WhatsApp வழியாக EPFO சேவைகள்.. PF பேலன்ஸ் முதல் Claim ஸ்டேட்டஸ் வரை.. எப்படி செக் செய்வது?
இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது, பிஎப் மெம்பர்கள் உடனான தகவல் தொடர்பை மேம்படுத்துவதையும், வருங்கால வைப்பு நிதி தொடர்பான சேவைகளை எளிதாக அணுகுவதையும் நோக்கமாக கொண்டு, வாட்ஸ்அப் மூலம் சேவைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சேவையின் கீழ், இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை சரிபார்த்தல், கடைசி ஐந்து பரிவர்த்தனைகளை பார்த்தல், கோரிக்கை நிலையை கண்காணித்தல் மற்றும் தங்கள் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்த அப்டேட்களை பெறுதல் போன்றவைகளை வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பெற, இபிஎப்ஓ உடன் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த முன்னெடுப்பு பின்வரும் முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தும்: PMVBRY திட்டத்தின் கீழ் தகுதிபெற்ற உறுப்பினர்களில், யுஐடிஏஐ-யின் (UIDA) முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தை (FAT) பயன்படுத்தி ஆதார் அங்கீகாரத்தை முடிக்காதது அல்லது ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு நேரடிப் பணப் பரிமாற்றத்தை (DBT) செயல்படுத்தாதுது போன்ற நிலுவையில் உள்ள இடைவெளிகளை கொண்டவர்கள். அத்தகைய உறுப்பினர்களுக்கு, வாட்ஸ்அப்பிலேயே தீர்வு காண்பதற்கான பிரத்யேக ஆதரவு வழங்கப்படும்.
பிஎப் பேலன்ஸ்-ஐ பார்த்தல், கடைசி 5 பரிவர்த்தனைகள், கோரிக்கை நிலை போன்ற அத்தியாவசிய இபிஎப்ஓ சேவைகளை விரைவாகவும் தடையின்றியும் அணுகுவதற்கு வழிகாட்டப்பட்ட வசதிகள் தேவைப்படும் உறுப்பினர்களுக்கும் இது உதவும். இது எவ்வாறு செயல்படும் என்கிற எளிய வழிமுறைகள் பின்வருமாறு:
- முதலில் ஒரு பிஎப் உறுப்பினர், உதவி கோரி இபிஎப்ஓ-க்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜை அனுப்புவார், அல்லது நிலுவையில் உள்ள நடவடிக்கை குறித்து இபிஎப்ஓ ஆனது பிஎப் உறுப்பினருக்கு ஒரு மெசேஜை அனுப்பும் .
- யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பருடன் (UAN) இணைக்கப்பட்ட, குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அந்த மெசேஜ் வந்துள்ளதா என்பதை இபிஎப்ஓ சரிபார்க்கும். சரிபார்க்கப்பட்டால், உள்ளூர் மொழியில் எளிய மெனு விருப்பங்கள் உறுப்பினருக்கு காண்பிக்கப்படும்.
- உறுப்பினர், அந்த மெனு விருப்பங்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்வார். விவரங்களை சமர்ப்பிப்பார் அல்லது எளிய கேள்விகளுக்கான பதில்களை கிளிக் செய்வர்
- பின்னர் அந்த மெசேஜ் செயலாக்கப்பட்டு, ஏஐ-ஆல் இயக்கப்படும் சாட்பாட் மூலம் நேரடியாகவோ அல்லது இபிஎப்ஓ தரவுத்தளத்தில் தேடுவதன் மூலமாகவோ பதிலளிக்கும்.
- இதன்கீழ் நடக்கும் ஒவ்வொரு தொடர்பும் பகுப்பாய்வு செய்யப்படும், இது பிஎப் உறுப்பினரின் செயல்திறன் மற்றும் திருப்தி குறித்த ஒரு பார்வையை இபிஎப்ஓ-க்கு வழங்கும். மேலும், இந்த மொபைல்-சார்ந்த அணுகுமுறை, பிஎப் உறுப்பினர் சேவைகளை நெறிப்படுத்தவும், இபிஎப்ஓ-வின் நேரடி வருகைகளை சார்ந்திருப்பதை குறைக்கவும், வாடிக்கையாளர் சேவை மற்றும் அழைப்பு மைய செயல்பாடுகளின் மீதான அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
இதுவும் இபிஎப்ஓ 3.0-வின் கீழ் நடக்கும் பெரிய டிஜிட்டல் மேம்படுத்தல்களில் ஒன்றாக இருக்கலாம். இபிஎப்ஓ 3.0-வின் கீழ் விரைவில் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதியை (Provident fund - PF) திரும்ப பெற அனுமதிக்கப்பட உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வசதியானது, இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இபிஎப் சந்தாதாரர்களுக்கு, பிஎப் அணுகலை வேகமாகவும், எளிமையாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதோடு இபிஎப்ஓ 3.0 ஆனது க்ளைம் செட்டில்மென்ட்டை எளிமையாக்கவும், ஆவண பணிகளை குறைக்கவும், சந்தாதாரர்களுக்கான ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தையும் மேம்படுத்தவும் உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு பின்வருவனவற்றை அறிமுகப்படுத்த உள்ளது:
- ஏடிஎம் அடிப்படையிலான பிஎப் திரும்ப பெறுதல் (ATM-based PF withdrawal)
- யுபிஐ உடன் இணைக்கப்பட்ட பிஎப் பரிமாற்றம் மற்றும் திரும்ப பெறுதல் (UPI-linked PF transfer and withdrawal)
- அதிகரிக்கப்பட்ட ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்புகள் (Higher auto-settlement limits)
- எளிமையான திரும்ப பெறும் செயல்முறை (Simpler withdrawal process)
- பணியமர்த்தியவரின் ஒப்புதல்களை சார்ந்திருப்பதைக் குறைத்தல் (Reduced dependency on employer approvals)


Click it and Unblock the Notifications