Home
How to

Gas புக்கிங் புது ரூல்ஸ்.. புக்கிங் இன்டர்வல் மற்றும் சிலிண்டர் ரீஃபில் தகுதி.. இதை தெரிஞ்சுக்கோங்க முதல்ல!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் குறைபாடு காரணமாக நகர்ப்புறங்களில் எல்பிஜி முன்பதிவு இடைவெளி (LPG Booking interval) ஆனது 21 முதல் 25 நாட்கள் வரையிலும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரையிலும் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக பல நேரங்களில், பல நுகர்வோர்கள் தங்களின் அடுத்த எல்பிஜி முன்பதிவு தேதி குறித்த குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு வரையிலாக மனக்கணக்கிலேயே கேஸ் சிலிண்டர் புக் செய்தவர்கள் எல்லோரும், இப்போது சரியான நேரத்தில் ரீஃபில் சிலிண்டரை முன்பதிவு செய்வதில் குழப்பம் தாமதத்தை எதிர்கொள்கின்றனர்.இதை எங்கே சரிபார்ப்பது? அடுத்த தகுதியான முன்பதிவை எப்போது செய்ய வேண்டும்? அல்லது வரவிருக்கும் ரீபில் விவரங்களை கண்காணிப்பது எப்படி? என்கிற கேள்விகளுக்கான விடைகள் இதோ:

Gas புக்கிங் புது ரூல்ஸ்.. புக்கிங் இன்டர்வல், சிலிண்டர் ரீஃபில்!

இதை செய்ய உங்கள் உள்ளூர் எரிவாயு முகமைக்கு செல்ல வேண்டிய அவசியமிலாய் என்பதையும், எல்பிஜி பற்றிய பல்வேறு விவரங்களை ஆன்லைன் வழியாகவே அணுகலாம் என்பதை முன்கூட்டியே குறிப்பிட விரும்புகிறோம். நுகர்வோர் இப்போது, ​​தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது பிற ஆன்லைன் தளங்கள் வழியாக, தங்கள் முன்பதிவு நிலையை சரிபார்த்து, அடுத்த ரீஃபில்-க்கான தகுதியை தீர்மானிக்கலாம். இந்த செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விரிவான விளக்கம் பின்வருமாறு:

படி 1: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (இண்டேன்), பாரத் பெட்ரோலியம் (பாரத் கேஸ்) அல்லது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி கேஸ்) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ ஆப்கள் அல்லது இணையதளங்களை பார்வையிடவும்.
படி 2: பின்னர் "ரீஃபில் ஹிஸ்டரி" என்கிற பகுதியை சரிபார்க்கவும். அமர்உஜாலா அறிக்கையின் படி, நுகர்வோர் தத்தமது எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்களுக்கு "STATUS" என்று அனுப்புவதன் மூலமும் முன்பதிவு தொடர்பான விவரங்களை பெறலாம்.

இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையிலான இடைவெளி: தற்போதுள்ள விதிகளின்படி, இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும். இதை வழக்கமாக ஆப் அல்லது புக்கிங் ஹிஸ்டரி (Booking history) பகுதி மூலம் கண்காணிக்க முடியும்.

நுகர்வோர் தங்களின் முந்தைய எல்பிஜி முன்பதிவுகள் மற்றும் மறுநிரப்பு நிலையை எங்கே கண்காணிக்கலாம்? நுகர்வோர் தங்களின் எல்பிஜி ஐடியை (17 இலக்கங்களைக் கொண்டது) உள்ளிட்டு மைஎல்பிஜி.இன் (Mylpg.in) இணையதளம் மூலம் முன்பதிவு விவரங்களை சரிபார்க்கலாம். இதன் டாஷ்போர்டு பகுதி, ஒரு நுகர்வோர் கடைசியாக எப்போது எல்பிஜி முன்பதிவு செய்தார் என்பது பற்றிய தகவலையும், அடுத்த மறுநிரப்பு கிடைக்குமா மற்றும் அதன் நிலை என்ன என்பதையும் வழங்குகிறது.

நுகர்வோர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எரிவாயு நிறுவனத்தின் கட்டணமில்லா எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் இந்தத் தகவலை உடனடியாகப் பெறலாம். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பின்படி, தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக, டெலிவரி அங்கீகாரக் குறியீடு (DAC) அடிப்படையிலான விநியோகங்கள் சுமார் 95% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு டிஏசி (DAC) பெறப்படுகிறது.

எல்பிஜி முன்பதிவு செய்வதற்கான வாட்ஸ்அப் நம்பர்கள்: நுகர்வோர்கால் தங்களின் அடுத்த எல்பிஜி முன்பதிவு தேதியை அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்கள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் சரிபார்க்கலாம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (இண்டேன்): 7588888824 ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி கேஸ்): 92222 01122 பாரத் பெட்ரோலியம் (பாரத் கேஸ்): 1800224344

Best Mobiles in India

English summary
Every Gas Cylinder Customers Should Know This LPG Booking interval and How to Check Your Refill status
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X