ஒவ்வொரு முறையும் Google Pay, PhonePe, Paytm வழியாக பணம் அனுப்பும் போது கேஷ்பேக், ரிவார்ட் பெறுவது எப்படி?
உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் (UPI Apps) ஏதேனும் ஒன்று இருக்கிறதா.. ஆம் என்றால் ஒவ்வொரு முறையும் பேமண்ட் செய்யும் போது கேஷ்பேக், பாயிண்ட்ஸ் அல்லது ரிவார்ட்ஸ் பெற உதவும் "இந்த லிங்க்கிங் செயல்முறையை" பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
யுபிஐ ஈகோசிஸ்டமில் ரூபே கிரெடிட் கார்டுகளை (RuPay Credit Cards) ஒருங்கிணைத்ததன் மூலம், சம்பளம் வாங்குவோர்கள் மற்றும் அன்றாட பயனர்களாலும் கூட இன்ஸ்டன்ட் மொபைல் பேமண்ட் வசதியை அனுபவிக்க முடியும், அதே நேரத்தில் கேஷ்பேக், பாயிண்ட்ஸ் மற்றும் பிற நன்மைகளையும் பெறலாம்.

இதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது - உங்கள் கிரெடிட் கார்டை உங்களுடைய யுபிஐ ஆப்களுடன் இணைக்க வேண்டும் (லிங்க் செய்ய வேண்டும்). அதாவது ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனையிலும் வெகுமதிகளை (ரிவார்ட்) பெற, முதலில் உங்கள் ரூபே கிரெடிட் கார்டை கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களுடன் இணைக்க வேண்டும்.
தற்போது வரையிலாக, என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின்படி (National Payments Corporation of India) ரூபே கிரெடிட் கார்டுகள் மட்டுமே யுபிஐ உடனான இணைப்பிற்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒருமுறை இணைக்கப்பட்டவுடன், யுபிஐI-யில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி பணம் செலுத்துவதை போலவே இந்த கிரெடிட் கார்டையும் நீங்கள் பயன்படுத்தலாம். வழக்கம் போல நீங்கள் எளிதாக க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்
வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்தவும்: உங்கள் யுபிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும், பியர்-டு-பியர் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் பொருள் - கடைக்காரர்கள், சேவை வழங்குநர்கள், உணவகங்கள் அல்லது இ-காமர்ஸ் வணிகர்களுக்கு பணம் செலுத்த பயன்படுத்தலாம்.
ஆனால் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பணம் அனுப்ப முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இது தவறாக பயன்படுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது யுபிஐ தளங்களில் உங்கள் கிரெடிட் கார்டு பிளாக் செய்யப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும். மேலும் அனைத்து ரூபே கிரெடிட் கார்டுகளும் யுபிஐ-யில் சமமாக ரிவார்ட் அளிக்காது என்பதும் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்
சில கார்டுகள் கேஷ்பேக் வழங்கினாலும், மற்றவை ரிவார்ட் பாயிண்ட்களை வழங்குகின்றன அல்லது உணவு அல்லது மளிகை பொருட்கள் போன்ற சில வகைகளில் தள்ளுபடிகளை வழங்குகின்றன. மேலும் உங்கள் செலவு முறையுடன் ஒத்துப்போகும் கார்டை தேர்ந்தெடுப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, எச்டிஎப்சி, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ ஆகியவைகள் பரவலாக பயன்படுத்தப்படும் கார்டுகளின் ரூபே வெர்ஷன்களை வழங்குகின்றன.
யுபிஐ சேவையில் பயன்பாட்டின் அடிப்படையில் எது அதிக மதிப்பை வழங்குகிறது என்பதை பார்க்க இரண்டையும் ஒப்பிட்டு பார்பபது நல்லது. யுபிஐ சேவையானது செலவுகளை எளிதாக்கினாலும், நீங்கள் கிரெடிட்டில் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்து கொள்வதும் அவசியம். யுபிஐ உடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டு செலவுகளை கண்காணித்து, வட்டியைத் தவிர்க்க உங்கள் கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்.
எல்லாவற்றை விட முக்கியமாக அனைத்து ரிவார்ட் திட்டங்களும் - வரம்பு அல்லது செல்லுபடியாகும் காலத்துடன் வருகின்றன, எனவே உங்கள் கிரெடிட் கார்டு பயன்பாடு அல்லது வலைத்தளம் மூலம் அவற்றை கண்காணிப்பதும் இங்கே முக்கியம். பொறுப்பான பயன்பாடு அதிக கிரெடிட் ஸ்கோரை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அதிகபட்ச ரிவார்ட்களை பெறவும் உதவும்.


Click it and Unblock the Notifications








