Home
How to

GST உடன் சேர்த்து ரூ.96 கட்டணம்.. PAN Card-ல் இந்த விவரம் சரியா இருக்கானு உடனே செக் பண்ணுங்க.. இல்லனா?

பான் கார்டு (PAN Card) ஆனது வங்கி, வரி தாக்கல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகளுக்கும் மிகவும் அவசியமான ஒரு ஆவணம் ஆகும். அதில் உள்ள ஒவ்வொரு விவரங்களும் முக்கியம். மிகவும் முக்கியமான பான் கார்டில் உள்ள உங்கள் வீட்டு முகவரி (Address).

ஒருவேளை நீங்கள் வேறு வீட்டிற்கு மாறி இருந்தால் அல்லது வேறு நகரங்களுக்கு மாறி இருந்தால், அனைத்து அரசு மற்றும் நிதி தொடர்புகளும் சரியான நேரத்தில் உங்களை வந்தடைவதை உறுதிசெய்ய உங்கள் பான் காட்ர்டில் உள்ள முகவரியை அப்டேட் (PAN Card Address Update) செய்வது மிகவும் முக்கியம்.

ரூ.96 கட்டணம்.. PAN கார்டில் இந்த விவரம் சரியா இருக்கா?

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஆதார் அடிப்படையிலான இகேஒய்சி (Aadhaar based eKYC) செயல்முறையை பயன்படுத்தி உங்கள் பான் கார்டு முகவரியை மிகவும் எளிமையாக அப்டேட் செய்ய முடியும். இன்னும் சொல்லப்போனால் வெறுமனே நான்கு ஸ்டெப் (4 Steps) இதை செய்து முடிக்கலாம்.

ஆதாரை பயன்படுத்தி பான் முகவரியை அப்டேட் செய்வது எப்படி? முதல் படி - என்எஸ்டிஎல் (NSDL) அல்லது புரோடீன் (Protean) போர்ட்டலை அணுகவும். இரண்டாவது படி - 'பான் தரவில் மாற்றம் அல்லது திருத்தம்' (Change or Correction in PAN Data) என்பதற்கு செல்லவும்

மூன்றாவது படி - ஆதார் அடிப்படையிலான இகேஒய்சி முகவரி புதுப்பிப்பு (Aadhaar-based eKYC address update) என்பதை தேர்ந்தெடுக்கவும். நான்காவது படி - ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி (OTP) மூலம் பான் கார்டு முகவரியை மாற்றும் செயல்முறைக்கு அங்கீகாரம் அளித்து, அதை முடிக்கவும்.

எந்த ஆவணங்களும் தேவை இல்லை: மேற்கண்ட செயல்முறையை முடிக்க எந்த ஆவணங்களும் (Documents) தேவையில்லை. முன்கூட்டியே ஆதார் பான் இணைப்பு (Aadhaar PAN Link) மற்றும் ஆதார் மொபைல் இணைப்பை (Aadhaar Mobile Number Link) செய்து இருந்தால். 15 இலக்க ஒப்புகை எண்ணுடன் ஒடிபி-ஐ பெறவும், அதை சமர்ப்பிக்கவும். புதுப்பிக்கப்பட்ட பான் கார்டு உங்களுக்கு புதிய முகவரிக்கே டெலிவரி செய்யப்படும்.

உங்கள் ஆதார் முகவரி புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்: பான் கார்ட்டில் உள்ள முகவரியை அப்டேட் செய்வதற்கு முன்பாக யுஐடிஏஐ (UIDAI - Unique Identification Authority of India) வலைத்தளம் அல்லது எம்ஆதார் ஆப் (mAadhaar App) வழியாக உங்கள் ஆதார் முகவரியை சரிபார்க்கவும். பான் சிக்கல்களை தவிர்க்க, தேவைப்பட்டால் முதலில் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை புதுப்பிக்கவும். இதில் துல்லியமான விவரங்கள் மிகவும் முக்கியம்.

பான் கார்ட்டில் முகவரியை புதுப்பிப்புக்கான செலவு (PAN Card Address Update Fee) மற்றும் அதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் எவ்வளவு? பான் கார்ட்டில் உள்ள முகவரியை அப்டேட் செய்ய ஜிஎஸ்டி உட்பட ரூ.96 செலவாகும். நெட் பேங்கிங் (NetBanking), யுபிஐ (UPI), கார்டு (Debit / Credit Card) அல்லது வாலட் (Wallet) மூலம் பணம் செலுத்தலாம். அப்டேட் செய்த பிறகு உடனடியாக இபான் (ePAN) பெறலாம். பிஸிக்கல் கார்டு வந்து சேர 10-15 நாட்கள் ஆகலாம்.

பான் கார்டு அப்டேட் மிகவும் அவசியம்: பான் என்பது உங்களுக்கான நிதி தொடர்பான முக்கிய அடையாளம் ஆகும். இன்றைய டிஜிட்டல் உலகில், உங்கள் அடையாள ஆவணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். அப்டேட் செய்யாத பட்சத்தில் - வரி விவரங்கள், அரசாங்க திட்டங்கள் மற்றும் நிதிகளை தடையின்றி அணுக ஆதார் இகேஒய்சி மூலம் பான் முகவரியை உடனே புதுப்பிக்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Every PAN Card Holders Must Update Thier Address How to Change Address in PAN using Aadhaar Card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X