Home
How to

Google Pay, PhonePe கதையை முடித்த BHIM.. பேங்க் அக்கவுண்ட் CIBIL Score க்கு அதிரடி மாற்றம்.. எப்படி பார்ப்பது?

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு சிபில் ஸ்கோர் (CIBIL Score) எவ்வளவு முக்கியம் என்று தெரியும். இதை பொறுத்தே கடன் வழங்குதல், கடன் தொகை உள்ளிட்டவை முடிவு செய்யப்படும். இதை சரிபார்க்க கூகுள் பே, போன்பே, பேடிம் ஆப்களுக்கு செல்ல வேண்டியது கிடையாது.

தனியார் வசம் இருக்கும் யுபிஐ (UPI) ஆப்களுக்கு மாற்றாக இந்திய அரசின் கீழ் செயல்பட்டுவருகிற என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது பீம் ஆப்பை (BHIM App) கொண்டுவந்துள்ளது. இதில் ஒட்டுமொத்த சேவைகளும் இலவமாக கொடுக்கப்பட்டு வருகின்றன.

Google Pay, PhonePe கதையை முடித்த BHIM.. CIBIL Score க்கு மாற்றம்!

இப்போது, பேங்க் கஸ்டமர்களுக்கு முக்கியமானதாக இருக்கும் சிபில் ஸ்கோர் சரிபார்ப்பு (CIBIL Score Checking) இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) வழியாக சிபில் ஸ்கோர் விவரங்கள் காண்பிக்கப்படுகின்றன. பீம் ஆப் வழியாக சிபில் ஸ்கோர் சரிபார்ப்பை செய்வது எப்படி என்பதற்கான விவரங்கள் இதோ.

படி 1. பீம் யுபிஐ ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். முகப்பு பக்கத்தில் இருக்கும் று விருப்பங்கள் தோன்றும் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (Financial Services) விருப்பத்துக்கு செல்ல வேண்டும்.
படி 2: இதில் இலவச சிபில் ஸ்கோர் (Free CIBIL Score) விருப்பம் தோன்றும். ஓப்பன் செய்தால், சிபில் ஸ்கோர் தொடர்பான விவரங்கள் கொடுக்கப்படும். கீழே இருக்கும் ப்ரொசீடு (Proceed) விருப்பம் இருக்கும். இதை கிளிக் செய்ய வேண்டும்.

படி 3: மொபைல் நம்பர் (Mobile Number) இடம்பெற்றிருக்கும். இதை சரிபார்த்துவிட்டு, கீழே பார்த்தால், பான் கார்டு (PAN Card) விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும். பெயர், பான் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இதை கொடுத்துவிட்டால், கீழே 2 பாக்ஸ்கள் இருக்கும். இதை டிக் செய்ய வேண்டும்.
படி 4: இப்போது, மீண்டும் ப்ரொசீடு கொடுக்க வேண்டும்.இப்போது, பான் கார்டு விவரங்களை வைத்து, சிபில் ஸ்கோர் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு காண்பிக்கப்படும்.

மேலும், கூகுள் பே ஆப் வழியாக சிபில் ஸ்கோர் சரிபார்ப்பு செய்ய விரும்பினால், முதலில் ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். முகப்பு பக்கத்தில் இருந்து கீழே ஸ்க்ரோல் செய்து செல்லுங்கள். இறுதியில் இலவசமாக உங்களது சிபில் ஸ்கோரை சரிபாருங்கள் (Check your CIBIL Score for free) இதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

முதல்முறை செய்தால், பான் கார்டு விவரங்கள் கேட்கப்படலாம். இதை கொடுத்துவிட்டால், முழு சிபில் ஸ்கோர் விவரங்களும் கொடுக்கப்பட்டுவிடும். 300 முதல் 900 வரையில் ஸ்கோர் இருக்கும். இதில் 681 க்கு கீழே இருந்தால், உதவி தேவை (Need Help), 681 முதல் 730 வரையில் இருந்தால், அவ்ரேஜ் (Average), 731 முதல் 770 வரையில் இருந்தால், ஃபேர் (Fair) ஆக கணக்கில் எடுக்கப்படும்.

மேலும், 771 முதல் 790 வரையில் ஸ்கோர் இருந்தால் குட் (Good) மற்றும் 790 க்கு மேல் இருந்தால், எக்ஸ்லெண்ட் (Excellent) ஆக எடுத்து கொள்ளப்படும். இந்த மூன்று இலக்க ஸ்கோருக்கு ஏற்ப கடன் வழங்குதல் மற்றும் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். இதுபோக ஃபுல் ரிபோர்ட் பார்க்க முடியும். இதில் பேமெண்ட் ஹிஸ்டரி (Payment History), கிரெடிட் யூசேஜ் (Credit Usage) பார்க்கலாம்.

கிரெடிட் மிக்ஸ் (Credit Mix) இருக்கும். அதேபோல கிரெடிட் கார்டு மற்றும் லோன் விவரங்களையும் இதில் இருந்தே பார்த்து கொள்ளலாம். இந்த விவரங்களும் டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) வழியாக கொடுக்கப்படுகிறது. இதே விவரங்கள் பீம் ஆப்பிலும் இப்போது கிடைப்பதால், தனியார் யுபிஐ ஆப்களுக்கு நிகராக இந்திய அரசின் ஆப் வந்துவிட்டது.

Best Mobiles in India

English summary
Every UPI Bank Customers Should Know This Process Before Checking CIBIL Score How to Check BHIM App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X