கறை செலுத்துகிறது. வாட்ஸ்அப் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்நிறுவனம் வெளியிடும் தொடர்ச்சியான அப்டேட்களே (Updates) அதற்கு சாட்சி!

இந்த 2 WhatsApp ட்ரிக்கை எல்லாரும் தெரிஞ்சுக்கணும்!

அப்படியாக சமீபத்தில் அறிமுகமான, மிகவும் பயனுள்ள ஒரு வாட்ஸ்அப் அம்சம்தான் சாட் லாக் (Chat Lock). இதன் பெயர் குறிப்பிடுவது போலவே இது உங்கள் வாட்ஸ்அப் சாட்களை மறைக்க உதவும் ஒரு அம்சமாகும். ஒருவேளை இந்த அம்சத்தை நீங்கள் இப்போது தான் கேள்விப்படுகிறீர்கள் என்றால்.. வாருங்கள் இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்:

வாட்ஸ்அப் சாட் லாக் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி? மிகவும் ரகசியமான மெசேஜ்கள் (Secret Messages) அல்லது வேறு யாரும் பார்க்க / படிக்க கூடாத மெசேஜ்களை உள்ளடக்கிய வாட்ஸ்அப் சாட்களை 'லாக்' செய்ய அனுமதிக்கும் இந்த அம்சம், ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது.

சுவாரசியமாக இந்த அம்சம் உங்களுக்கு வரும் நோட்டிஃபிக்கேஷன்களை (Notifications) தானாகவே சைலன்ட் (Silent) ஆக்கும், மேலும் லாக்டு (Locked) சாட்டில் இருந்து புதிய மெசேஜ் வந்துள்ளது என்பதையும் உங்களுக்கு தெரிவிக்கும். இந்த அம்சத்தை எப்படி இயக்குவது என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து, அதிலுள்ள ஏதேனும் ஒரு சாட்டிற்கு செல்லவும், பின்னர் குறிப்பிட்ட சாட்டின் ப்ரோஃபைலுக்குள் (Profile) செல்லவும், ப்ரோஃபைலுக்குள் சென்றதும் கீழ் நோக்கி ஸ்க்ரோல் (Scroll Down) செய்து சாட் லாக் (Chat Lock) அம்சத்தை கிளிக் செய்யவும்.

இப்போது ஃபிங்கர் பிரிண்ட் (Finger Print) மூலம் குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட்டை லாக் செய்யவும்; ஃபிங்கர் பிரிண்ட்-ஐ பயன்படுத்த விரும்பாதவர்கள் ஃபேஸ் ஐடி (Face ID) அம்சத்தையும் பயன்படுத்தலாம். அவ்வளவு தான் வேலை முடிந்தது. இனிமேல் லாக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்டை உங்களை தவிர்த்து வேறு யாராலும் திறக்க முடியாது.

ஒருவேளை லாக் செய்து வைக்கும் அளவிற்கு வாட்ஸ்அப் மெசேஜ்களில் பெரிய ரகசியங்கள் இல்லை. ஆனாலும் அவைகள் வாட்ஸ்அப் ஹோம் ஸ்க்ரீனில் இருந்து மறைத்து வைக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால்.. அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது தான் ஆர்ச்சிவ் சாட் (Archive Chat) விருப்பம்!

குறிப்பிட்ட ஒரு வாட்ஸ்அப் சாட்-ஐ ஆர்ச்சிவ் செய்வது எப்படி? முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் சாட்டை லாங் பிரஸ் (Long Press) செய்யவும். பின்னர் மேல் வலது மூலையில் தெரியும் ஆர்ச்சிவ் ஐகானை (Archive Icon) கிளிக் செய்யவும். அது கீழ்நோக்கிய அம்புக்குறியுடனான ஒரு ஃபோல்டர் போல காட்சியளிக்கும்.

ஆர்ச்சிவ் ஐகானை கிளிக் செய்த வேகத்தில் குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட் ஆனது உங்கள் ஹோம் ஸ்க்ரீனில் இருந்து மறைந்துவிடும். அது ஆர்ச்சிவ்டு (Archived) என்கிற பிரத்யேக ஃபோல்டரில் சேர்க்கப்படும். சுவாரசியமாக ஆர்ச்சிவ் செய்யப்பட்டாலும் கூட அது நோட்டிஃபிக்கேஷனை காட்டும், மேலும் அதை எப்போது வேண்டுமானலும் அன்ஆர்ச்சிவ் (UnArchive) செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Every Whatsapp Users Should Know these 2 Tricks Which Helps to Hide Secret Chats Within 5 Seconds
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X