Home
How to

ஆதார் கார்டு புது ரூல்ஸ்.. இனி எல்லாரும் இதை பண்ணுங்க போதும்.. UIDAI அதிரடி மாற்றம்.. எதை மாத்திட்டாங்க!

யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது, ஆதார் கார்டு வைத்து இருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. ரூ.75 செலவு வைக்கும் இந்த நடைமுறையில் ஆவண அப்டேட்டில் மாற்றங்கள் கொண்டுரவரப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்து இருப்பவர்கள் முகவரியை மாற்ற வேண்டுமானால், ஆதார் ஆப் வழியாகவே மாற்றி கொள்ளலாம். அதிலும் முகவரிக்கான எந்த ஆவணங்களும் தேவையில்லாமல், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நம்பரை மட்டுமே வைத்து மாற்றி கொள்ளலாம். இந்த செயல்முறையை செய்வது எப்படி என்பதற்கான படிநிலைகள் இதோ.

ஆதார் கார்டு புது ரூல்ஸ்.. இனி எல்லாரும் இதை பண்ணுங்க போதும்!

படி 1: ஆதார் ஆப்பை லாகின் செய்து கொள்ளுங்கள். 6 இலக்க பின் நம்பரை கொடுங்கள். முகப்பு பக்கத்தில் இருக்கும் சேவைகள் (Services) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

படி 2: மொபைல் நம்பர் அப்டேட் (Mobile Number Update), முகவரி அப்டேட் (Address Update) உள்ளிட்ட விருப்பங்கள் தோன்றும். இதில் முகவரி அப்டேட்டை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

படி 3: இப்போது, ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி காண்பிக்கப்படும். கீழே உங்களது முகவரியை அப்டேட் செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டு, 2 விருப்பங்கள் இருக்கும்.

முதல் விருப்பமானது, மை டாக்குமெண்ட்கள் (உங்களது ஆவணங்கள்) இருக்கும். இதில் முகவரியை மாற்றுவதற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், இரண்டாவது விருப்பம் அப்படியில்லை. குடும்ப உறுப்பினரின் ஆதார் கார்டை பயன்படுத்தி முகவரியை மாற்றி கொள்ளலாம். ஆகவே, இரண்டாவது விருப்பத்தை தேர்ந்தெடுங்கள்.

படி 4: குடும்ப உறுப்பினரின் ஆதார் விவரங்கள் மட்டுமே கேட்கப்படும். இதை கொடுத்துவிட்டு, கீழே இருக்கும். முகவரி அப்டேட்டை தொடரவும் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

படி 5: ஆதார் ஆப்பை லாகின் செய்யும்போது, முகவரியை மாற்ற விரும்பும் நபரின் மொபைல் நம்பரை கொடுத்து இருந்தால், ஓடிபி தேவைப்படாது. வேறு நம்பரை கொடுத்து இருந்தால், அந்த நம்பருக்கு 6 இலக்க ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.

படி 6: இந்த ஓடிபியை கொடுத்தால், குடும்ப உறுப்பினரின் ஆதார் நம்பர் மற்றும் உறவு முறை கேட்கப்படும். இதில் தந்தை, தாய், துணை உள்ளிட்ட விருப்பங்கள் இருக்கும். இதை கொடுத்துவிடுங்கள். அடுத்து, ஒப்புதல் கொடுங்கள்.

படி 7: இப்போது, குடும்ப உறுப்பினரின் பேஸ் ஆதன்டிகேஷன் கேட்கப்படும். ஆகவே, அதையும் செய்து முடியுங்கள். பிறகு ரூ.75 கட்டணத்தை செலுத்துவதற்கான பேமெண்ட் பக்கம் தோன்றும். இதில் டிஜிட்டல் பேமெண்ட்களான யுபிஐ, கார்டு, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட விருப்பங்கள் இருக்கும்.

படி 8: பேமெண்ட் செய்த பிறகு ஹெட் ஆப் தி பேமிலி மெம்பருக்கு தெரிவிக்கப்படும். இப்போது, முகவரி அப்டேட் செய்தற்கான ஒப்புதலை விவரங்களை (Download Acknowledgment) பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த விருப்பம் கீழே இருக்கும்.

படி 9: பதிவிறக்கம் செய்த பிறகு இதில் இருக்கும் எஸ்ஆர்என் (SRN) நம்பரை குறித்த வைத்து கொள்ளுங்கள். இப்போது, ஹெட் ஆப் தி பேமிலி மெம்பர் ஆதார் ஆப்பில் லாகின் செய்து, இந்த ஒப்புதலை கொடுக்க வேண்டும்.

படி 10: ஆதார் ஆப்பை லாகின் செய்து, சேவைகள் விருப்பத்துக்கு சென்று, பேமிலி மெம்பர் ரெக்கொஸ்ட் (Family Member Request) விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். இப்போது, எஸ்ஆர்என் நம்பர் கேட்கப்படும். முன்பு கிடைத்த எஸ்ஆர்என் நம்பரை இதில் கொடுங்கள். இதில் முழு விவரங்களும் காண்பிக்கப்படும்.

இந்த விவரங்களை சரிபார்த்துவிட்டது, அப்ரூவ் விருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதை செய்தால் போதும், செயல்முறை முடிந்துவிட்டது. ஆதார் கார்டில் முகவரி அப்டேட் செய்யப்பட்டுவிடும்.

Best Mobiles in India

English summary
Every Aadhaar Card Holders Should Know This Process How To Update Address Without Proof Document
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X