புது கட்டண ரூல்ஸ்.. டிச.31-க்கு பிறகு கட்டணம்.. ஆதார் கார்டுக்கு வந்தது அதிரடி மாற்றம்.. உடனே இதை பண்ணுங்க!
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. வங்கி சேவைகள் முதல் அரசு மானியங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ள விவரங்களைச் சரியாகப் பராமரிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, ஆதார் அட்டையுடன் இமெயில் முகவரியை (Email ID) இணைத்திருப்பது, பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு ரீதியாகப் பல நன்மைகளைத் தரும்.
தற்போது ஆதார் பயனர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை ஆதார் தளத்தில் இமெயில் முகவரியைப் புதுப்பிக்க அல்லது மாற்ற குறிப்பிட்ட தொகையைச் சேவைக் கட்டணமாக வசூலித்து வந்த நிலையில், அந்த ரூ. 75 கட்டணத்தை தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது.

ஏன் இமெயில் அப்டேட் அவசியம்?
பலர் தங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மட்டும் இணைத்திருப்பார்கள். ஆனால், இமெயில் முகவரியை இணைப்பது உங்கள் ஆதார் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யும். ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடந்தாலோ அல்லது ஆதார் சார்ந்த முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டாலோ, உடனடியாக உங்களுக்கு இமெயில் மூலம் அறிவிப்புகள் வந்துவிடும். மேலும், டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பாகப் பெற இது பெரிதும் உதவும்.
இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?
இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நீங்கள் ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஸ்மார்ட்போனிலேயே எளிய முறையில் இதனைச் செய்து முடிக்கலாம்:
1. ஆப் பதிவிறக்கம்: முதலில், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து அதிகாரப்பூர்வமான ஆதார் (Aadhaar) செயலியைத் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
2. லாக்-இன்: செயலியைத் திறந்ததும், உங்கள் ஆதார் எண் மற்றும் முக அங்கீகார (Face Authentication) முறையைப் பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.
3. சேவைகள் பகுதி: முகப்புப் பக்கத்தில் உள்ள சர்வீசஸ் (Services) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இமெயில் தேர்வு: அங்கு மொபைல் எண் அப்டேட், முகவரி அப்டேட் மற்றும் ஈமெயில் சேர்த்தல்/அப்டேட்(Email Add/Update) எனப் பல விருப்பங்கள் இருக்கும். அதில் உங்கள் தேவைக்கேற்ப கிளிக் செய்யவும்.
5. விவரங்கள் உள்ளீடு: ஏற்கனவே இமெயில் இணைக்கப்பட்டிருந்தால் அது காண்பிக்கப்படும், இல்லையெனில் புதிய இமெயில் முகவரியை உள்ளிடலாம். அப்டேட் ஈமெயில் ஐடி என்பதை கிளிக் செய்து, சரியான இமெயில் முகவரியைக் குறிப்பிடவும்.
6. சரிபார்ப்பு (OTP): நீங்கள் கொடுத்த இமெயில் முகவரிக்கு ஒரு ஓடிபி (OTP) அனுப்பப்படும். அதைப் பெற்று, உரிய இடத்தில் பதிவு செய்யவும்.
7. முக அங்கீகாரம் (Face Authentication): இறுதியாக, உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா மூலம் முக அங்கீகாரத்தை முடிக்க வேண்டும்.
8. கட்டணமில்லா சேவை: அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், கட்டண விவரங்கள் கேட்கும் பக்கத்தில் ரூ.0 என்று காண்பிக்கப்படும். அதாவது, நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
இந்தச் செயல்முறை முடிந்த பிறகு, ஒரு உறுதிப்படுத்தல் செய்தி (SMS) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கும், மின்னஞ்சல் முகவரியிற்கும் அனுப்பப்படும். பொதுவாக, இந்த அப்டேட் நடைமுறை முடிவடைய அதிகபட்சம் 15 நாட்கள் வரை ஆகலாம், இருப்பினும் பலருக்கு ஒரு வாரத்திற்குள்ளேயே இமெயில் அப்டேட் செய்யப்பட்டுவிடுகிறது.
இந்த இலவசச் சலுகையைப் பெறுவதற்கு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, ஆதார் அட்டையில் இதுவரை இமெயில் முகவரியை இணைக்காதவர்கள் அல்லது மாற்ற விரும்பும் பயனர்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விரைவாகச் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications