PF மெம்பர்களுக்கான புது கட்டாய விதி.. Aadhaar கார்டு ரெடியா வைங்க.. EPFO அறிவிப்பு.. என்ன செய்ய வேண்டும்?
யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் (ATM) வழியாக பணம் எடுப்பது உள்ளிட்ட பல புதிய வசதிகளை மற்றும் மாற்றங்களை உள்ளடக்கிய இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்று அழைக்கப்படும் முக்கிய டிஜிட்டல் மேம்படுத்தல் - எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற நிலையில், பிஎப் மெம்பர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள ஒரு கட்டாய விதி இன்னும் கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதென்ன விதி? யுஏஎன் (UAN) என்கிற யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை (Universal Account Number) உருவாக்குவதற்கோ அல்லது ஆக்டிவேட் செய்வதற்கோ, ஒடிபி (OTP) மற்றும் கைரேகை சரிபார்ப்பிற்கு பதிலாக, உமாங் (UMANG) ஆப் வழியாக ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரம் (Aadhaar-based face authentication) இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஏன் முக்கியம்? இதை செய்வது எப்படி?

இது ஏன் முக்கியம்? இந்த முக அங்கீகார மேம்பாடு ஆனது, ஆதார் உடன் இணைக்கப்பட்ட காலாவதியான மொபைல் எண்கள் காரணமாக ஏற்படும் ஒடிபி டெலிவரி தோல்விகள் மற்றும் குறிப்பாக மூத்த குடிமக்களிடையே ஏற்படும் கைரேகை பொருத்தமின்மை போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது. எம்பிளாயரை சார்ந்திருக்கும் நிலையை நீக்கி, உடனடி யுஏஎன் செயல்பாட்டை சாத்தியமாக்குவதன் மூலம், இது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பயனருக்கு எளிதான அனுபவத்தையும் வழங்குகிறது.
உண்மையான அக்கவுண்ட் ஹோல்டர்கள் மட்டுமே யுஏஏன்-களை செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம் இந்த அமைப்பு, பிஎப் மெம்பர்களுக்கும் மற்றும் அவர்களுடைய பணத்திற்கும் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது, இதனால் மோசடி அபாயம் குறைகிறது. சுவாரசியமாக பிஎப் மெம்பர்கள் வீட்டிலிருந்தே இந்த செயல்முறையை தாங்களாகவே செய்து முடிக்கலாம். இதன்கீழ் ஆதார் உடன் இணைக்கப்பட்ட முக ஸ்கேன்கள் மூலம் அவர்களின் அடையாளம் சரிபார்க்கப்படும்.
ஆதார் முக அங்கீகார (Face Authentication) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்கள் யுஏஎன்-ஐ உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவது எப்படி? முதல் படி: தேவையான ஆப்களை பதிவிறக்க வேண்டும்:
1. உமாங் ஆப்: கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலிருந்து உமாங் (UMANG) ஆப்பை பதிவிறக்கவும்.
2. ஆதார்ஃபேஸ்ஆர்டி (AadhaarFaceRD) ஆப்: முக அங்கீகார வசதியை செயல்படுத்த ஆதார்ஃபேஸ்ஆர்டி ஆப்பை பதிவிறக்கவும்.
இரண்டாவது படி: உமாங் ஆப்பை திறக்கவும். மேற்குறிப்பிட்ட இரண்டு ஆப்களையும் இன்ஸ்டால் செய்த பிறகு, உமாங் ஆப்பை திறக்கவும். யுஏஎன் சேவைகள் (UAN services section) பிரிவின் கீழ் உள்ள "UAN Allotment and Activation" (யுஏஎன் ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தல்) பகுதிக்கு செல்லவும்.
மூன்றாவது படி: ஆதார் விவரங்களை உள்ளிடவும் உங்கள் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும். ஒடிபி-ஐ அனுப்ப, நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் ஆதார் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் சரிபார்க்கப்படும். ஒப்புதல் மற்றும் ஒடிபி சரிபார்ப்பு. செயல்முறைக்கு உங்கள் ஒப்புதலை வழங்க, அதற்கான கட்டத்தில் (checkbox) டிக் செய்யவும். ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த ஒடிபி-ஐ உள்ளிடவும்.
நான்காவது படி: முக அங்கீகாரம் (Face Authentication): முக அங்கீகாரத்திற்கான நேரடி புகைப்படத்தை (live photo) எடுக்க உங்கள் டிவைஸின் கேமரா செயல்படுத்தப்படும். உங்கள் புகைப்படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டதும், வண்ணக் கோடு (outline) ஆனது சிவப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறும்.
ஐந்தாவது படி: யுஏஎன் உருவாக்கம். உங்கள் முகம் ஆதார் தரவுத்தளத்துடன் பொருந்தியதும், உங்கள் யுஏஎன் உருவாக்கப்படும். யுஏஎன் எண் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். யுஏஎன் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட பிறகு, உமாங் ஆப் அல்லது இபிஎப்ஓ உறுப்பினர் இணையதளத்திலிருந்து (Member Portal) யுஏஎன் அட்டையை பதிவிறக்கலாம். பிஎப் பணம் எடுத்தல், பாஸ்புக் பார்த்தல், கேஒய்சி விவரங்களை புதுப்பித்தல் போன்ற இபிஎப்ஓ சேவைகளை பயன்படுத்த தொடங்கும் வகையில், உறுப்பினர் இணையதளத்தில் யுஏஎன் தானாகவே செயல்படுத்தப்படும்.
ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கான யுஏஎன்-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? ஏற்கனவே யுஏஎன் எண் இருந்தும் அதை இன்னும் செயல்படுத்தாத உறுப்பினர்களுக்கு, இந்த செயல்முறை இன்னும் எளிமையானது. உமாங் ஆப் மூலம் முக அங்கீகாரத்தை பயன்படுத்தி உங்கள் யுஏஎன்-ஐ செயல்படுத்த, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதே படிகளை பின்பற்றவும்.
நீங்கள் ஏற்கனவே யுஏஎன்-ஐ ஏற்கனவே ஆக்டிவேட் செய்து இருந்தாலும், முக அங்கீகார செயல்முறையை நிறைவு செய்து உங்கள் விவரங்களை சரிபார்ப்பது நல்லது. இது உங்கள் தகவல்கள் அனைத்தும் சரியாக சரிபார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications