Home
How to

உங்கள் PF கணக்கில் இன்னும் வட்டி வரலையா? கவலை வேண்டாம்.. பணம் எப்போது வரும்னு தெரிஞ்சுக்கோங்க!

ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO), 2025-26 நிதியாண்டிற்கான வட்டித் தொகையை விரைவில் உறுப்பினர்களின் PF கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்க உள்ளது. இந்த ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.25% என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கோடிக்கணக்கான ஊழியர்களின் சேமிப்புத் தொகை மேலும் உயரவுள்ளது.

இதுவரை வட்டி வரவு வைப்பதற்கான ஒரு குறிப்பிட்ட தேதியை EPFO அமைப்பு இன்று அறிவிக்கவில்லை. குறிப்பாக அரசாங்க விதிமுறைகளின்படி, இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு தான் கணக்குகளுக்கு வட்டி செலுத்தப்படும்.

உங்கள் PF கணக்கில் இன்னும் வட்டி வரலையா? கவலை வேண்டாம்..

கடந்த ஆண்டுகளில் EPF வட்டித் தொகை உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் செயல்முறை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்கள் வரை நீடித்த நிலையில், சமீப காலங்களில் அது கணிசமாக வேகமடைந்துள்ளது. குறிப்பாக 2025-ஆம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலேயே ஏராளமான உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 2025-26 நிதியாண்டிற்கான வட்டித் தொகையும் 2026-ஆம் ஆண்டின் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக வட்டி வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், அந்த காலத்திற்கான முழு வட்டியும் கணக்கிடப்பட்டு வழங்கப்படுவதால், ஊழியர்களுக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படாது.

EPFO அனைத்து உறுப்பினர்களின் கணக்குகளுக்கும் ஒரே நேரத்தில் வட்டித் தொகையை வரவு வைப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வட்டி வரவு செயல்முறை கட்டங்களாக நடைபெறுவதால், சில உறுப்பினர்களின் கணக்குகளில் முதலில் வட்டி சேர்க்கப்படலாம். எனவே, மற்றொருவரின் PF கணக்கில் வட்டி ஏற்கனவே வரவு வைக்கப்பட்டிருந்தாலும், உங்கள் கணக்கில் அது இன்னும் பிரதிபலிக்கவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. அனைத்து கணக்குகளிலும் வட்டி வரவு வைக்கும் முழு செயல்முறை நிறைவடைய சில நாட்கள் அல்லது சில வாரங்கள் கூட ஆகக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வட்டி பெறப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்ப்பது எப்படி?
1.முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இந்து உமாங் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

2.அடுத்து உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்திப் பதிவு செய்யவும்.

3.அதன்பின்பு செயலியின் விருப்பங்களுக்குச் சென்று EPFO-ஐத் தேர்ந்தெடுத்து, பின்னர் 'View Passbook' என்பதைக் கிளிக் செய்யவும்

4.இப்போது உங்கள் UAN எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்களுக்கு ஒரு OTP அனுப்பப்படும், அதன் மூலம் நீங்கள் உள்நுழையலாம்.

5.அதைத்தொடர்ந்து உங்கள் பாஸ்புக் மற்றும் பிஎஃப் இருப்பு ஆகியவை செயலியின் திரையில் தெரியும்.

உங்கள் PF கணக்கில் இன்னும் வட்டி வரலையா? கவலை வேண்டாம்..

அதேபோல் EPFO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைவதன் மூலமும் நீங்கள் இருப்பைச் சரிபார்க்கலாம். குறிப்பாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு, உறுப்பினர் பாஸ்புக்(Member Passbook) என்பதைக் கிளிக் செய்யவும், அதன் பிறகு இருப்புத் தொகை திரையில் தெரியும். இதுதவிர பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFO சேவைகளுக்கு மிஸ்டு கால் அல்லது SMS அனுப்புவதன் மூலம் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்.

மேலும் பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் எடுக்கும் வசதியை விரைவில் கொண்டுவர உள்ளது ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பு. குறிப்பாக இந்த வசதி பல்வேறு பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
EPFO Interest Still Missing From Your PF Account? Know the Reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X