100% இலவசம்.. Aadhaar கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த இலவச சேவையை பற்றி தெரிஞ்சு வச்சுக்கணும்!
யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (Unique Identification Authority of India) வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள அட்டை ஆன ஆதார் அட்டை (Aadhaar Card), இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.
இது "வெறுமனே" ஒரு அடையாள சான்றாக மட்டுமல்லாமல், அரசாங்கத் திட்டங்கள், மானியங்கள் மற்றும் ரேஷன், வருமான வரி, பிஎப்உட்பட பல அதிகாரப்பூர்வ சேவைகளையும் அணுக அனுமதிக்கிறது. இரத்தின சுருக்கமாக "ஆதார் நம்பர் (Aadhaar Number) இல்லை என்றால் இங்கே எதுவுமே இல்லை" என்றே கூறலாம்.

அப்படிப்பட்ட ஆதார் அட்டையை இழப்பது அல்லது தொலைப்பது உண்மையிலேயே ஒரு பீதியான நிகழ்வாகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக உங்களுடைய ஆதார் நம்பர் என்னவென்றே உங்களுக்கு தெரியாது என்றால் - சொல்லவே வேண்டாம். நீங்கள் வசமாக சிக்கி கொண்டீர்கள் என்றே அர்த்தம். ஆனாலும் கவலை வேண்டாம்.
ஏனென்றால் - யுஐடிஏஐ இணையதளத்தில் ரிட்ரீவ் யுஐடி/இஐடி (Retrieve UID/EID) என்கிற விருப்பம் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் விவரங்களை ஆன்லைன் வழியாகவே மிகவும் எளிதாக மீட்டெடுக்கலாம். இதற்கான சரிபார்ப்புக்காக உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இருந்தா ல் மட்டுமே போதும்.
உங்களுடைய ஆதார் நம்பரை மீட்டெடுப்பது எப்படி?
1. யுஐடிஏஐ வலைத்தளத்தில் மேற்குறிப்பிட்ட ரிட்ரீவ் யுஐடி/இஐடி விருப்பத்தின் கீழ் உங்கள் ஆதார் எண் (UID) அல்லது பதிவு ஐடி (EID) என எதை மீட்டெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வுசெய்யவும்.
2. ரிஜிஸ்டர் செய்யப்பட்டபடியே உங்கள் முழு பெயரையும் (Registered Full Name) நிரப்பவும், ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் (Aadhaar Linked Mobile Number) அல்லது மின்னஞ்சல் முகவரி (Aadhaar Linked Email ID) மற்றும் கேப்ட்சாவை (Captcha) நிரப்பவும்.
3. உங்கள் மொபைலுக்கு ஒரு ஒடிபி (OTP) சரிபார்ப்பு அனுப்பப்படும்.
4. மொபைல் ஒடிபி அடிப்படையிலான அங்கீகாரத்திற்கு பிறகு, உங்கள் ஆதார் எண்/இஐடி ஆனது இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். இந்த சேவை முற்றிலும் இலவசமாக கிடைக்கும் சேவை (Free Service) ஆகும்.
ஒருவேளை உங்கள் மொபைல் நம்பர் ஆதார் உடன் இணைக்கப்படாதபோது என்ன செய்ய வேண்டும்? உங்கள் மொபைல் நம்பர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் விவரங்களை மீட்டெடுப்பதற்கான வழிகள் இன்னும் உள்ளன. நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்கு (Aadhaar Centre) செல்லலாம். அங்கே பிரிண்ட் ஆதார் (Print Aadhaar) சேவையை நீங்கள் கோரலாம், அங்கு அதிகாரிகள் உங்கள் ஆதார் நம்பரை மீட்டெடுக்க உதவுவார்கள்.
இல்லையெனில் நீங்கள் யுஐஏடிஐ ஹெல்ப்லைனை (UIDAI Helpline) அழைக்கலாம். உங்கள் ஆதார் எண்ணை மீட்டெடுப்பதில் உதவி பெற 1947 என்கிற எண்ணை டயல் செய்யவும். விரிவான வழிமுறைகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ யுஐஏடிஐ போர்டல் ஆன https://uidai.gov.in/ ஐ பார்க்க அறிவுறுத்துகிறோம்.
ஆதார் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்கள்: இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) ஆனது 2 முக்கிய ஆவணங்களை இணைப்பதற்கான காலக்கெடுவை நீடிப்பதை இதோடு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அந்த ஆவணங்கள் ஆதார் (Aadhaar) மற்றும் யுஏஎன் (UAN) ஆகும்.
டிசம்பர் 1, 2025 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பிறகும் இசிஆர் (ECR) தாக்கல் செய்வதற்கு யுஏஎன் (UAN) உடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதை நிறுத்துவதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








