Home
How to

இது தெரியாம போச்சே.. Google Pay, PhonePe-க்கான டெய்லி லிமிட் செட்டிங்ஸ்.. மாற்றினால் என்ன ஆகும்?

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்கள் வழியாக பணம் அனுப்ப "டெய்லி லிமிட்" இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அதே யுபிஐ சேவையின் கீழ் டெய்லி லிமிட் செட்டிங்ஸ் (Daily Limit Settings) இருக்கிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆம் அப்படி ஒன்று இருக்கிறது தான். இது யுபிஐ வழியாக நீங்கள் தினமும் எவ்வளவு பணத்தை செலவு செய்ய விரும்புகிறீர்கள் என்கிற "சொந்த லிமிட்டை" (Personal Limit) செட் செய்ய அனுமதிக்கும். இப்படி செய்வதன் மூலம் யுபிஐ வழியாக கண்டபடி"செய்யப்படும் செலவுகளை உங்களால் குறைக்க முடியும்.

Google Pay, PhonePe-க்கான டெய்லி லிமிட் செட்டிங்ஸ்!

பெரும்பாலான பயனர்களுக்கு, அனைத்து ஆப்களிலும் சேர்த்து நிலையான தினசரி யுபிஐ வரம்பு (Standard daily UPI limit) ரூ.1 லட்சம் ஆக உள்ளது. மேலும் பல ஆப்கள் ஒரு நாளைக்கு சுமார் 20 பரிவர்த்தனைகள் (20 transactions per day) என்கிற கணக்கில் உங்களை கட்டுப்படுத்துகின்றன.

இதுதவிர்த்து காப்பீட்டு பிரீமியங்கள், கல்வி கட்டணங்கள், அரசாங்க பேமண்ட்கள் மற்றும் முதலீடுகள் போன்ற குறிப்பிட்ட வகைகளுக்கு என்பிசிஐ (NPCI) ஆனது அதிக வரம்புகளை அனுமதிக்கிறது.இந்த வகைகள் வங்கியை பொறுத்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 லட்சம் அல்லது ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் வரை என்கிற லிமிட்டை கொண்டுள்ளது.

உங்களுக்கான டெய்லி லிமிட்-ஐ செட் செய்வது எப்படி? உங்களுடைய யுபிஐ அக்கவுண்ட் ஆனது எந்த வங்கி உடன் லிங்க் செய்யப்பட்டு இருக்கிறதோ அந்த வங்கியின் மொபைல் ஆப் அல்லது நெட்பேங்கிங்கை பயன்படுத்தி இதை செய்யலாம். சில வங்கிகள் தினசரி யுபிஐ வரம்பை கைமுறையாக குறைக்க னுமதிக்கின்றன.

பொதுவாக இது யுபிஐ செட்டிங்ஸ் (UPI Settings) அல்லது ஃபண்ட் டிரான்ஸ்பர் கண்ட்ரோல்ஸ் (Fund transfer controls) என்கிறவிருப்பத்தின் கீழ் அணுக கிடைக்கும். இதை எச்டிஎப்சி நெட்பேங்கிங் (HDFC Netbanking), ஐசிஐசிஐ ஐமொபைல் (ஈஸிஸி iMobile) மற்றும் எஸ்பிஐ யோனா (SBI YONO) ஆகிய வங்கிகள் / ஆப்கள் ஆதரிக்கின்றன

ஒருவேளை மேலே உலா பட்டியலில் உங்கள் வங்கி இல்லை என்றால். உங்கள் டெய்லி யுபிஐ லிமிட்டை குறைக்க சொல்லி வங்கியை கோருங்கள். யுபிஐ செட்டிங்ஸ் வழியாக உங்களுடைய வங்கி உங்களுக்கான சுய சேவை கட்டுப்பாடுகளை வழங்கவில்லை என்றால், நீங்கள் நேரடியாக உங்கள் வங்கியை அணுகி, யுபிஐ டெய்லி லிமிட்டை குறைவாக செட் செய்ய கோரலாம். பெரும்பாலான வங்கிகள் இதை விரைவாக செயல்படுத்துகின்றன.

எதுவுமே கைகொடுக்கவில்லை என்றால் யுபிஐ லைட் அல்லது வாலட் அடிப்படையிலான பேமண்ட் முறைகளுக்கு மாறவும். யுபிஐ லைட் ஆனது சிறிய கட்டணங்களுக்காக உருவாக்கப்பட்டது மற்றும் இயற்கையாகவே குறைந்த வரம்புகளை அமல்படுத்துகிறது: இது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1,000 என்கிற வரம்பையும், தினசரி ரூ. 10,000 என்கிற வரம்பையும், அதிகபட்ச வாலட் இருப்பு ரூ.5,000 என்கிற வரம்பையும் கொண்டுள்ளது.

தினசரி பரிவர்த்தனைகளுக்கு ஒரு வாலட்டை பயன்படுத்துவது மூலம் உங்கள் மெயின் பேங்க் பேலன்ஸை பாதுகாப்பாகவும் வைக்க முடியும், வீண் செலவுகளையும் குறைக்க முடியும். இதேபோல உங்கள் யுபிஐ ஆப்களை மிகவும் குறைவான பணம் உள்ள பேங்க் அக்கவுண்ட் உடன் லிங்க் செய்வதன் மூலமும் நீங்கள் வீண் செலவை குறைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Every Google Pay PhonePe UPI Users Need to Know This Settings How To Set Reduce Your UPI Daily Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X