Home
How to

பலருக்கும் தெரியாத Samsung சீக்ரெட் மோட்.. Settings-ல் ஒளிஞ்சுருக்கு.. ON மட்டும் பண்ணிட்டா.. பக்கா சேஃப்!

பட்ஜெட் முதல் பிரீமியம் வரை.. எல்லா வகையான விலைப்பிரிவுகளிலும் கொடிகட்டி பறக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் (Samsung), அதன் கேலக்ஸி போன்களுக்கு பல புதிய அம்சங்களை கொண்டுவரும் நோக்கத்தின் கீழ் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட புதிய ஒன்யுஐ 5 அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

இந்த லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டின் வழியாக லாக் ஸ்கிரீன் கஸ்டமைசேஷன், ஹாம் ஸ்க்ரீனில் விட்ஜெட்களை அடுக்கி வைத்தல், ஸ்லீப் மோட் உள்ளிட்ட பல அம்சங்கள் உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு வந்து சேரும் அல்லது ஏற்கனவே வந்து சேர்த்திருக்கும். இந்த பட்டியலில் மெயின்டனென்ஸ் மோட் (Maintenance Mode) என்கிற புதிய அம்சமும் அடக்கம்.

Samsung போன்களில் உள்ள Maintenance Mode-ஐ ஆன் செய்வது எப்படி ?

சாம்சங்கின் ஒன்யுஐ 5 அப்டேட் வழியாக சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு வந்துள்ள மெயின்டனென்ஸ் மோட் என்றால் என்ன? இதனால் உங்களுக்கும், உங்கள் கையில் இருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனிற்கும் என்ன பயன்? இதை செட்டிங்ஸ் வழியாக ஆன் / ஆஃப் செய்வது எப்படி? போன்ற விவரங்கள் இதோ:

மெயின்டனென்ஸ் மோட் என்றால் என்ன? நீங்கள் உங்களுடைய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனை பழுதுபார்ப்பதற்காக அனுப்பும் போதோ அல்லது வேறு யாரையாவது பயன்படுத்த அனுமதிக்கும் போதோ, அதில் உள்ள உங்களுடைய தகவல்கள் / புகைப்படங்கள் / வீடியோக்கள் பாதுகாப்பாக வைத்திருக்க அனுமதிக்கும் ஒரு மோட் தான் - இந்த மெயின்டனென்ஸ் மோட்!

முன்னரே குறிப்பிட்டபடி, இது லேட்டஸ்ட் ஒன் யுஐ 5.0 (ஆண்ட்ராய்டு 13) அப்டேட் வழியாக வருமொரு அம்சமாகும். எனவே குறிப்பிட்ட அப்டேட் உங்கள் கேலக்ஸி ஸ்மார்ட்போனிற்கு வந்து இருந்தால், அதை மிகவும் எளிமையாக ஆன் / எனேபிள் மற்றும் ஆஃப் - டிஸேபிள் செய்யலாம். அதெப்படி என்பது என்கிற எளிய வழிமுறைகள் இதோ:

உங்கள் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) மெனுவிற்கு செல்லவும். பின்னர் பேட்டரி அன்ட் டிவைஸ் கேர் (Battery and device care ) விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர், மெயின்டனென்ஸ் மோட் (Maintenance mode) என்கிற விருப்பதை ஆன் / எனேபிள் செய்யவும். இப்போது உங்கள் போன் ரிஸ்டார்ட் (Restart) செய்யப்படும்.

ஒருமுறை மெயின்டனென்ஸ் மோட் இயக்கப்பட்டால், இது வேறுபட்ட யூஸர் அக்கவுண்ட்-ஐ உருவாக்கும், அந்த அக்கவுண்ட்டின் கீழ் உங்கள் சாம்சங் போனில் உள்ள சில குறிப்பிட்ட டிவைஸ் செட்டிங்ஸ் அம்சங்களுக்கான அணுகல் மட்டுமே கிடைக்கும். மேலும் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ்ளுக்கான அணுகல் மட்டுமே கிடைக்கும்.

அதாவது மெயின்டனென்ஸ் மோட்-ன் கீழ் வேறொரு பயனரால் உங்கள் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோஸ், வீடியோஸ் மற்றும் பிற முக்கிய தரவுகளுக்கான அணுகலை பெறவே முடியாது என்று அர்த்தம். மேலும் இந்த மோட்-ஐ ஆப் செய்ததும் "எல்லாமே" பழைய நிலைக்கு திரும்பும்; இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ் உட்பட எல்லாமே டீபால்ட் மோட்-க்கு திரும்பும்.

நீங்கள் மெயின்டனென்ஸ் மோட்-ஐ ஆஃப் செய்யும் போதும் கூட உங்கள் ஸ்மார்ட்போன் ரீஸ்டார்ட் செய்யப்படும்; அதன் பின்னரே உங்கள் ஸ்மார்ட்போன் டீபால்ட் மோட்-க்கு திரும்பும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். சுவாரசியமாக மெயின்டனென்ஸ் மோட்-ஐ மற்றவர்களால் ஆஃப் / டிஸேபிள் செய்ய முடியாது.

ஏனென்றால் இந்த மோட் உங்களுடைய ஃபிங்கர் பிரிண்ட் அல்லது வேறொரு பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் கீழ் லாக் செய்யப்பட்டு இருக்கும். அதாவது மெயின்டனென்ஸ் மோட்-ஐ உங்களை தவிர வேறு யாராலும் ஆஃப் செய்ய முடியாது என்று அர்த்தம். இது மிகவும் சுவாரசியமான அம்சமாக இருக்கிறது அல்லவா? உடனே ட்ரை செய்து பாருங்கள்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Every Samsung Galaxy Phone Owners Need to Know About Secret Settings Called Maintenance Mode
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X