புது Gas சிலிண்டர் ரூல்ஸ்.. இனி 2 கேஸ் கனெக்சன் கதை முடிந்தது.. இதை முதல்ல செஞ்சி முடிங்க.. இல்லனா சிரமம்!
இந்திய முழுவதும் ஏற்பட்டு வரும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் இந்திய அரசு புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இனிமேல் 2 கேஸ் கனெக்சன் வைத்திருக்க முடியாது. ஒரு வீட்டுக்கு ஒரு கனெக்சனை மட்டுமே தொடர்ந்து பெற முடியும். 2 கனெக்சன் வைத்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருந்தால், இதை செய்து முடியுங்கள்.
கேஸ் விநியோகத்தில் எல்பிஜி சிலிண்டர் மற்றும் பிஎன்ஜி (PNG) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பைப்டு நேச்சுரல் கேஸ் (Piped Natural Gas) என்று இரண்டு பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பைப்டு நேச்சுரல் கேஸ் என்பது குழாய் வழி கேஸ் கனெக்சனை குறிக்கிறது. இந்த இரண்டு கனெக்சனையும் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் பொருந்தும்.

ஆகவே, ஒரு வீட்டில் குழாய் வழி கேஸ் கனெக்சனையும் வைத்து கொண்டு, மானியத்துடன் கூடிய எல்ஜிபி சிலிண்டரையும் பெற்று வந்தால், ஏதாவது ஒரு கனெக்சனை இந்திய அரசே ரத்து செய்துவிடும். ஏனென்றால், எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஒரு வீட்டுக்கு ஒரு கனெக்சனை மட்டுமே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, எல்பிஜி முன்பதிவு இடைவெளி (LPG Booking interval) ஆனது நகர்ப்புறங்களில் 21 முதல் 25 நாட்கள் வரையிலும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரையிலும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஒரு வீட்டுக்கு ஒரு கேஸ் கனெக்சனையும் கொண்டுவந்துள்ளது. இப்படி 2 கனெக்சனை வைத்திருந்தால் ஜூன் 30ஆம் தேதி அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேதிக்குள் ஏதாவது ஒரு கனெக்சனை திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை ஒப்படைக்காமல் விட்டால், கேஸ் சிலிண்டரை பெற முடியாமல் போகலாம். அதேபோல குழாய் வழி கேஸ் கனெக்சனையும் அணுக முடியாமல் போகலாம். ஆகவே, குழாய் வழி இணைப்பு அல்லது எல்பிஜி சிலிண்டரை ஆன்லைனில் ஒப்படைப்பது எப்படி? என்பதற்கான விடைகள் இதோ.
படி 1: எல்பிஜி கேஸ் சிலிண்டர் கனெக்சனை ஒப்படைக்க இன்டேன், பாரத்கேஸ், ஹெச்பி கேஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ ஆப்கள் அல்லது இணையதளங்களுக்கு செல்லவும்.
படி 2: இப்போது, வாடிக்கையாளர்கள், தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, எல்பிஜி கேஸ் சிலிண்டர் கனெக்சனை திரும்ப ஒப்படைக்கலாம்.
பிஎன்ஜி கனெக்சனை திரும்ப ஒப்படைக்க, பிஎன்ஜி கனெக்சனை பெற்றுள்ள கஸ்டமர்கள் அரசு அங்கீகரித்த இணையதளம் வாயிலாக அதை செய்து கொள்ளலாம். மைபிஎன்ஜிடி 'MYPNGD' எனும் இந்த இணையதளம், நேஷனல் பிஎன்ஜி டிரைவ் 2.0 'National PNG Drive 2.0' என்பதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் பிஎன்ஜி கனெக்சனை திரும்ப ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதிலும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், ரிஜிஸ்டர் நம்பர் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் கனெக்சனை திரும்ப ஒப்படைக்க முடியும். இப்படி செய்வதன் வழியாக ஏதாவது ஒரு கனெக்சனை கஸ்டமர்களாகவே கொடுத்துவிடலாம். இல்லாமல்போனால், அரசே இரண்டையும் ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது. இப்படி ரத்து செய்வதற்கு முன்பாகவே ஒப்படைக்க வேண்டும்.
மேலும், பாரத் கேஸ் சிலிண்டர் புக்கிங்கை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வழியாக செய்யலாம். 77150 12345 அல்லது 77180 12345 ஆகிய எண்களில் ஐவிஆர்எஸ் வழியாக புக்கிங் செய்யலாம். 1800 224 344 எண்ணை பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்யலாம். இண்டேன் கேஸ் சிலிண்டரை கால்/எஸ்எம்எஸ் புக்கிங் செய்ய 77189 55555 எண்ணை பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்ய 75888 88824 எண்ணை பயன்படுத்தலாம் அல்லது 84549 55555 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும், 77189 55555 எண்ணை பயன்படுத்தி ஐவிஆர்எஸ் புக்கிங் செய்யலாம். எச்பி கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய 7718955555 எண்ணுக்கு கால் செய்யலாம். வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்ய 92222 01122 எண்ணை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications