உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

|

உங்கள் மொபைல் போனில் உள்ள செட்டிங்ஸில் (Settings) உங்களுக்கே தெரியாத பல அம்சங்கள் ஒளிந்து இருக்கின்றன.

அப்படியாக பலருக்கும் தெரியாத ஒரு "சீக்ரெட்" மோட்-ஐ பற்றித்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம். அதென்ன மோட்? அதனால் என்ன பயன்? அதை எங்கே கண்டுபிடிப்பது? எப்படி ஆக்டிவேட் / ஆன் செய்வது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஆபத்தில் உதவும் மோட்!

ஆபத்தில் உதவும் மோட்!

நாம் இங்கே பேசுவது - பேனிக் மோட் (Panic Mode) என்கிற ஒரு அம்சத்தை பற்றித்தான்! இது பெரும்பாலான சாம்சங் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.

இந்த பேனிக் மோட் அம்சமானது, உங்கள் ஸ்மார்ட்போனிலும் இருக்கும் பட்சத்தில், அதை உடனே கண்டறிந்து ஆன் (On) அல்லது ஆக்டிவேட் (Activate) செய்யவும்!

தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!

மொபைல் செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும்!

மொபைல் செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும்!

சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மொபைல் செட்டிங்ஸ்-ல் ஒளிந்து இருக்கும் இந்த பேனிக் மோட்-ஐ இயக்குவதால் உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் நபரை ஒரு சில நொடிகளில் தொடர்பு கொள்ள முடியும்.

அதாவது ஏதேனும் அவசரகாலம் ஏற்பட்டால், ஆபத்தான சூழ்நிலைக்குள் நீங்கள் தள்ளப்பட்டால், திடீரென்று மோசமான உடல்நல குறைபாடுகளை சந்தித்தால், சாலைகளில் விபத்தை சந்தித்தால்.. இந்த 'பேனிக் மோட்' உங்களுக்கான ஆபத்பாண்டவனாக உருமாறும்; உங்களுக்கு உதவும்!

பேனிக் மோட் அம்சத்தை ஆன் செய்வது எப்படி?

பேனிக் மோட் அம்சத்தை ஆன் செய்வது எப்படி?

- உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு (Settings) செல்லவும்.

- அட்வான்ஸ் (Advance) என்கிற விருப்பம் கிடைக்கும் வரை, கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்

- பின்னர் அதனுள் 'பேனிக் மோட்' (Panic Mode) என்கிற விருப்பத்தை தேடி கண்டுபிடிக்கவும்!

ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது சென்ட் எஸ்ஓஎஸ் மெசேஜஸ் (Send SOS messages) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

- பின்னர் சென்ட் எஸ்ஓஎஸ் மெசேஜஸ் என்கிற விருப்பத்தை எனேபிள் செய்யவும்

- அதன் பிறகு, தேவையான அனுமதிகளை வழங்கவும் மற்றும் அவசரகாலத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆப்களுக்கான அணுகலையும் வழங்கவும்.

- இறுதியாக, ஸ்டார்ட் பட்டனை (Start) அழுத்தி, அவசரகாலத்தில் யாருக்கு தகவல் சொல்ல வேண்டும் என்கிற எமெர்ஜென்சி காண்டாக்ட் நம்பர்களை (Emergency contacts) சேர்க்கவும்; அவ்வளவு தான்!

மூன்று முறை அழுத்தினால்!

மூன்று முறை அழுத்தினால்!

உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள 'பேனிக் மோட்' அம்சத்தை நீங்கள் ஆன் செய்த பின்னர், உங்கள் போனின் பவர் பட்டனை மூன்று முறை அழுத்தும் போதெல்லாம் உங்கள் ஸ்மார்ட்போன் 112-ஐ டயல் செய்யும்.

மேலும், எமர்ஜென்சி காண்டாக்ட் ஆக நீங்கள் சேமித்த நம்பருக்கு அழைப்பு விடுக்கப்படும் அல்லது மெசேஜ் அனுப்பப்படும்.

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

எமெர்ஜென்சி போட்டோவும் அனுப்பலாம்!

எமெர்ஜென்சி போட்டோவும் அனுப்பலாம்!

இந்த பேனிக் மோட் வழியாக, நீங்கள் எந்த வகையான அவசரநிலையில் இருக்கிறீர்கள் என்பதை அடுத்தவர்களுக்கு புரிய வைக்கும் ஒரு எஸ்ஓஎஸ் மெசேஜ் (அவரச ம்,மெசேஜ்) உடன் சேர்த்து, புகைப்படங்களை அனுப்பும் விருப்பமும் உள்ளது.

ஆகையால் - அடுத்தவர்களுக்கு - உங்கள் சூழ்நிலையை இன்னும் விளக்கமாக புரிய வைக்க முடியும்!

2017 முதல் இருக்கிறது.. ஆனால் பலருக்கும் தெரியாது!

2017 முதல் இருக்கிறது.. ஆனால் பலருக்கும் தெரியாது!

நினைவூட்டும் வண்ணம், இந்த 'பேனிக் மோட்' அம்சமானது - அனைத்து சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களிலும் - கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டு விட்டது.

ஆனாலும் கூட, பெரும்பாலான சாம்சங் போன் பயனர்களுக்கு இப்படி ஒரு அம்சம் இருப்பதே தெரியாது.

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்ல, இதே போன்ற எஸ்ஓஎஸ் அம்சம் வெவ்வேறு பெயர்களின் கீழ், கிட்டத்தட்ட அனைத்து மொபைல் போன்களிலும் கிடைக்கிறது!

Best Mobiles in India

English summary
Most Samsung users don't know this emergency contact feature in their phone settings

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X