Aadhaar டிப்ஸ்.. வீட்டில் இருந்தபடியே உங்க ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி?
ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்து இருக்கும் அனைவருமே மிகவும் எதிர்பார்த்த ஒரு முக்கிய மாற்றம், நடைமுறைக்கு வந்துள்ளது. இது யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) வழியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்? சமீபத்தில் ஆதார் ஆப்பிற்கான புதிய வெர்ஷனை (New Aadhaar App) யுஐடிஏஐ வெளியிட்டு இருந்தது. தற்போது இது பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, ஆதார் மையத்திற்கு (Aadhaar enrolment centre) செல்லாமலேயே, தங்கள் மொபைல் போன் வழியாகவே நேரடியாக புதுப்பிக்க அனுமதிக்கிறது.

முன்னதாக உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற ஆதார் மையங்களுக்கு சென்று, வரிசையில் நின்று செய்ய வேண்டிய ஒரு செயல்முறையாக இருந்தது. ஆனால் இப்போது ஆதார் புதிய ஆப் வழியாக, வீட்டில் இருந்தபடிய உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக - ஒரு சில கிளிக்களில் இதை செய்யலாம்.
இப்போதைக்கு மொபைல் நம்பர்; விரைவில் பெயர், விலாசம், இமெயில் ஐடி: மொபைல் நம்பர் அப்டேட் (Mobile Number Update) என்கிற விருப்பம் இப்போது புதிய ஆதார் ஆப்பில் உள்ளது. இருப்பினும் பெயர் (Name), முகவரி (Address) அல்லது மின்னஞ்சல் முகவரியை (Email ID) மாற்றுவது போன்ற பிற மக்கள்தொகை புதுப்பிப்புகள் "விரைவில் வரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது
குறிப்பாக, பிறந்த தேதியை (Date of Birth - DoB) புதுப்பிப்பது இப்போது ஒரு விருப்பமாக கூட தோன்றவில்லை. மேலும் கைரேகை (Finger Print), கருவிழி ஸ்கேன் (Iris Scan) அல்லது புகைப்படம் (Photo) ஆகிய பயோமெட்ரிக் அப்டேட்களை செய்வது ஆஃப்லைனில் மட்டுமே இருக்கும்.
அதாவது மேற்குறிப்பிட்ட அப்டேட்ளை செய்ய நீங்கள் கட்டாயம் ஆதார் பதிவு மையத்திற்கு தான் செல்ல வேண்டும். எனவே இப்போதைக்கு, உங்கள் வீட்டிலிருந்த படியே, உங்கள் ஸ்மார்ட்போன் வழியாகவே நீங்கள் அப்டேட் செய்யக்கூடிய ஒரே ஆதார் விவரம் - மொபைல் நம்பர் மட்டுமே.
ஆதார் ஆப்பில் புதிய மொபைல் நம்பர் அப்டேட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை: உங்கள் ஸ்மார்ட்போனில், ஆண்ட்ராய்டு (Android) அல்லது ஐஓஎஸ் (iOS) அடிப்படையிலான புதிய ஆதார் ஆப் நிறுவப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் மொபைல் எண்ணை மாற்ற கோரும்போது, இந்த ஆப் உங்களுடைய புதிய மொபைல் நம்பருக்கு ஒடிபி (OTP - One Time Password) அனுப்பி, உங்கள் அடையாளத்தை சரிபார்க்க முக அங்கீகாரத்தை (Face authentication) கேட்கும்.
உங்களுடைய முக அங்கீகாரம் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் புதிய மொபைல் நம்பர் ஆனது ஆதார் பதிவுகளில் அப்டேட் செய்யப்படும். இதற்காக எந்த ஆவணங்களும் (Documents) அல்லது ஆதார் மைய வருகையும் தேவைப்படாது. இந்த புதிய வசதி அப்டேட் செய்வதன் மூலம் ஏற்படும் நேர விரயம் மற்றும் தொந்தரவை குறைக்கிறது
முக்கியமாக இது மூத்த குடிமக்கள், போக்குவரத்து பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்கள் ஆதார் மையங்களுக்கு செல்வதைத் தவிர்க்கிறது. காலப்போக்கில், இந்த புதிய ஆதார் ஆப்பில் - பெயர், முகவரி, மின்னஞ்சல் (மற்றும் ஒருவேளை பிறந்த தேதி) ஆகிய விவரங்களை அப்டேட் செய்வதற்கான விருப்பங்களும் சேர்க்கப்படும் போது, ஆதார் வைத்திருப்பவர்கள் வீட்டிலிருந்தே தங்கள் ஆதார் தரவுகள் மீது அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








