Home
How to

இது தெரியாம போச்சே.. ரூ.50 க்கும் கம்மியான விலைக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா பெறுவது எப்படி?

நீங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி சந்தாவை (JioHotstar OTT Subscription) வழக்கமாக ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தினை கொண்டிருந்தால், அதை வெறும் ரூ.44 க்கு பெறுவது எப்படி என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுவாரசியமாக இது வி (Vi) என்கிற வோடாபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு தான் அணுக கிடைக்கிறது. அதாவது ரூ.44 க்கு ஜியோ ஹாட்ஸ்டாரை பெற நீங்கள் வி சிம் கார்டு வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited - VIL) ஆனது அதன் நுகர்வோருக்காக ரூ.44 ப்ரீபெய்ட் திட்டத்தை (Vi Rs.44 Prepaid Plan) வழங்குகிறது. இந்த ரூ.44 திட்டத்துடன் பயனர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் வழங்கப்படுகிறது.

ரூ.50 க்கும் கம்மியான விலைக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா பெறுவது எப்படி?

ஜியோஹாட்ஸ்டாரை பயன்படுத்துவதற்கு இந்த ரூ.44 திட்டம் ஒரு சரியான விலையாகும். நீங்கள் குறிப்பாக சமீபத்திய டிவி நிகழ்ச்சிகள், துரந்தர் 2, அல்லது அடுத்தடுத்து வரும் விளையாட்டு போட்டிகளை பார்க்க விரும்பினால், வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். இந்த ரூ.44 திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். அதாவது இந்த திட்டம் உங்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டியை (Service Validity) வழங்கும் என்று என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

வேறு என்னதான் வழங்கும்? வோடபோன் ஐடியா ரூ.44 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் என்ன? வோடபோன் ஐடியாவின் ரூ.44 ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி டேட்டாவுடன் மட்டுமே வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தின் முக்கிய நன்மை, பயனர்களுக்காக இணைக்கப்பட்டுள்ள ஓடிடி (OTT) சந்தாவாகும். ரூ.44 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இலவச பயன்பாடு கிடைக்கிறது.

இந்த திட்டத்துடன், உங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவானது 28 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் ரூ.44 உடன் வரும் 1ஜிபி டேட்டா நன்மை ஆனது, ரீசார்ஜ் செய்த நாளன்று இரவு 11:59 மணிக்கு காலாவதியாகிவிடும். மேலே குறிப்பிட்டபடி, இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு எந்த சேவை காலமும் கிடைக்காது. வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் (Outgoing SMS) நன்மைகளும் இல்லை. மலிவான விலையில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை தேடும் வி கஸ்டமர்களுக்கு மட்டுமே இது பொருத்தமானதாக இருக்கும்.

மூன்று மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை பெறுவது எப்படி? நீங்கள் விரும்பினால், ஜியோ ரீசார்ஜ் தளத்தின் திட்டங்கள் பிரிவிலிருந்து நேரடியாக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வாங்கலாம். இந்த மொபைல் சந்தா மிகவும் மலிவானது, மேலும் இது மூன்று மாதங்களுக்கான தொகுப்பாக வருகிறது. மூன்று மாதங்களுக்கு, இந்த திட்டத்தை நீங்கள் ஜியோ தளத்திலிருந்து வெறும் ரூ.149 க்கு பெறலாம்

வோடபோன் ஐடியாவில் ரூ.44 செலவழித்தாலும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். மாற்றாக, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் டேட்டாவுடன் கூடிய ஜியோஹாட்ஸ்டார் மொபைல் திட்டங்களையும் நீங்கள் பெறலாம். உண்மையில், நீங்கள் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணம் கொண்ட திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், ஜியோ இன்று பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் டிவி அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரீசார்ஜ் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, ஐடெல் (Itel) நிறுவனம் தனது 4ஜி ஃபீச்சர் போன் (4G Feature Phone) பயனர்கள் இப்போது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.123 மாதாந்திர திட்டத்தை (Reliance Jio Rs.123 monthly plan) ரீசார்ஜ் செய்வதற்கு தகுதி பெற்று உள்ளனர் என்று அறிவித்து உள்ளது. ரூ.123 ரீசார்ஜ் திட்டத்துடன், ஐடெல் பயனர்கள் ஜியோவின் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களையும் அணுகலாம்.

இதில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரூ.234 பிளான், 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் ரூ.369 பிளான் மற்றும் 336 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் ரூ.1234 பிளான் ஆகியவைகளையும் ரீசார்ஜ் செய்யலாம், இவை ஒவ்வொன்றும் தினசரி 0.5 ஜிபி டேட்டா உடன் வருகின்றன. முன்பு ஜியோவின் சொந்த ஃபீச்சர் போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த திட்டங்கள், இப்போது ஐடெல்லின் அனைத்து 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களிலும் கிடைக்கின்றன. இதுகுறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
https://tamil.gizbot.com/news/itel-4g-feature-phones-now-eligible-to-recharge-jio-rs-123-rs-234-rs-369-rs-1234-plans-069571.html

Best Mobiles in India

English summary
Every Vodafone Idea SIM Customers Need to Know This How to get JioHotstar OTT Access For Just Rs 44
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X