Home
How to

PF வைத்திருப்பவர்களுக்கு 4 முக்கிய மாற்றம்.. வாட்ஸ்அப் வழியாக வந்த 3 ட்ரீட்.. பேலன்ஸ், பரிவர்த்தனை, பாஸ்புக்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான சேவைகளை எளிமையாக்கும் வகையில் ஈபிஎப்ஓ (EPFO) புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஊழியர்கள் தங்களுடைய பிஎப் (PF) கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை இனி வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும். இதற்காக இணைதளத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்த வசதியின் மூலம் ஈபிஎப் உறுப்பினர்கள் தங்களுடைய கணக்கில் இருக்கும் மொத்த இருப்பு தொகை, கடைசியாக நடைபெற்ற ஐந்து பரிவர்த்தனைகளின் விவரங்கள் மற்றும் பிஎப் பாஸ்புக் உள்ளிட்டவற்றை எளிதாக பெற முடியும். இதற்கு ஆதார் மற்றும் பிஎப் கணக்குடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், சேவையை பெற முடியாது.

PF வைத்திருப்பவர்களுக்கு 4 முக்கிய மாற்றம்.. வாட்ஸ்அப் வழியாக சேவை!

இதுவரை பிஎப் கணக்கு விவரங்களை பார்ப்பதற்கு ஈபிஎப்ஓ இணையதளம் அல்லது ஆப்களின் சேவைகளை மட்டுமே பயன்படுத்தி வந்த ஊழியர்களுக்கு இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரே ஒரு ஹாய் (Hi) மெசேஜ் அனுப்புவதன் மூலம் தேவையான கணக்கு விவரங்களை பெறுவதற்கான வசதியை ஈபிஎப்ஓ தற்போது வழங்கியுள்ளது.

வாட்ஸ்அப் சேவைக்கான அதிகாரப்பூர்வ எண்:

ஈபிஎப்ஓ அறிமுகம் செய்துள்ள புதிய வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துவதற்கு 8796441800 என்ற அதிகாரப்பூர்வ எண்ணை உங்களுடைய மொபைலில் முதலில் சேமிக்க வேண்டும். இந்த எண்ணின் மூலமாகவே பிஎப் கணக்கு தொடர்பான சேவைகளை அணுக முடியும். உறுப்பினர்கள் இந்த எண்ணை சரியாக டைப் செய்து சேமிப்பது அவசியமாகும்.

வாட்ஸ்அப்பில் பிஎப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி?

முதலில் உங்களுடைய மொபைலில் 8796441800 என்ற ஈபிஎப்ஓ எண்ணை சேமித்து கொள்ளுங்கள். பின்னர் வாட்ஸ்அப் செயலியை திறந்து சேமிக்கப்பட்ட எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதில் ஹாய் (Hi) என்று டைப் செய்து அனுப்பினால், ஈபிஎப்ஓ வழங்கும் சேவைகள் தொடர்பான பதில் கிடைக்கும். இதில் 4 ஆப்ஷன்கள் இருக்கின்றன.

மொத்த இருப்பு தொகை, கடைசியாக நடைபெற்ற ஐந்து பரிவர்த்தனைகளின் விவரங்கள், பிஎப் பாஸ்புக் மற்றும் மொழியை மாற்றுதல் ஆகியவை இதில் இருக்கின்றன. மொழியை மாற்றுதல் தவிர மற்ற அனைத்து ஆப்ஷன்களையும் பயன்படுத்த ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கட்டாயமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.

உங்களுடைய யுஏஎன் (UAN) கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பயன்படுத்தி சரிபார்ப்பு நடைமுறையை (Verification Process) நிறைவு செய்ய வேண்டும். இந்த சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான பிஎப் சேவையை தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.

பிஎப் பாஸ்புக் டவுன்லோடு செய்ய வேண்டுமா?

இந்த புதிய வாட்ஸ்அப் வசதியில் பிஎப் பாஸ்புக்கையும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும். இதற்காக சரிபார்ப்பு நடைமுறையை நிறைவு செய்த பிறகு பாஸ்புக் தொடர்பான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களுடைய பிஎப் கணக்கு விவரங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இந்த வசதியை பயன்படுத்துவதற்கு ஈபிஎப்ஓ அலுவலகத்திற்கு செல்லவோ அல்லது பல்வேறு இணையதளங்களில் தேடவோ வேண்டியதில்லை. ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் இருந்தாலே போதுமானது. குறிப்பாக, தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்தத் தெரியாத ஊழியர்களுக்கும் இந்த புதிய சேவை உதவியாக இருக்கும்.

எனவே, பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, கடைசியாக எப்போது பணம் வரவு வைக்கப்பட்டது, கணக்கில் நடைபெற்ற பரிவர்த்தனைகள் என்னென்ன போன்ற விவரங்களை அறிந்துகொள்ள விரும்பும் ஊழியர்கள் இந்த வசதியை பயன்படுத்திப் பார்க்கலாம். ஆதார் ஓடிபி அனுப்பி வைக்கப்படும்போது, அதில் EPFO என்று குறிப்பிடபட்டிருக்கும். இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
EPFO WhatsApp Service How To Check PF Balance Last 5 Transaction History Download Passbook
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X