ஆஹா! WhatsApp-ல் கூட இப்படி ஒரு 'கோல் மால்' அம்சம் கிடையாதே.. Telegram-க்கு படை எடுக்கும் மக்கள்!

|

டெலிகிராம் ஆப்பில் (Telegram App) அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு புதிய அம்சத்தை பற்றி சொன்னால், "ஆஹா.. வாட்ஸ்அப்பில் (WhatsApp) கூட இப்படி ஒரு "கோல் மால்" அம்சம் இல்லையே!" என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

ஏனென்றால், நீங்கள் மட்டும் மட்டுமல்ல குறிப்பிட்ட டெலிகிராம் அம்சத்தை பற்றி அறிந்த பலரும் அதையே தான் நினைக்கிறார்கள்!

அதென்ன அம்சம்? அந்த "கோல் மால்" அம்சம் என்று குறிப்பிடுவதற்கு என்ன காரணம்? அதை பயன்படுத்துவது எப்படி? இதோ விவரங்கள்:

எதுவுமே தேவை இல்லை.. எதுவுமே!

எதுவுமே தேவை இல்லை.. எதுவுமே!

வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய போட்டியாளராக கருதப்படும் டெலிகிராம் (Telegram), ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதை ஒரு "புதிய அம்சம்" என்று கூறுவதை விட அதை ஒரு "கோல் மால் ஆன அம்சம்" என்றே கூறலாம்.

ஏனென்றால், சிம் கார்டு (SIM Card) இல்லாமலேயே.. அதாவது ஒரு மொபைல் நம்பர் (Mobile Number) இல்லாமலேயே டெலிகிராம் ஆப்பில் ரிஜிஸ்டர் (Register) செய்து, அதை பயன்படுத்தும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

எங்க வந்து யாரு சீன் போடுறது? ஆன்டி-இந்தியன் வேலையை பார்த்த பாகிஸ்தான்.. செஞ்சி விட்ட இந்திய அரசு!எங்க வந்து யாரு சீன் போடுறது? ஆன்டி-இந்தியன் வேலையை பார்த்த பாகிஸ்தான்.. செஞ்சி விட்ட இந்திய அரசு!

இதை பார்த்தால் ப்ரைவஸி-க்காக வெளியான அம்சம் போல தெரியலயேப்பா!

இதை பார்த்தால் ப்ரைவஸி-க்காக வெளியான அம்சம் போல தெரியலயேப்பா!

ப்ரைவஸி (Privacy) தான் முக்கியம் என்று கூறும் டெலிகிராம் பயனர்களுக்காகத் தான் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று டெலிகிராம் நிறுவனம் கூறிகிறது.

ஆனாலும் கூட ஒரு சிம் கார்டு இல்லாமலேயே டெலிகிராம் ஆப்பை பயன்படுத்தலாம் என்கிற இந்த அம்சமானது, சில பல "கோல் மால்" வேலைகளை செய்ய நினைக்கும் பயனர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

இருந்தாலும் கூட, இந்த அம்சத்தை பயன்படுத்துவதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. அந்த சிக்கலை கடந்தால் மட்டுமே.. இன்னும் சொல்லப்போனால், அந்த சிக்கலை வைத்து தான் இந்த அம்சத்தையே உங்களால் பயன்படுத்த முடியும்!

அதென்ன சிக்கல்?

அதென்ன சிக்கல்?

டெலிகிராம் நிறுவனத்தின் ஒரு வலைப்பதிவின்படி (Blog Post), டெலிகிராம் ஆப்பின் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக சிம் கார்டு இல்லாமலேயே டெலிகிராம் அக்கவுண்டிற்கு ரிஜிஸ்டர் செய்ய உதவும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் - டெலிகிராமின் உரிமையாளரான பாவெல் துரோவ்வால் நிறுவப்பட்ட ஃபிராக்மென்ட் (Fragment) எனப்படும் பரவலாக்கப்பட்ட தளத்திலிருந்து (Decentralised platform) "பிளாக்செயின் அடிப்படையிலான அநாமதேய எண்ணை" (Blockchain-based Anonymous number) வாங்க வேண்டும்!

என்ன இப்படி ஆகிடுச்சு? Password-களை ஒழித்துக்கட்ட ஆரம்பித்த Google.. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?என்ன இப்படி ஆகிடுச்சு? Password-களை ஒழித்துக்கட்ட ஆரம்பித்த Google.. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

எவ்வளவு பணம் கொடுத்தால் Anonymous number கிடைக்கும்?

எவ்வளவு பணம் கொடுத்தால் Anonymous number கிடைக்கும்?

ஃபிராக்மென்ட் என்பது டெலிகிராம் ஆப் மற்றும் இன்டர்நெட் சேவைகளுடன் இணக்கமான யூசர்நேம்கள் (User Names) மற்றும் அநாமதேய எண்களை (Anonymous numbers) விற்பனை செய்யும் ஒரு தளமாகும்.

டெலிகிராம் ஆப்பை பயன்படுத்தும் பயனர்கள் ஒரு அநாமதேய எண்ணை வாங்க 16 அமெரிக்க டாலர்களை செலவழிக்க வேண்டி இருக்கும். அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.1325 செலவழிக்க வேண்டி இருக்கும்.

ஒரு அநாமதேய எண்ணை வாங்கியவுடன், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - அதுவொரு OTP சரிபார்ப்பு செயல்முறை ஆகும்!

சிம் கார்டு இல்லாமலேயே டெலிகிராம் ஆப்பில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

சிம் கார்டு இல்லாமலேயே டெலிகிராம் ஆப்பில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

- முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு (Android) அல்லது ஐஓஎஸ் (iOS) டிவைஸில் உள்ள டெலிகிராம் ஆப்பை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். அதை Google Play Store அல்லது Apple App Store வழியாக செய்யலாம்!

- பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டெலிகிராம் ஆப்பை திறக்கவும்.

- இப்போது கெட் ஸ்டார்ட்ட (Get Started) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.

- ஃபிராக்மென்ட்டிலிருந்து நீங்கள் வாங்கிய பிளாக்செயின் அடிப்படையிலான அநாமதேய எண்ணை (Anonymous number) உள்ளிடவும்.

- பின்னர், உங்களுடைய அநாமதேய எண்ணிற்கு ஒடிபி (OTP) ஒன்று அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து டெலிகிராம் ஆப்பில் ரிஜிஸ்டர் செய்யவும்.

அவ்வளவு தான்! ​​சிம் கார்டு இல்லாமலேயே டெலிகிராம் ஆப்பை பயன்படுத்த நீங்கள் தயாராக உள்ளீர்கள்!

Best Mobiles in India

English summary
Even WhatsApp Does Not Have This Feature Telegram Allows Users To Register Without SIM Card

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X