Home
How to

ஆதார் கார்டு இருக்கா? முதல்ல இதை செஞ்சி முடிங்க.. இல்லனா ரூ.75 கட்டணும்.. இந்திய அரசு அதிரடி.. எப்படி செய்வது?

பொதுமக்கள் தங்களின் ஆதார் (Aadhaar) விவரங்களில் உள்ள அடையாள சான்று (Proof of Identity) மற்றும் முகவரி சான்று (Proof of Address) ஆகிய ஆவணங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான காலக்கெடுவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

இதன்படி, ஜூன் 14 ஆம் தேதி 2027 ஆம் ஆண்டு வரையில் மைஆதார் (myAadhaar இணையதளம் வழியாக பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை முற்றிலும் இலவசமாக பதிவேற்றம் செய்து புதுப்பித்து கொள்ளலாம் என்று யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு இருக்கா? முதல்ல இதை செஞ்சி முடிங்க.. இல்ல ரூ.75 கட்டணம்!

இதற்கு முன்பு இதற்கான காலக்கெடு ஜூன் 15ஆம் தேதி 2026 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்தது. இப்போது, ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் பதிவேற்றும் சேவைக்கு ரூ.75 கட்டணமாக இருக்கிறது. ஆனால், இலவமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெயர், முகவரி, மொபைல் நம்பர் உள்ளிட்டவையை மாற்ற முடியாது.

எதற்கெல்லாம் கட்டணம் உண்டு?
பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தும் போது ஒரு முக்கிய விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆவண பதிவேற்றத்திற்கு ((Document Upload) மட்டுமே இலவசமாக இந்த சேவை கிடைக்கும். காலாவதியான பழைய ஆவணங்களுக்கு பதிலாகப் புதிய அடையாள மற்றும் முகவரி சான்று ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றி கொள்ளலாம்.

மற்ற புதுப்பிப்புகளுக்கு வழக்கம்போல கட்டணம் வசூலிக்கப்படும். ஆகவே, உங்களது பெயர் (Name), முகவரி மாற்றம் (Address Change), பிறந்த தேதி (Date of birth), மொபைல் எண் (Mobile Number) போன்ற பிற தனிப்பட்ட விவரங்களை நீங்கள் திருத்தம் செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ விரும்பினால், வழக்கம் போல அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் இலவசமாக ஆவணங்களை புதுப்பிப்பது எப்படி?
ஆதார் இணையதளத்தில் ஆவணங்களை எளிமையாக புதுப்பிக்கப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஆனால், முன்னதாகவே பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய அடையாள சான்று, முகவரி சான்று ஆகிய ஆவணங்களை பிடிஎப் ஃபைல்களாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். அப்போதுதான், எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும்.

படி 1: இணையதளத்திற்குச் செல்லவும்: முதலில் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.
படி 2: லாகின் செய்யவும்: Document Update என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐப் பயன்படுத்தி உள்ளே நுழையவும்.
படி 3: சரிபார்க்கவும்: பேஜ்ஜில் தோன்றும் தற்போதைய ஆதார் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.
படி 4: ஆவணங்களைப் பதிவேற்றவும்: அடையாள சான்று மற்றும் முகவரி சான்றுக்கான ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை (Documents) முறைப்படி பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும் (Submit).
படி 5: URN எண்ணை சேமிக்கவும்: பதிவேற்றம் முடிந்தவுடன், 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (Update Request Number - URN) எதிர்கால தேவைக்காக குறித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த இலவச ஆன்லைன் வசதி myAadhaar போர்டல் வழியாகச் செய்தால் மட்டுமே கிடைக்கும். நேரடியாகத் பொதுச் சேவை மையங்களுக்குச் (Aadhaar Centres) சென்று ஆவணங்களைப் புதுப்பித்தால், அதற்கான சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, ஆதார் சென்டர்களில் ரூ.75 கட்டணம் செலுத்தி பதிவேற்ற வேண்டி இருக்கும்.

பெயர், முகவரி, மொபைல் நம்பர், இமெயில் உள்ளிட்ட விவரங்களை மாற்ற வேண்டுமானால், ரூ.75 கட்டணம் செலுத்தி மாற்றி கொள்ளலாம். கைரேகை, போட்டோ, கருவிழி விவரங்களை அப்டேட் செய்ய ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும். ஆவண பதிவேற்றத்துக்கும் ரூ.75 கட்டணம் இருக்கிறது. இது மட்டும் இலவசமாக கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
Every Aadhaar Card Holders Should Know This Process How To Update Aadhaar Documents Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X